வாடிக்கையாளர்களின் பணத்தை அபேஸ் செய்துவிட்டு தலைமறைவாகிய டூ-வீலர் விற்பனையாளர்.. இப்படியும் ஸ்கேம் நடக்குமா?
நாளுக்கு நாள் இந்தியாவில் மோசடி சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. செல்போனுக்கு லிங்க் அனுப்பி அதன் வாயிலாக மோசடி செய்வது, பேங்க் ஊழியர்களைப் போல் பேசி அக்கவுண்டில் இருந்து பணத்தைச் சுருட்டுவது என புது புது டெக்னிக்குக்குகளைக் கையாண்டு மோசடி மன்னன்கள் பணத்தைச் சுருட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மாதிரியான சூழலிலேயே யாருமே எதிர்பார்த்திராத ஓர் மோசடி சம்பவம் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Yezdi Motocycles) இருக்கின்றது. இது பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா (Mahindra)-விற்கு சொந்தமான கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends)-க்கு சொந்தமான பிராண்ட் ஆகும்.

இந்த பிராண்டின் அதிகாரப்பூர்வ டீலர் ஒருவரே மிகப் பெரிய ஸ்கேமை நிகழ்த்திவிட்டு தலைமறைவாகி இருக்கின்றார். மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் இயங்கும் ஜாவா மற்றும் யெஸ்டி பைக் விற்பனையகமே கேகே மோட்டார்ஸ் ஆகும். இந்த நிறுவனமே தன்னை நம்பி இருந்த வாடிக்கையாளர்களை மோசம் செய்து தப்பி ஓடி இருக்கின்றது.
பைக்கை புக் செய்த வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட கேகே மோட்டார்ஸ், வாகனத்தை டெலிவரிக் கொடுக்காமலேயே இழுத்து மூடப்பட்டு இருக்கின்றது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட இந்த நிறுவனம் அதன் உரிமையாளர்கள் தலை மறைவாகி இருப்பதாக கூறப்படுகின்றது.

நீண்ட நாட்கள் ஆகியும் ஷோரூம் திறக்காததன் காரணத்தினால் அதன் நிர்வாகத்தின்மீது வாடிக்கையாளர்கள் தற்போது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கின்றனர். ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமாக கேகே மோட்டார்ஸ் மோசடி செய்திருக்கும் என கூறப்படுகின்றது. பலமுறை ஷோரூமை பைக் டெலிவரி குறித்து வாடிக்கையளாளர்கள் தொடர்புக் கொண்ட போது, இப்போது டெலிவரி கொடுக்கப்படும், நாளை டெலிவரி கொடுக்கப்படும் என சமாளித்தே வந்திருக்கின்றனர்.
இதற்கிடையில், கடைசியாக ஷோரூமை இழுத்து மூடுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் தங்கள் நிறுவனத்தின் உரிமையாளர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என்றெல்லாம் கூறி இருக்கின்றனர். இதுபோன்ற பல அடுக்கு காரணங்களை அவர்கள் வாடிக்கையாளர்களிடத்தில் கூறி இருக்கின்றனர். இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களும் பொறுமையாகக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே ஷோரூம் முழுமையாக இழுத்து மூடப்பட்டு இருக்கின்றது. எப்போது திறக்கப்படும் என்றும் அறிவிக்கவில்லை. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் சிலர் தொடர்புக் கொண்டபோது எந்த தகவலும் நிர்வாகம் குறித்து கிடைக்கவில்லை. இந்த நிலையிலேயே தாங்கள் மோசடி செய்யப்பட்டு இருப்பதை அறிந்து பத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தற்போது காவல்நிலையத்தில் புகாரை வழங்கி இருக்கின்றனர்.
நடப்பாண்டு மார்ச் மாதம் புக்கிங் செய்யப்பட்ட வாடிக்கையாளருக்குக்கூட கேகே மோட்டார்ஸ் டெலிவரி வழங்காமல் இழுத்தடிப்பு செய்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. சித்தார்த் மேனன் எனும் நபரே மார்ச் மாதத்தில் இருந்து இந்த நிறுவனம் பைக்கை டெலிவரி கொடுக்கும் என நினைத்து ஜாவா பாபர் 42 பைக்கை புக் செய்துவிட்டு காத்திருந்தவர் ஆவார்.
இவரை போலவே இன்னும் பலர் கேகே மோட்டார்ஸின் மோசடியில் சிக்கி இருக்கின்றனர். இதுபோன்று இன்னும் பலர் இருப்பின் தாமாக முன் வந்து புகாரளிகக்க பந்த்ரா வெஸ்ட் காவல்நிலையம் அழைப்பு விடுத்திருக்கின்றது. மேலும், இந்த மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ள ஜாவா யெஸ்டி மோட்டார்ஸும் தன்னுடைய குழுவை அனுப்பி வைத்திருக்கின்றது.
விசாரணை முடிந்த பின்னரே இதுகுறித்த எந்தவொரு கருத்தும் வெளியிடப்படும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்து ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை ஷோரூம் நிர்வாகம் வசூல் செய்திருக்கின்றது. இந்த நிலையிலேயே பைக்கை டெலிவரி கொடுக்காமல் அது அப்ஸ்கான்ட் ஆகி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓர் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு இருப்பது ஒட்டுமொத்த வாகன காதலர்களையும் அதிர்ச்சியில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுபோன்று நம்ப வைத்து மோசடி செய்வது டீலர்ஷிப் நிறுவனங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. பொதுவாக அவர்கள் வாகனத்தை விற்பனைச் செய்யும்போது வாயில் வந்ததை அடித்துவிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணியில் ஈடுபடுவர். ஆனால், தற்போது அரங்கேறி இருக்கும் மோசடி முற்றிலும் விநோதமானதாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








