IPL 2023: ஆர்சிபிக்கு இப்படி ஒரு யோகமா? ரசிகர்கள் கொண்டாட வேற லெவல் விஷயம் கிடைச்சிடுச்சு!
கிரீவீஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஆம்பியர் என்ற பிராண்டில் எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது ஐபிஎஸ் ஸ்பெஷலாக தனது தனது பிரைமஸ் இவி ஸ்கூட்டரில் ஆர்சிபி எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவில் 2023ம் ஆண்டிற்கான ஐபிஎல்கள் போட்டிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்நிறுவனம் ஆம்பியர் பிரைமஸ் ஆர்சிபி எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங்கை தற்போது துவங்கியுள்ளது.

வெறும் ரூ 499 கொடுத்து இந்த ஸ்கூட்டரை புக்கிங் செய்த கொள்ளலாம். இந்த ஸ்கூட்டரை ஒரு லிமிடெட் எடிசன் ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தியுள்ளது. இது மட்டுமல்ல பெங்களூருவில் நடக்கும் ஆர்சிபி மேட்ச்களில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு இந்த ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்படவுள்ளது.
ஆம்பியர் நிறுவனம் இந்த ஆர்சிபி எடிசன் பிரைமஸ் பைக்கின் விலை குறித்த விபரங்களை வெளியிடவில்லை. மேலும் லிமிடட் எடிசன் என்றால் எத்தனை ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படும் என்ற விபரத்தையும் வெளியிடவில்லை. ஆனால் இது ஆர்சிபி ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கியுள்ளனர்.
இந்த பிரைஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை 3.4 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பெஆரத்தப்பட்டுள்ளது. இது 0-40 கி.மீ வேகத்தை வெறும் 4.2 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 77 கி.மீ வேகத்தில் இந்த ஸ்கூட்டர் சீறிப் பாயும்.
இந்த ஸ்கூட்டரில் எல்எஃப்பி பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 1 லட்சம் கி.மீ வரை பயணிக்கும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 107 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. முழுமையாக சார்ஜ் ஏற 5 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும்.
இந்த ஸ்கூட்டரில் மொத்தம் 3 விதமான டிரைவ் மோட்கள் இருக்கின்றன. மேலும் இதில் காம்பி பிரேக் சிஸ்டம் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. இதை எல்லாவற்றையும் விட இந்த ஸ்கூட்டரில் உள்ள ஒரு தனித்துவமான விஷயம் என்றால் இதில் உள்ள ஸ்டோரேஜ் ஸ்பேஸ் தான் 22 லிட்டர் வரை இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








