இந்தியாவுல இந்த பைக்குகள வாங்கதான் கூட்டம் அலைமோதுது.. நாட்டின் டாப் 5 டிரெண்டிங் பைக்குகளின் லிஸ்ட்!
இந்தியாவின் டாப் 5 டிரெண்டிங் பைக்குகளின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இந்த லிஸ்டில் எந்தெந்த நிறுவனத்தின் இருசக்கர வாகன மாடல்கள் உள்ளன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
நம்மில் பலர் டிரெண்டிற்கு ஏற்றாற் நகர்ந்து செல்லவே விரும்புவார்கள். அதாவது, எந்த பொருள் அதிகம் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றதோ அதை தாமும் வாங்க நினைப்பார்கள். எந்த ஒரு பொருள் அதிக டிமாண்டைப் பெறுகின்றதோ, அது அதிக தரமிக்க பொருளாக இருக்கும். அப்படி இருந்தால் மட்டுமே இந்தியர்கள் அதற்கான சந்தையை பாரிய அளவில் ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.

அந்த வகையில், தற்போது இந்தியாவில் குறிப்பிட்ட ஐந்து இருசக்கர வாகன மாடல்களுக்கு டிமாண்ட் ஏகபோகமாக உள்ளது. அந்த இருசக்கர வாகனங்கள் எது?, குறிப்பாக எந்த நிறுவனத்தின் தயாரிப்பு?, அதன் சிறப்புகள் என்ன?, இதுமாதிரியான சில முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். டாப் ஐந்து பைக்குகளின் லிஸ்டையே பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டிவிஎஸ் ரைடர்:
டிவிஎஸ் ரைடர் மலிவு விலையில் கிடைக்கும் மிக சூப்பரான ஸ்போர்ட்ஸ் தோற்றத்திலான பைக்காக டிவிஎஸ் ரைடர் காட்சியளிக்கின்றது. விலை, தோற்றம், செயல்திறன் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகிய அனைத்திலும் இந்த பைக் மிகவும் ஒர்த்தானதாகக் காட்சியளிக்கின்றது. விரைவில் அப்பாச்சியின் இடத்தை இந்த பைக் பிடித்துவிடும் என கூறும் அளவிற்கு நல்ல வரவேற்பை இது பெற்று வருகின்றது. இது ஓர் 125 சிசி பைக் மாடல் ஆகும்.
பஜாஜ் பல்சர்:
பல்சர் இருசக்கர வாகன மாடலுக்கு நீண்ட காலமாகவே இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியர்களின் ஃபேவரிட் பைக் மாடல் என கூறும் அளவிற்கு அவற்றிற்கு வரவேற்பு மிக சிறப்பாக கிடைத்து வருகின்றது. செலவு செய்யப்படும் தொகைக்கு ஏற்றதாகவும், அதிக தரம்மிக்கதாகவும் இருப்பதாலேயே இந்தியர்களின் பேராதரவு பஜாஜ் பல்சருக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இதன் பராமரிப்பு செலவும் மிக மிக குறைவாக இருக்கின்றது.
அதிக ஸ்போர்ட்டியான தோற்றம், தோற்றத்திற்கு ஏற்ப ஸ்போர்ட்ஸ் பைக்குகளைபோல் சூப்பர் திறனை வெளிப்படுத்தும் மோட்டார் என எக்கசக்க அம்சங்கள் பல்சர் மோட்டார்சைக்கிளில் பெற்றுக் கொள்ள முடியும். இதன் காரணத்தினாலும் பல தசாப்தங்களாக பல்சர் இந்தியர்களின் பிரியமான பைக் மாடலாக இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி பல்சரின் புதிய மாடல்களான என்160 மற்றும் பி150 க்கு நல்ல கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த இரண்டும் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட வாகனமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிவிஎஸ் அப்பாச்சி:
இந்திய சாலைகளில் அதிகம் காட்சியளிக்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக அப்பாச்சி மோட்டார்சைக்கிள் இருக்கின்றது. தன் துடிப்பான ஸ்டைலால் இந்திய இளைஞர்களை தன் வசம் சுண்டி இழுத்துக் கொண்டிருக்கின்றது அப்பாச்சு என்று கூறலாம். மிக சிறந்த ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான திறன், நவீன வசதிகள் என அனைத்தின் வாயிலாகவும் இந்த பைக் மக்களை கவர்ந்த வாகனமாக இருக்கின்றது. அப்பாச்சி 160 4வி மற்றும் 200 4வி ஆகியவையே இப்போதைய டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்டார் மாடல்களாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக அப்டேட்டுகளைப் பெற்றவாறு சந்தையில் இவை விற்பனையில் இருந்து வருகின்றன.

யமஹா எஃப்இசட்:
யமஹா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக எஃப் இசட் பைக் மாடல்கள் இருக்கின்றன. இதுவும் பல ஆண்டு காலமாக சந்தையில் விற்பனையில் இருக்கும் டூ-வீலர் ஆகும். மேலும், இப்போதும் அது டிரெண்டிங்கில் இருக்கின்றது. நல்ல திறனை வெளியேற்றும் மோட்டார், அதேவேளையில், மிக சிறந்த எரிபொருள் சிக்கனம் என அனைத்திற்கும் பெயர்போன தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான சூப்பரான திறன்களைக் கொண்டிருக்கின்றன காரணத்தினால்தான் இந்த பைக்கையும் நம்மால் அதிகளவில் காண முடிகின்றது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம்:
மிகவும் கவர்ச்சியான பைக் என இதனை கூறலாம். கடந்த காலங்களில் ஹீரோ நிறுவனம் கரிஷ்மா எனும் சூப்பரான அழகிய டூ-வீலர் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருந்தது. இதனை ரீ-பிளேஸ் செய்யும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட பைக்கே எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஆகும். இலகு ரக எடை கொண்ட நேக்கட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக் மாடல் இது ஆகும். மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை இந்த பைக்கில் பெற முடியும். மேலும், மைலேஜும் மிக சூப்பராக கிடைக்கும். விலையும் குறைவு ஆகையால்தான் இந்தியர்களிடத்தில் இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications









