எலெக்ட்ரிக் வண்டிகளை போல உங்க சொத்தை எல்லாம் எழுதி வைக்க சொல்லாது.. டாப் ஐந்து மலிவு விலை பெட்ரோல் டூ-வீலர்கள்

எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் லாபம் தரக் கூடியவைதான். ஆனால், என்ன நமக்கு பிடித்தமான நிறுவனங்களின் எலெக்ட்ரிக் டூ-வீலரை வாங்க வேண்டும் எனில் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கும் மேலாகவே முதல் வைக்க வேண்டி இருக்கின்றது. அரசும் அதன் சார்பில் வழங்கி வந்த மானியத் தொகையைக் குறைத்துவிட்டது.

முன்னதாக ஒரு kWh-க்கு 15 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வந்தநிலையில், தற்போது அது ஒரு kWh-க்கு 10 ஆயிரம் ரூபாயாக குறைத்திருக்கின்றது. இதனால் ஒரு சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலை சற்று காஸ்ட்லியானதாக மாறி இருக்கின்றது. ஆகையால், ஒரு சிலர் இப்போது பெட்ரோல் டூ-வீலர்களை மீண்டும் தேட தொடங்கி இருக்கின்றனர்.

Affordable petrol scooters

மேலும், பட்ஜெட் விலையில் ஏதாச்சும் பெட்ரோல் டூ-வீலர் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்குதா? என்றும் கேள்வி எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர். இத்தகையோருக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 மலிவு விலை பெட்ரோல் ஸ்கூட்டர்களின் பட்டியலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் (TVS Scooty Pep): நம்முடைய மலிவு விலை பெட்ரோல் ஸ்கூட்டர்கள் பட்டியலில் முதல் இடத்தை இந்த டூ-வீலரே பிடித்திருக்கின்றது. காரணம் இதன் ஆரம்ப விலையே ரூ. 65,514 மட்டுமே ஆகும். இதன் உச்சபட்ச விலையோ ரூ. 68,414 ஆகும்.

Tvs scooty pep

இந்த அளவிற்கு மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவின் மலிவு விலை ஸ்கூட்டராக டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் காட்சியளிக்கின்றது. இதில் 87.8 சிசி திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், ஒரு லிட்டருக்கு 50 கிமீ முதல் 60 கிமீ வரையில் இதனால் மைலேஜ் தர முடியும்.

5.4 எச்பி தொடங்கி 6.5 என்எம் டார்க் வரை அது திறன் வெளியேற்றும். இல்லத்தரசிகளின் பயன்பாடு மற்றும் மாணவர்கள் கல்லூரி சென்று வர என அனைத்திற்கும் ஏதுவான டூ-வீலரே இது ஆகும். இதை கையாள்வதும் மிக மிக சுலபம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Hero xoom

ஹீரோ ஸூம் (Hero Xoom): இது ஓர் 110.9சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர் மாடல் ஆகும். ஹீரோவின் பிளஷ்ஷர் பிளஸ்ஸிலும் இதே எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஹீரோ ஸூம் ஸ்கூட்டரின் விலை ரூ.70,184 ஆகும். இது ஆரம்ப நிலை வேரிண்டின் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும்.

அதேவேளையில், இதன் உயர் நிலை தேர்வோ ரூ. 78,517க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் உயர்நிலை தேர்வில் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், கார்னரிங் லைட்டுகள் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல் போன்ற அம்சங்களும் ஸூமில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

Hero destini prime

ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் (Hero Pleasure+): நம்முடைய பட்டியலில் மூன்றாவது மலிவு விலை ஸ்கூட்டர் மாடலாக பிளஷ்ஷர் பிளஸ் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் ரூ. 70 ஆயிரம் தொடங்கி ரூ. 82 ஆயிரம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது ஓர் 110 சிசி ஸ்கூட்டர் ஆகும். குறிப்பாக, இதன் எக்ஸ்டெக் வேரியண்ட் சிறப்பம்சங்களை மிக மிக அதிகளவில் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

ஹோண்டா டியோ (Honda Dio): நான்காவது இடத்தில் உள்ள மலிவு விலை ஸ்கூட்டர் மாடலாக டியோ இருக்கின்றது. காலேஜ் பசங்களுக்கு குறிப்பாக, புள்ளிங்கோக்களுக்கு மிகவும் பிடித்தமான டூ-வீலராக டியோக் காட்சியளிக்கின்றது. ஆக்டிவாவில் உள்ள அனைத்து சிறப்பு வசதிகளிலும் இதில் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விலை ரூ. 70,211தொடங்கி ரூ. 77,712 வரையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹீரோ டெஸ்டினி பிரைம் (Hero Destini Prime): ஹீரோ மிக சமீபத்திலேயே இந்த தன்னுடைய டெஸ்டினி 125 மாடலில் இந்த பிரைம் தேர்வை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதுவே இந்தியாவின் மலிவு விலை 125சிசி ஸ்கூட்டர் ஆகும். ஆனால், இதில் சிறப்பு வசதிகளை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், இருக்கைக்கு அடியில் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், லைட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுவே நம்முடைய பட்டியலின் குறைந்த விலை பெட்ரோல் ஸ்கூட்டராகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிஸ்டில் விடுபட்ட மலிவு விலை ஸ்கூட்டர்கள் இன்னும் சில இருக்கின்ரன. அதேநேரத்தில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1எக்ஸ் எனும் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அறிமுகமாக ரூ. 80 ஆயிரம் மட்டுமே விலையை நிர்ணயித்துள்ளது. விரைவில் இதன் விலையில் ரூ. 10 ஆயிரம் அது உயர்த்த இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 20, 2023, 10:15 [IST]
English summary
India s top 5 most affordable petrol scooters list is here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X