நம்ப முடியாத ஆஃபர்! பைக்கை வாங்குபவர்களுக்கு ஒரு மாசத்துக்கு இலவச பெட்ரோல்! இந்த சான்ஸை யாரும் மிஸ் பண்ணாதீங்க

முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சிறப்பான மற்றும் நம்ப முடியாத ஆஃபரை அறிவித்திருக்கின்றது. அதாவது, புதிதாக மோட்டார்சைக்கிளை வாங்குபவர்களுக்கு ஒரு மாசத்துக்கு இலவசமாக பெட்ரோலை வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா (Mahindra) -வின் கிளாசிக் லெஜன்ட்ஸ் (Classic Legends)-க்கு சொந்தமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Yezdi Motorcycles) ஆகும். இந்த முன்னணி பிராண்ட் "கீப் ரைடிங்" (Keep Riding) எனும் திட்டத்தை அறிவித்து இருக்கின்றது.

 Jawa 42

இந்த திட்டம் அட்வென்சர் ரைடை விரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகளை திறந்தவெளி சாலையில் தடையின்றி ரைடு செய்ய உதவும். இந்த திட்டத்தின் வாயிலாகவே நிறுவனம் ஒரு மாதத்திற்கு இலவசமாக பெட்ரோலை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. தன்னுடைய வாடிக்கையாளர்கள் தடையின்றி பயணத்தை மேற்கொள்ள உதவும் விதமாக இத்தகைய நம்ப முடியாத சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது.

இதுபோன்று இன்னும் பல சலுகைகளை அது அறிவித்து இருக்கின்றது. புதிய வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறும் விதமாகவும், அவர்களைக் கவரும் நோக்கிலும் இந்த சிறப்பு சலுகையை அது அறிவித்துள்ளது. அதேவேளையில், இந்த சலுகை புதிதாக யெஸ்டி ரோட்ஸ்டர் மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களை வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

One month free petrol

இரண்டில் ஏதேனும் ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்வுச் செய்துக் கொள்ளலாம். மேலும், இந்த திட்டம் வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன் கூடுதலாக இன்னும் சில சிறப்பு சலுகைகளையும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.

அந்தவகையில், 4 வருடங்கள் அல்லது 50 ஆயிரம் கிமீ இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டியை அது வழங்க இருக்கின்றது. 4 ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிமீட்டருக்கு இந்த கவர் வாரண்டியை வழங்கும். இத்துடன், குறிப்பிட்ட ரைடர்கள் கியர்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியை ஜாவா யெஸ்டி அறிவித்து இருக்கின்றது.

மேலும், 10 ஆயிரம் ரூபாயை எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்க இருப்பதாகவும் அது கூறி இருக்கின்றது. இவ்வாறு ரூ. 30 ஆயிரத்திற்கான சிறப்பு சலுகைகளை இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அறிவித்து உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சுலபமாக நிதி உதவியை செய்திடும் நோக்கில சில நிதி நிறுவனங்களுடன் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.

இதன் வாயிலாக, ரூ. 1,888 எனும் மிகவும் குறைவான இஎம்ஐ (EMI) திட்டத்தில் இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. மேலும், சுலப தவணையுடன் சேர்த்து குறைவான வட்டி விகிதத்தும் கடன்கள் வழங்கிட இருப்பதாகவும் அது கூறி இருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி ஜாவா பிராண்டின்கீழ் கிளாசிக் (Classic), 42, 42 பாபர் (42 Bobber) மற்றும் பெராக் (Perak) ஆகிய பைக் மாடல்களும், யெஸ்டி பிராண்டின்கீழ் ரோட்ஸ்டர் (Roadster), ஸ்கிராம்ப்ளர் (Scrambler) மற்றும் அட்வென்சர் (Adventure) ஆகிய பைக் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இவற்றில், ஜாவாவின் 42 மற்றும் யெஸ்டியின் ரோட்ஸ்டர் ஆகிய மாடல்களுக்கே சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஜாவா 42 ரூ. 1.98 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், யெஸ்டி ரோஸ்டர் ரூ. 2.09 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரும் விலைகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆண்டின் இறுதியை நல்ல விற்பனை வளர்ச்சியுடன் முடிக்க திட்டமிட்டு இருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே பல்வேறு சிறப்பு சலுகைகளை அவர்கள் அறிவித்து இருக்கின்றனர். ஜாவாவும் இதன் அடிப்படையிலேயே சலுகையை அறிவித்து இருக்கின்றது. மேலும், இது பெட்ரோலை இலவசமாக வழங்குவதில் சில நிபந்தனைகளையும் அறிவித்து இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, December 22, 2023, 5:30 [IST]
English summary
Jawa yezdi motorcycles to offer one month free petrol
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+