இந்த 5தான் இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள்! எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா காரையே தூக்கி போடுவீங்க

இந்தியர்கள் பெரும்பாலானோர் அதிகம் மைலேஜை விரும்பக் கூடியவர்களாக இருக்கின்றனர். இதனால்தான் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் வாகனங்களில் மைலேஜிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கார் உற்பத்தி நிறுவனங்கள்கூட தங்களின் காரை அதிகம் மைலேஜை தரும் வகையில் தயாரிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

அந்த அளவிற்கு மைலேஜிற்கு இந்தியர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டே இந்த பதிவில் நாங்கள் இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் தரும் 125 சிசி ஸ்கூட்டர்களின் லிஸ்டை இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

Affordable scooters with 50 kmpl mileage

யமஹா ரே இசட்ஆர் 125 எஃப்ஐ (Yamaha Ray ZR 125 Fi): இந்தியர்கள் பலரின் பிரியமான ஸ்கூட்டர் மாடலாக ரே இசட்ஆர் 125 இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் அதிக பவரை வெளியேற்றும் என்பதற்காகவும், நல்ல மைலேஜை வழங்கும் திறனைக் கொண்டிருப்பதாலேயே இளைஞர்கள் பலரின் தேர்வில் முதன்மை இடத்தில் இருக்கின்றது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இந்த ஸ்கூட்டர் 71.33 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் என அராய் சான்றளித்து இருக்கின்றது. ஆனால், நிஜ வாழ்க்கையில் 40 கிலோ மீட்டர் தொடங்கி 50 கிலோ மீட்டர் வரை மைலேஜ் பெற்றுக் கொள்ள முடியும்.

இதன் கவர்ச்சியான மற்றும் ஸ்போர்ட்டி தோற்றத்திற்கு ஏற்ப 125 சிசி ஏர் கூல்டு எஞ்ஜினே ரே இசட்ஆர் 125இல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 8.2 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் விலை ரூ. 84,730 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

யமஹா ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ (Yamaha Fascino 125 Fi): யமஹா நிறுவனத்தின் மற்றுமொரு அதிகம் மைலேஜ் தரும் ஸ்கூட்டராக ஃபஸ்ஸினோ இருக்கின்றது. ரே இசட்ஆர் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே மோட்டாரே இந்த ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஒரு லிட்டருக்கு 68.75கிமீ வரை மைலேஜ் தரும். இந்த ஸ்கூட்டர்களின் அதிக ரேஞ்ஜ் திறனுக்கு இவற்றில் வழங்கப்பட்டு இருக்கும் ஃப்யூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பமே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்125 (Hero Maestro Edge125): இந்தியாவின் அதிகம் மைலேஜ் ஸ்கூட்டர் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இது ஒரு லிட்டருக்கு 65கிமீ வரையில் மைலேஜ் தரும். இந்த ஸ்கூட்டரில் 124.6சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 9பிஎச்பி மற்றும் 10.4என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் விலை ரூ.86ஆயிரம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிவிஎஸ் ஜுபிடர் (TVS Jubiter): இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஸ்கூட்டரில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இதன் விலை ரூ. 79,806 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த ஸ்கூட்டரில் 125 சிசி ஏர் கூல்டு மோட்டாரையே டிவிஎஸ் பயன்படுத்தி இருக்கின்றது. அதிகம் பிரீமியம் வசதிகள் நிறைந்த ஸ்கூட்டர் இதுவாகும்.

டிவிஎஸ் என்டார்க்125 (TVS Ntorq 125): டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பிரபலமான தயாரிப்பாக இது இருக்கின்றது. இதுவே இந்தியாவின் அதிக திறனை வெளியேற்றும் 125 சிசி ஸ்கூட்டரும் ஆகும். இதில் ஒரு லிட்டர் பெட்ரோலை நிரப்பினால் 50 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் விலை ரூ. 84, 636 மட்டுமே ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தவையே இந்தியாவின் பெஸ்ட் 125சிசி பிரிவின் அதிகம் மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் ஆகும். இதேபோல், ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டரும் 50கிமீ முதல் 60கிமீ வரை ஒரு லிட்டருக்கு மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை அனைத்தின் விலையும் மலிவானதே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று அதிகம் மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற காரணத்தினால்தான் மின்சார வாகனங்களின் விற்பனை இன்னும் மிகபெரிய அளவில் சூடுபிடிக்காமல் இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 7, 2023, 9:09 [IST]
English summary
India s best 125 cc scooters with best mileage
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+