வெறி பிடித்ததைபோல் ஹிமாலயன் 450 பைக்கில் ஆஃப்-ரோடை ஒரு கை பார்த்த சிஎஸ் சந்தோஷ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சூப்பரான அட்வென்சர் (ஆஃப்-ரோடர்) பைக் மாடல்களில் ராயல் என்பீல்டு ஹிமாலயன்-ம் ஒன்று. இந்த பைக் மாடலின் அதிக பவர்ஃபுல்லான வெர்ஷனாக ஹிமாலயன் 450 உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக் வெகு விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே விற்பனைக்கு வராத இந்த பைக்கை மிக தீவிரமான ஆஃப்-ரோடு பயணத்திற்கு பிரபல பைக் ரேஸர் சிஎஸ் சந்தோஷ் உட்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின்கீழ் வெகு விரைவில் ஒரு சில புதுமுக இருசக்கர வாகனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய தலைமுறை புல்லட் 350, கிளாசிக் 650 மற்றும் ஷாட்கன் 650 ஆகியவையே அவை ஆகும். இவற்றுடன் ஹிமாலயன் 450 வெர்ஷனும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இது மிகவும் அட்டகாசமான மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப தயாராகிக் கொண்டிருக்கின்றது என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே இப்போது சிஎஸ் சந்தோஷை வைத்து தயாரிப்பு நிறுவனம் மிக மோசமான ஆஃப்-ரோடு பயணத்திற்கு உட்படுத்தி இருக்கின்றது.
சிஎஸ் சந்தோஷ், இந்தியாவின் தலைசிறந்த ரேஸர்களில் ஒருவர் ஆவார். ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்வதிலும் இவர் கைதேர்ந்தவராக இருக்கின்றார். எந்தெந்த சாலையை எப்படி கையாள வேண்டும் என்கிற அனைத்து நுணுக்கங்களையும் கற்று தேர்ந்தவராகவும் இவர் உள்ளார். இதன் காரணத்தினாலேயே ஹிமாலயன் 450-இன் ஆஃப் ரோடு திறனை அவரை ராயல் என்பீல்டு சோதித்து பார்த்திருக்கின்றது.

இப்போது வெளியாகி இருப்பது ஹிமாலயன் 450 பைக்கை சோதித்து பார்க்கக் கூடிய வீடியோ மட்டுமல்ல, அது ஓர் விளம்பர பதிவும்கூட. இந்திய இருசக்கர வாகன பிரியர்களின் கவனத்த ஈர்க்கும் பொருட்டே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, ஆஃப்-ரோடு பயண பிரியர்கள் மற்றும் அட்வென்சர் டூரர் பைக் காதலர்களையும் கவரும் விதமாக வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும், இதுபோன்று சிஎஸ் சந்தோஷ் ராயல் என்பீல்டின் விற்பனைக்கு வர விருக்கும் எதிர்கால பைக்குகளை இதுபோன்று முரட்டு தனமாக சோதனை செய்வது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக 2016ஆம் ஆண்டில் ஹிமாலயன் 411 பைக்கை அவர் ஆஃப்-ரோடிங் செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அவர் அந்த பைக்கை விரட்டிய விரட்டில் கால் வைக்கும் இடமே உடைந்து விழுந்தது. ஆனால், இப்போதைய சோதனையில் அந்த மாதிரியான சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. எனவே முழுக்க முழுக்க புதிய ஹிமாலயன் 450 பைக்கை ஆஃப்-ரோடுக்கு உகந்த மிக உறுதியான வாகனமாக ராயல் என்பீல்டு வடிவமைத்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.
ஹிமாலயன் 450 இப்போதும் ஓர் சோதனை மாடலாகவே இருக்கின்றது. பெங்களூருவில் வைத்தே பைக்கின் ஆஃப்-ரோடு பயணம் வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்டு இருக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் ஹிமாலயனைப் போல் இல்லாமல் தனித்துவமான பாடி பேனல்கள் மற்றும் புதிய கட்டமைப்பில் புதிய ஹிமாலயன் 450 உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

அடுத்தடுத்து வரும் நாட்களில் இன்னும் இந்தியாவின் கரடு-முரடான சாலைகளுக்கு ஏற்ப அது மேம்படுத்த இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே இப்போதைய சோதனை ஓட்டம் செய்யப்பட்டு இருக்கின்றது. அடுத்து வரும் நாட்களிலும் இதுமாதிரியான கடுமையான பலபரீட்சைகளை அது சந்திக்க இருக்கின்றது. ஹிமாலயன் 450 உடன் சேர்த்து ஸ்க்ரம் 450-யும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
சேஸிஸ் மற்றும் எஞ்ஜின் ஆகிய இரு விஷயத்திலும் இந்த இரு பைக்குகளும் ஒரே மாதிரியானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், ஸ்டைல் மற்றும் பிற விஷயங்களிலும் இரண்டும் மாறுபட்டேக் காட்சியளிக்கும். இந்த ஆண்டின் இறுதிக்குள் ஹிமாலயன் 450 பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், இதுகுறித்து ராயல் என்பீல்டு நிறுவனம் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் அதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் அண்மையில் புக்கிங் தொடங்கப்பட்ட டிரையம்ப்-பஜாஜ் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கும் 400சிசி பைக் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎஸ் சந்தோஷ் ஹிமாலயன் 450 பைக்கை ஓட்டியதைப் பார்த்த பின்னர் "அந்த பைக் உயிர் பிழைத்திருக்குமா" என்றே கேட்கத் தோன்றுகின்றது. அந்த அளவிற்கு மிகவும் முரட்டுத் தனமாக அப்பைக் சோதனையோட்டம் செய்யப்பட்டு இருக்கின்றது. இருப்பினும், ஹிமாலயன் 450 அடுத்த டெஸ்டிற்கு தயாராக இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications









