15 நாட்கள்ல இத்தன ஆயிரம் புக்கிங்கா!! ஒரு ரூபாகூட கட்ட வேண்டாம்னதும் மக்கள் 'ஈ' போல மொய்ச்சிருக்காங்க...

வார்ட்விசார்ட் இன்னோவேஷன்ஸ் மற்றும் மொபிலிட்டி (WardWizard Innovations and Mobility Ltd) நிறுவனத்திற்கு சொந்தமான ஜாய் இ-பைக் (Joy e-Bike) இந்தியாவை மையமாகக் கொண்டு மின்வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனம் சமீபத்தில் அதன் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியா மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிஹோஸ் (MIHOS) எனும் பெயர் கொண்ட புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது.

இந்த வாகனத்திற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை நிறுவனமும் அதன் சார்பில் உறுதிப்படுத்தி இருக்கின்றது. நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி சுமார் 18,600 புக்கிங்குகள் குவிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பிரமாண்ட புக்கிங் வெறும் பதினைந்தே நாட்களில் கிடைக்கப் பெற்றவை ஆகும். இந்த தகவல் மேலும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

மிஹோஸ்

போன 22ஆம் தேதிதான் தொடங்கினாங்க

ஜனவரி 22 ஆம் தேதி அன்றே மிஹோஸ் இ-ஸ்கூட்டருக்கான புக்கிங்குகள் தொடங்கின. இந்த அமோக வரவேற்பிற்கு நிறுவனத்தின் முன்னோடி திட்டம் ஒன்றே காரணமாக உள்ளது. இது பிற வாகன உற்பத்தியாளர்களைப் போல் இல்லாமல், பூஜ்ஜியம் கட்டணத்தில் புக்கிங்கை ஏற்பதாக அறிவித்தது. அதாவது, ஒரு ரூபாய்கூட முன் பணம் இல்லாமல் மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங்கை ஜாய் இ-பைக் ஏற்று வருகின்றது.

இதன் விளைவாகவே இந்த வாகனத்திற்கு நம்ப முடியாத அளவில் புக்கிங்குகள் கிடைத்து உள்ளன. பிற முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களான ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் போன்ற நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ. 999-ஐ கட்டணமாகப் பெற்று புக்கிங்கை ஏற்று வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கும் டஃப் கொடுக்கும் விதமாகவே ஜாய் இ-பைக் பூஜ்ஜியம் கட்டணத்தில் புக்கிங்கை ஏற்க தொடங்கியது. இந்த யுக்திக்கான பலனையும் அது தற்போது அடைந்திருக்கின்றது.

மிஹோஸ்

விலை குறைவு

மிஹோஸ் ஓர் ரெட்ரோ ஸ்டைலிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இது ஓர் ஹை ஸ்பீடு ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும்கூட. இதனை ஆட்டோ எக்ஸ்போ 2023-லேயே ஜாய் இ-பைக் முதன் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அறிமுகமாக 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டெலிவரி பணிகளை வரும் மார்ச் மாதம் முதல் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சீக்கிரம் புக் பண்ணிடுங்க

நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 600 க்கும் அதிகமான அதிகாரப்பூர்வ ஷோரூம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வாயிலாகவும் புக்கிங்குகள் ஏற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக மட்டுமே பூஜ்ஜியம் கட்டணத்தில் மிஹோஸுக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது. இதேபோல் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் விலையையும் அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது முதல் ஐயாயிரம் பேருக்கு மட்டும் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு மிஹோஸை விற்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மிஹோஸ்

உறுதியானது

மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பாலி டை சைக்ளோ பென்டடைனை (Poly DiCycloPentadiene)க் கொண்டே டிசைன் செய்து வடிவமைத்திருக்கின்றது, ஜாய் நிறுவனம். இதுவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உறுதித் தன்மைக்கு காரணமாக உள்ளது. ஆகையால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தரத்தின் துளியளவும் சந்தேகம் வேண்டாம் என நிறுவனமும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கரடு-முரடான சாலைகளால் ஏற்படும் அதிர்வுகளைக்கூட தாங்கிக் கொள்ளக் கூடியதாக இதன் பாடி பேனல்கல் இருப்பதாக ஜாய் இ-பைக் தெரிவித்து இருக்கின்றது.

இவற்றுடன் பற்பல இன்டெலிஜன்ட் அம்சங்களைத் தாங்கியதாகவும் மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஜாய் இ-பைக் உருவாக்கி இருக்கிறது. செல்போன் செயலி வாயிலாக ஸ்கூட்டரை இணைக்கும் வசதி, ரிமோட் வசதி, ரிவர்ஸ் மோட், ஜிபிஎஸ் சிஸ்டம், திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் ரீஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம் என பல அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மிஹோஸில் ஜாய் இ-பைக் வழங்கியிருக்கின்றது.

100 கிமீ பயணிக்கலாம்

இதைத்தொடர்ந்து, 74V 40Ah திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்கே மிஹோஸில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்க முடியும். பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், மிக சிறந்த வேக திறனுக்காக 1500 W மின் மோட்டார் மிஹோஸில் பொருத்தி இருக்கின்றது ஜாய் இபைக்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். இதுமட்டும் இல்லைங்க வெறும் 7 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை தொட்டு விடும். மிஹோஸை ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் ஜாய் இ-பைக் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மெட்டாலிக் ப்ளூ, சாலிட் பிளாக் குளாஸ்ஸி, சாலிட் யெல்லோ குளாஸ்ஸி மற்றும் பியர்ல் ஒயிட் ஆகியவையே அவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 6, 2023, 20:09 [IST]
English summary
Joy e bike mihos received 18 thousand bookings with 15 days
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+