கணவன் மனைவியாக உலகை சுற்றும் பைக் ரைடர்கள்! இந்த வீடியோவ பார்த்தா உடனே மனைவியுடன் ரைடை ஸ்டார்ட் பண்ணிடுவீங்க!
ஐக்கிய ராஜ்ஜிய பகுதியைச் சேர்ந்தவர்கள் சைமன் மற்றும் லீசா தாமஸ் தம்பதியினர். இந்த தம்பதியினர் கடந்த 16 ஆண்டுகளாக பைக்கிலேயே உலகத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறனர். இந்த தம்பதியினர் உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரபலமான தம்பதியினராக இருக்கின்றனர். கணவன் மனைவி என்ற இருவர் மட்டுமே இருக்கும் இந்த குழுவிற்கு 2 ரைட் தி வேர்ல்ட் என பெயர் வைத்து பைக் ரைடிங் செய்து வருகின்றனர்.
இந்த பிரபல தம்பதியான சைமன் மற்றும் லீசா தாமஸ் ஆகியோர் கோவாவில் கடந்த வாரம் நடந்த இந்தியன் பைக் வீக் நிகழ்விற்கு வந்திருந்தனர். அவர்களை சந்தித்த டிரஸ் பார்க் குழுவினர் அவர்களை பேட்டி எடுத்தனர். அதில் இந்த தம்பதியினர் தங்கள் பைக் ரைடிங்கில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் 16 ஆண்டு கால அனுபவ பதிவுகளை நாங்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளோம் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இவர்கள் பைக் மட்டுமல்லாமல் புகைப்படத்துறையிலும் நீண்ட ஆண்டுகளாக தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். நீண்ட ஆண்டுகளாக இவர்கள் பைக் ரேடிங் செய்த அனுபவம் மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இவர்கள் செல்லும் பாதைகளில் இவர்கள் சந்தித்த கஷ்டங்கள் அதை எப்படி இவர்கள் சமாளித்தார்கள் பைக் ரைடிங் என்பது இவர்களுக்கு எவ்வளவு பிடித்தமான விஷயம் போன்ற அனைத்தையும் பகிர்ந்து இருந்தனர்.

கணவன் மனைவியாக சேர்ந்து பைக் ரெய்டு செய்வது என்பது மிகப் பெரிய அனுபவத்தை நமக்கு தரும். அது பைக் ரைடிங் அனுபவம் மட்டுமல்லாமல் இருவருக்கும் அன்பையும் பாசத்தையும் பகிரக்கூடிய நல்ல வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நல்ல ஒரு சூழ்நிலையும் உருவாக்கி தரும். இப்படியாக நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சென்ற பைக் ரைடிங் பற்றி எங்களுக்கு கூறுங்கள்


Click it and Unblock the Notifications








