IPL 2023 LSG அணியுடன் கூட்டுச் சேர்ந்த விடா! இனி நடக்கப்போறத மட்டும் வேடிக்கை பாருங்க!

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் 2 வீலர் பிராண்டான விடா தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியுடன் தற்போது அதிகாரப்பூர்வ எலெக்ட்ரிக் மொபிலிட்டி பார்ட்னராக சேர்ந்துள்ளது. இதனால் அந்த அணியின் ஹெல்மெட்களில் இந்த விடா லோகோ இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் ஐபிஎல் சீசன் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் மக்கள் கவனம் அங்கு இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மூலம் தனது பிராண்ட்களின் விளம்பரங்களைச் செய்ய நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன.

IPL 2023 LSG

இந்நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் டூவீலர் பிராண்டான விடா என்ற பிராண்டிற்கான விளம்பரத்திற்காக லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் விடா அந்த அணியின் அதிகாரப்பூர்வ எலெக்ட்ரிக் மொபிலிட்டி பார்ட்டனராக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த அணியினரின் ஹெல்மெட்டில் இனி விடா லோகோ இடம் பெறும். தற்போது மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில் இந்த முயற்சியில் ஹீரோ நிறுவனம் இறங்கியுள்ளது.

ஹீரோ நிறுவனம் தற்போது தனது இவி எக்கோ சிஸ்டத்தை விஸ்தரிப்பு செய்துள்ளது. தற்போது வரை புதுடில்லி, ஜெய்பூர், மற்றும் பெங்களூரு ஆகிய 3 நகரங்களில் 50 இடங்களில் சுமார் 300க்கும் அதிகமான சார்ஜிங் ஸ்டேஷன்கள இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த சார்ஜிங் ஸ்டேஷன் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனாக இருக்கும். இதில் ஒரு நிமிடம் சார்ஜ் போட்டாலே விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1.2 கி.மீ பயணிக்கும். ஒவ்வொ சார்ஜிங் ஸ்டேஷனிலும் ஏசி மற்றும் டிசி சார்ஜிங் சாக்கெட்கள் உள்ளன. இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களை மை விடா ஆப் மூலம் லோக்கேட் செய்ய முடியும்.

அது மட்டுமல்ல அந்த சார்ஜிங் ஸ்டேஷன் தற்போது ஃப்ரீயாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அந்த சார்ஜிங் ஸ்டேஷனை புக்கிங் செய்யவும் முடியும். நீங்கள் இருக்குமிடத்திலிருந்து அந்த சார்ஜிங் ஸ்டேஷனிற்கு செல்லும் வழியையும் இந்த ஆப் மூலமே பெற முடியும்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்தாண்டு விடா வி1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் அறிமுகமாகிறது. இந்த ஸ்கூட்டரில் 2 ரிமூவபிள் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது பெங்களூரு, ஜெய்பூர், டில்லி ஆகிய நகரங்களில் மட்டும் விற்பனையாகிறது.

ஐபிஎல் போட்டியில் அணிகளுடன் பார்ட்னர்ஷிப் செய்வதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களுக்கு இது புதிதல்ல ஏற்கனவே ஏத்தர் நிறுவனம் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் கடந்தாண்டு பார்ட்னர்ஷிப் செய்துள்ளனர். இந்தாண்டு ஆம்பியர் நிறுவனம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பார்ட்னர்ஷிப் செய்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 11, 2023, 9:33 [IST]
English summary
Ipl 2023 lsg partnership with vida as official electric mobility partner
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+