தமிழ்நாட்டு கம்பெனி இப்படி ஒரு பைக்கை வெளியிட்டாங்களா? வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் ஆச்சரியமா பாக்குறாங்க!

கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சிறுவர்களுக்கான ரேஸ் பைக்கை தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஆட்டம் ஜிபி1 என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுவர்களுக்கான ரேஸ் பைக் ரேஸ் டிராக்கில் மட்டும் ஓட்ட தகுதியானது. இந்த பைக் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

கோயம்புத்தூரை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம் சிஆர்ஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ் இந்நிறுவனம் சிறுவர்களுக்கான ரேஸ் பைக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்நிறுவனம் சிறுவர்களுக்கான முதல் ரேஸ் பைக்கின் புரோட்டோ டைப்பை தயார் செய்தது.அப்பொழுதே இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

atom gp1

அதன்பின்னர் இந்த புரோட்டோ டைப் பைக் 2 ஆண்டுகளாக பல்வேறு ரேஸ் டிராக்குகளில் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள காரி மோட்டார்வேஸ், சென்னையில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக். ஹைதராபாத்தில் உள்ள ஷிகேன் சர்க்யூட், அரபு அமீரகத்தில் உள்ள காரி டவுன், மேக்கோ கார்டோப்பியா ஆகிய ரேஸ் டிராக்குகளில் டெஸ்ட் செய்யப்பட்டது.

இந்த ஆட்டம் ஜிபி 1 சிறுவர்களுக்கான ரேஸ் பைக் பொறுத்தவரை 159.3 சிசி சிங்கிள் சிலிண்டர், 2 வால்வு இன்ஜினை கொண்டது. இந்த இன்ஜின் 15 பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 13.85 என்எம் டார்க் திறனை 7000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. கிட்டத்தட்ட ஒரு பெரிய பைக்கின் இன்ஜின் திறனை் இதில் இருக்கிறது.

இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் கஷ்டம் பில்டு பிரேம் இருக்கிறது. இதில் யுஎஸ்டி ஃபோக் முன்பக்க சஸ்பென்ஷனாகவும், மோமோ ஷாக் பின்பக்க சஸ்பென்ஷன் ஆகவும் வழங்கப்பட்டுள்ளது.ஒரு பெரிய பைக்கில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கு

இந்த பைக்கின் பிரேக்கை பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் பீட்டல் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இதன் வீலைப் பொறுத்தவரை 12 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரில் உள்ள வீல் தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிசைன் இத்தாலிய மோட்டார் சைக்கிளில் வி4 ரக பைக்குகளை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பாடி முழுவதும் பைபர் கிளாஸ்களால் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்ரேஸ் எக்ஸாஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டம் ஜிபி1 மோட்டார் பைக்கை பொறுத்தவரை குழந்தைகளுக்கான பயிற்சி மற்றும் ரேஸிங் தொடர்பான போட்டிகளுக்காக பயன்படுத்த முடியும். இந்த பைக்குகளை குழந்தைகள் ரோட்டில் ஓட்ட அனுமதி கிடையாது. சிறுவயதில் பைக் ரேஸில் விருப்பமுள்ள குழந்தைகள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.

இந்த குழந்தைகளுக்கான ஆட்டம் ஜிபி 1 பைக்கை சிஆர்ஏ மோட்டார் சைக்கிள் நிறுவனம் கோயம்புத்தூரில் வைத்து தயாரிக்கிறது. இந்நிறுவனம் ஆண்டுக்கு 250 பைக்குகள் வரை தயாரிக்கும் அளவு திறனை கொண்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக இந்நிறுவனம் இந்த பைக்கை தயாரிக்கும் முழு முயற்சி எடுத்து தற்போது இதற்கான உதிரி பாகங்கள், சப்ளையர் உள்ளிட்ட அனைத்தையும் உறுதி செய்து பைக்கை விற்பனைக்கு கொண்டு வருகிறது.

இந்த ஆட்டம் ஜிபி1 சிறுவர்களுக்கான ரேஸ் பைக்கின் விலையை பொருத்தவரை ரூ2.75 லட்சம் மற்றும் ஜிஎஸ்டி என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்குக்கு ஆன்ரோடு விலை என தனியாக எதுவும் கிடையாது அதேநேரம் இதற்கு இன்சூரன்ஸ், ஆர்டிஓ பதிவு போன்ற எந்த விஷயமும் கிடையாது. இது ரேஸ் டிராக்கில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பைக் ரேஸ் மீது தற்போது இளைஞர்களுக்கு மோகம் அதிகரித்து வரும் நிலையில் சிஆர்ஏ மோட்டார் சைக்கிள் நிறுவனம் சற்று வித்தியாசமாக சிந்தித்து சிறுவர்களுக்கான ரேஸ் பைக் தயாரித்துள்ளது. தற்போது சிறுவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கிறது. சிறுவர்களை பைக் ரேஸில் ஊக்கப்படுத்தினால் எதிர்காலத்தில் இந்தியாவா பைக் ரேஸிற்கான மிக முக்கியமான தளமாக மாறும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 19, 2023, 18:51 [IST]
English summary
Indias first kids race bike the atom gp1 launched at rs 2 75 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+