இந்த தீபாவளிக்குள்ள வாங்கலனா ரொம்ப கஷ்டம்!! ஜாவா, யெஸ்டி பைக்குகளை வாங்க இதுதான் சரியான நேரம்!

ஜாவா, யெஸ்டி (Jawa, Yezdi) பைக்குகளுக்கு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த குறிப்பிட்ட காலத்தில் ஜாவா, யெஸ்டி பைக்குகளை வாங்குவோர் சில சலுகைகளையும், வாரண்டிகளையும் பெற முடியும். அவை என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகை காலம் நெருங்கிவிட்டதால், மக்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். வீட்டில் இருப்பவர்களுக்கு புது ஆடைகளை, ஆபரணங்களை வாங்குவது என தீபாவளி ஷாப்பிங் இனிதே ஆரம்பமாகி விட்டது. அதேபோல், வழக்கமாக தீபாவளி சமயத்தில் புது வாகனங்களை வாங்கவும் நம்மில் பெரும்பாலானோர் விரும்புவோம்.

jawa yezdi bike diwali offers

இதனை மனதில் வைத்து, சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த காலத்தில் விற்பனையை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியாக சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவிப்பது வழக்கம். சமீபத்தில் கூட சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் சலுகைகளை அறிவித்திருந்ததை பற்றி பார்த்திருந்தோம். இந்த வரிசையில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன்படி, ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளை இந்தியாவில் சில சலுகைகளுடன் வாங்கலாம். சலுகைகள் என்றவுடன், பணம் தள்ளுபடி, போனஸ் போன்றவை இருக்கும் என நினைத்து விட வேண்டும். ஜாவா, யெஸ்டி பைக்குகளை குறிப்பிட்ட காலத்திற்கு வாடிக்கையாளர்கள் ரூ.1,888 என்ற குறைந்த மாதத்தவணையில் வாங்கலாம். அத்துடன், வாகனங்களுக்கான உத்தரவாதமும் 4 வருடங்கள்/ 50,000கிமீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

jawa yezdi bike diwali offers

அதாவது, 4 வருடங்கள் மற்றும் 50,000கிமீ-ஐ வாகனம் எட்டுவதற்கு முன் வாகனத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதனை ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் மூலமாக சரிச் செய்துக் கொள்ளலாம். ஜாவா பிராண்டில் இருந்து தற்சமயம் ஜாவா, ஜாவா 42, 42 பாப்பர் மற்றும் பெராக் என்கிற 4 மோட்டார்சைக்கிள்களும், யெஸ்டி பிராண்டில் இருந்து ரோட்ஸ்டர், ஸ்க்ராம்ப்ளர் மற்றும் அட்வென்ச்சர் என்ற பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் இருந்து கடைசியாக ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகளின் புதிய பிரீமியம் வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றையும் மேற்கூறப்பட்ட சலுகைகள் உடன் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். இந்த புதிய ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகளின் பிரீமியம் வேரியண்ட்களில் ஃபேன்ஸியான காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

jawa yezdi bike diwali offers

அத்துடன், யெஸ்டி பைக்குகளில் வேறு சில மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது, இந்த பைக் முன்பை விட தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. இதற்கேற்ப ரைடர் கால் வைக்கும் பைக்கின் ஃபுட்ஃபெக்ஸ் முன்பு இருந்ததை விட சற்று முன்னோக்கி பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், ஹேண்டில்பார் நன்கு ரைடரை நோக்கி வளைத்து வழங்கப்பட்டு உள்ளது.

இதனால், முன்பை விட சவுகரியமான பயணத்தை யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் பெற முடியும். அத்துடன், ஏற்கனவே கூறியதுபோல், பைக்கின் கிராஃபிக்ஸிலும் சில மாற்றங்களை ஜாவா நிறுவனம் கொண்டுவந்துள்ளது. ஜாவா 42 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.90 இலட்சத்தில் இருந்தும், ரோட்ஸ்டர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.06 இலட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன.

jawa yezdi bike diwali offers

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாவா, யெஸ்டி பைக்குகளை நம்ம தாத்தாக்களும், அப்பாக்களும் பரவலாக உபயோகப்படுத்தி இருப்பார்கள். ஆனால், நம் தலைமுறையில் இவற்றை சாலையில் காண்பதே அரிதாக உள்ளது. அத்தகைய பைக்குகளுள் ஒன்றை சொந்தமாக்க வேண்டும் என நம்மில் பலருக்கு ஆசை இருக்கலாம். அதனை நிஜமாக்க இதுதான் சரியான நேரம். குறிப்பாக, வெறும் ரூ.1,888இல் இருந்து இ.எம்.ஐ துவங்குவது எல்லாம் வேற லெவல்...!

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2023, 11:21 [IST]
English summary
Jawa yezdi bike offers for diwali low cost emi here all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X