புல்லட் பைக்கை இவ்வளவு கம்மி செலவுல எலெக்ட்ரிக் பைக்கா மாத்தலாமா? அதுவும் ஃபுல் சார்ஜ்ல 90 கி.மீ ரேஞ்ச் தருதே!
இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்காக பெங்களூருவைச் சேர்ந்த ரிக்கார்டோ என்பவர் தனது புல்லட்டீர் கஸ்டம்ஸ் குழு மூலம் இந்த பைக்கை உருவாக்கியுள்ளார். அவருடன் கலந்துரையாடவும், இந்த பைக்கை அவர் எப்படி தயாரித்தார் என்பதை அறிந்து கொள்ளவும் டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
1984ம் உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஸ்டாண்டர்டு பைக்கில் தான் இவர்கள் இந்த எலெக்ட்ரிக் ராயல் என்ஃபீல்டு பைக்கை உருவாக்கியுள்ளனர். இந்த பைக்கை ரிக்கார்டோ தனது தந்தையிடமிருந்து பெற்றுள்ளார். இந்த பைக்கை வீணாக்க விரும்பாமல் இவர் இதில் மார்டன் தொழிற்நுட்பங்களை புகுத்தி புதிய கண்ணை கவரும் எலெக்ட்ரிக் பைக்காக உருவாக்கியுள்ளார்.

இந்த பைக்கின் சேஸிஸ் முதல் மோட்டார் வரை மாற்றியமைத்து புல்லட்டீர் நிறுவனம் அதிகமான வேலைப்பாடுகளை பார்த்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் புல்லட் பைக்கில் 5 கிலோ வாட் திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாருக்கு பவர் கொடுக்க 70 வோல்ட் டிசி பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பைக் 90 கி.மீ வரை ரேஞ்ச் தரும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த பைக்கை ஓட்டி பார்க்கும் அனுபவமும் எங்களுக்கு கிடைத்தது. இதை ஓட்டி பார்க்கும் போது இதற்காக அவர்கள் செய்த கடின உழைப்பும், இதன் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையும் தெரிகிறது. இந்த பைக்கை ஓட்டி பார்க்கும் போது எங்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. இந்த பைக் 65-75 கி.மீ வேகத்தில் சாதாரணமாக சென்றது. அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை சென்றது.

இதை ஓட்டி பார்க்கும் போது சிறப்பாக இருந்தது. எந்த வித சிரமும் இல்லாமல் பயணித்தோம். குறைவான தூரம் தான் நாங்கள் ஒட்டி பார்த்தோம் என்றாலும் இது ஒரு நல்ல ஃபீலாக இருந்தாது. சாலையில் இதை ஓட்டு செல்லும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரும்பி பார்க்கும் வகையில் இருந்தது.
இந்த பைக்கை முதலில் பார்க்கும் போது இதன் கலர் காம்ஃபினேஷன் தான் நமக்கு தெரிகிறது. கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிளாஸியான லுக் உடன் நியோ-ரெட்ரோ பாபர் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு சீட் தான் பெஆரத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் ஃபூட் பெக் வைக்கப்ப்டடுள்ளதால் செமி ரிலாக்ஸ்டு பொசிஷனில் உருவாக்கியுள்ளனர். செமி ஸ்போர்ட்டி செட்டப் உடன் கஃபே ஸ்டைல் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் டேங்க் பகுதியில் "Gasoline" என்ற எழுத்து சிவப்பு கலரில் பொறிக்கப்பட்டுள்ளது. இது இந்த பைக்கிற்கு ஒரு ரெட்ரோ லுக்கிற்கான ஒரு நகைச்சுவை அம்சத்திற்காக எழுதப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் பைக்கிற்கு பெட்ரோல் தேவையில்லை இருந்தாலும் இவர்கள் இதை ஒரு விதமான ஈர்ப்பிற்காக எழுதியுள்ளனர்.
இப்படியாக ஒரு பைக்கை உருவாக்க எவ்வளவு செலவாகியிருக்கும் என்ற கேள்ளவி பலருக்கும் வரும். இந்த பைக்கை ரன்னிங் கண்டிஷனிற்கு கொண்டு வர வெறும் ரூ2.5 லட்சம் தான் செலவு செய்துள்ளனர். அதுவும் ஒரே வாரத்தில் இந்த பைக்கை உருவாக்கியுள்ளனர். இதை முழுமையாக தயார் செய்ய ரூ3 லட்சம் செலவாகியுளு்ளது. இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் இந்த குழு இதை சாத்தியமாக்கியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முதல் ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக் புல்லடீர் கஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஒரு கலை வடிவம் என்றே சொல்ல வேண்டும். டிசைன் முதல் பவர்டெரைன் வரை எல்லாமே கவனமாக பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை பார்க்கும் போது மார்டன் ரெட்ரோ டிசைன் உடன் மற்ற வாகனங்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் மக்களை ஈர்க்கும் விதமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









