கம்பீரமான தோற்றத்துக்கு பெயர் போனது!! ஸ்டைலிலும் குறைச்சல் இல்லை... ஜாவா 42 பாபர் பைக்கில் புதிய வேரியண்ட்!!

ஜாவா 42 பாபர் (Jawa 42 Bobber) மோட்டார்சைக்கிளில் 'பிளாக் மிரர்' (Black Mirror) என்ற பெயரில் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஜாவா 42 பாபர் பைக்கின் இந்த புதிய வேரியண்ட்டின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் பலருக்கு பரீட்சையமான, நீண்ட கால வரலாறு கொண்ட பைக் நிறுவனம் ஜாவா ஆகும். இடையில் ஓர் சிறிய இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் இறங்கிய ஜாவா பிராண்டில் இருந்து பாபர் ஸ்டைலிலான 42 பாபர் மோட்டார்சைக்கிள் பிரபலமானதாக விளங்குகிறது.

jawa 42 bobber black mirror

இத்தகைய மோட்டார்சைக்கிளில் தான் தற்போது புதியதாக பிளாக் மிரர் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜாவா 42 பாபர் பிளாக் மிரர் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.25 லட்சம் ஆகும். இது, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஜாவா 42 பாபர் பைக்கின் மற்ற வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை காட்டிலும் ரூ.10,000இல் இருந்து ரூ.12,000 வரையில் அதிகம் ஆகும்.

புதிய பிளாக் மிரர் வேரியண்ட்டில் பைக்கின் பெட்ரோல் டேங்க் பகுதி க்ரோம் ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டதாக உள்ளது. இதேபோன்றதான க்ரோம் ஃபினிஷிங்கை முன்பக்க ஹெட்லைட் கௌலிலும், எக்ஸாஸ்ட் குழாயின் முனைப்பகுதியிலும் பார்க்க முடிகிறது. அதேபோல், என்ஜின் சிஸ்டத்திலும் க்ரோம் லைன்கள் உள்ளன. சக்கரங்களில் டிஸ்க் பிரேக் தட்டுகள் அலுமினிய நிறத்தில் உள்ளன.

jawa 42 bobber black mirror

இவை தவிர்த்து, பைக்கின் மற்ற பாகங்கள் அனைத்தும் 'பிளாக் மிரர்' என்ற பெயருக்கேற்ப முற்றிலுமாக கருப்பு நிறத்தில் உள்ளன. 'பாபர் 42' என்ற கிராஃபிக்ஸ் ஆங்கிலத்தில் வழக்கம்போல் பைக்கின் சைடு பேனல்களில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய பிளாக் மிரர் வேரியண்ட்டின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் டைமண்ட்-கட் டிசைனில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

ஜாவா 42 பாபர் பைக்கின் மற்ற வேரியண்ட்களில் ஸ்போக் சக்கரங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அலாய் சக்கரங்கள் பைக்கின் ட்யூப்லெஸ் டயர்களுக்கு ஏற்றவையாக இருக்கும். ஜாவா நிறுவனம் அதன் 42 பைக்குகளின் என்ஜினில் சமீபத்தில், கடந்த மே மாதத்தில்தான் சில திருத்தங்களை செய்தது. என்ஜின் அமைப்பில், த்ரோட்டில் பாடிஸ் 33மிமீ-இல் இருந்து 38மிமீ ஆக உயர்த்தப்பட்டன.

jawa 42 bobber black mirror

அதேபோல், ஐடியல் ஆர்பிஎம் 1500இல் இருந்து 1300 ஆக குறைக்கப்பட்டன. அத்துடன், ஃப்யுல் மேப் அப்டேட் செய்யப்பட்டது மட்டுமின்றி, கியர் & என்ஜின் கவர்களின் டிசைன் மாற்றப்பட்டது. இந்த மாற்றங்கள் அனைத்தும் அப்படியே புதிய 42 பாபர் பிளாக் மிரர் வேரியண்ட்டில் தொடரப்பட்டுள்ளது. ஜாவா 42 பாபர் பைக்கில் 334சிசி, லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 29 பிஎச்பி மற்றும் 32.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த பாபர்-ஸ்டைல் ஜாவா பைக்கில் அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கை, சார்ஜிங் துளை, டிஜிட்டல் கன்சோல் மற்றும் எல்இடி விளக்குகள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெருங்கி வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புது, புது தயாரிப்புகளை களமிறக்கிய வண்ணம் உள்ளன. இந்த வகையில், ஜாவா அறிமுகப்படுத்தும் பண்டிகை காலத்திற்கான தயாரிப்பாகவே புதிய 42 பாபர் பிளாக் மிரர் வேரியண்ட்டை பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 7, 2023, 14:13 [IST]
English summary
Jawa 42 bobber black mirror variant launched
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X