இந்த பைக்குல போனா ஊரே உங்கள தான் திரும்பி பார்க்கும்! ஜாவா 42 பாபர் பைக் வீடியோ ரிவியூ!

1930களில் தான் உலகிலேயே முதன்முறையாக பாபர் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்பு இந்த ரக பைக்குகளுக்கு மக்கள் மத்தியில் தனி ஈர்ப்பு ஏற்பட்டது. இந்த பைக்குகளுக்கு என தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உருவானது. இந்நிலையில் ஜாவா நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு பாபர் ஸ்டைலில் ஜாவா 42 பாபர் என்ற புதிய ரக பைக் ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தனர்.

ஏற்கனவே ஜாவா பெராக் பைக் அறிமுகமாகி விற்பனையாகி வந்த நிலையில் தற்போது அதே பைக்கில் புதிய மாற்றங்கள் செய்து ஜாவா 42 பாபர் பைக்காக அறிமுகமாகி இருந்தது. இந்த பைக்கை ஓட்டி பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன் பெயரில் டிரைவ்ஸ்பார்க் குழு இந்த பைக்கை ஓட்டிப் பார்த்து அதை வீடியோ ரிவ்யூவாக எடுத்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரிவ்யூவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த பைக்கின் ஸ்டைலிங்கை பொறுத்த வரை வழக்கமான பாபர் ஸ்டைலான மாடர்ன் ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் எல்இடி லைட் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் மொத்தம் மூன்று விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. மிஸ்டிக் காப்பர், மூன் ஸ்டோன் வைட், டூயல் டோன் ஜஸ்பர் ரெட் ஆகிய நிறங்களில் இந்த பைக் விற்பனையாகி வருகிறது. இதன் பெட்ரோல் டேங்கில் 42 பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது.

Jawa 42 Bobber Review in Tamil

இந்த 42 பாபர் பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 334 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 30 பிஎச்பி பவரையும் 32.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலையை பொறுத்த வரை ரூபாய் 2.27 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 28, 2023, 16:55 [IST]
English summary
Jawa 42 bobber bike review watch video in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+