ஓலாவுக்கு சங்கு ஊத இதவிட்டா வேற வழி இல்ல! வெற்றிக்கான அஸ்திரத்தை கையில் எடுத்த பிரபல வாகன தயாரிப்பாளர்!

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் உருவெடுத்து இருக்கின்றது. இந்தியாவின் கால் டாக்சி பிரிவை மையமாகக் கொண்டு நாட்டில் கால் தடம் பதித்த இந்த நிறுவனம், தற்போது நாட்டின் மின்சார இருசக்கர வாகன உலகின் அறிவிக்கப்படாத தலைவனாக மாறி இருக்கின்றது.

மிக சிறந்த சேல்ஸ் விகிதத்தைப் பெற்றதன் வாயிலாக இந்த மகுடம் அதை தேடிச் சென்று இருக்கின்றது. சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும் ஏறக்குறைய சுமார் 24 ஆயிரத்திற்கும் அதிகமான ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Ola Electric Scooters) நாட்டில் விற்பனையாகி இருக்கின்றன.

Joy e-bike showrooms

இந்தியாவில் பலதரப்பட்ட வாகன உற்பத்தியாளர்கள் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றசூழலில், அவர்கள் அனைவருக்கும் டஃப் கொடுக்கும் விதமாக இந்த இமாலய விற்பனை வளர்ச்சியை ஓலா எலெக்ட்ரிக் நாட்டில் பெற்று இருக்கின்றது. தொடர்ச்சியாக இதுமாதிரியான விற்பனை வளர்ச்சியையே ஓலா நிறுவனம் இந்தியாவில் கண்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிறுவனத்திற்கு டஃப் கொடுக்கும் முயற்சியிலேயே முன்னணி மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், வார்ட் விசார்டு இன்னோவேஷன்ஸ் அண்ட் மொபிலிட்டி லிமிடெட் (Wardwizard Innovations & Mobility Ltd.) நிறுவனத்திற்கு சொந்தமான ஜாய் இ-பைக் (Joy e-bike) நிறுவனமும் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

Joy e-bike mihos

அது ஓலா எலெக்ட்ரிக் மற்றும் பிற மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கு மிகப் பெரிய போட்டியாளனாக உருவாகும் பொருட்டு அயராது உழைத்துக் கொண்டு இருக்கின்றது. இதன் அடிப்படையில் அந்த நிறுவனம் மிக அதிகளவில் புதிய விற்பனையகங்களை (Distributor Showrooms) உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது.

தடையின்றி தன்னுடைய மின்சார இருசக்கர வாகனங்கள் நாடு முழுவதும் விற்பனைக்குக் கிடைக்கும் விதமாக அது நாட்டின் அனைத்து பகுதிகளையும் குறி வைத்து ஷோரூம்களைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே கடந்த ஆறு மாதங்களில் மட்டும் நிறுவனம் சுமார் 100 புதிய ஷோரூம்களை நாட்டில் உருவாக்கி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இத்துடன் 750க்கும் மேற்பட்ட தொடர்பு மையங்களையும் அது நாட்டில் உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. நிறுவனத்தின் இந்த அசூர வேகம் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகையும் ஆச்சரியத்தில் உறைய வைக்கும் வகையில் அமைந்து உள்ளது. இதன் வாயிலாக இந்தியாவில் தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகப் பெரிய நிலைநாட்ட முடியும் என ஜாய் இ-பைக் அதிக நம்பிக்கைக் கொண்டு இருக்கின்றது.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, நிறுவனத்தின் ஷோரூம்கள் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, சண்டிகர், ஹர்யானா, பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தர்காண்ட், உபி, பிஹார், ஜார்கண்ட், சத்திஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதாக அமைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக மிஹோஸ் இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பாலி டை சைக்ளோ பென்டடைனை (Poly DiCycloPentadiene)க் கொண்டே ஜாய் இ-பைக் டிசைன் செய்து வடிவமைத்திருக்கின்றது. இதில் ஒரு முழு சார்ஜில் 100 கிமீ வரை பயணிக்க முடியும்.

இதற்காக, 74V 40Ah திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் மிஹோஸில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் வரை தேவைப்படும். ஸ்கூட்டரில் மிக சிறந்த வேக திறனுக்காக 1500 W மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். இதுமட்டும் இல்லைங்க வெறும் 7 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை அது தொட்டு விடும். மேலும், ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகள் இதில் வழங்கப்படுகின்றன. மெட்டாலிக் ப்ளூ, சாலிட் பிளாக் குளாஸ்ஸி, சாலிட் யெல்லோ குளாஸ்ஸி மற்றும் பியர்ல் ஒயிட் ஆகியவையே அவை ஆகும்.

இந்த ஸ்கூட்டருடன் சேர்த்து இன்னும் சில இ-வாகனங்களையும் ஜாய் இ-பைக் இந்தியாவில் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இ-மான்ஸ்டர், தண்டர்போல்ட், ஹரிகேன், பீஸ்ட், உல்ஃப், உல்ஃப் பிளஸ், ஜென் நெக்ஸ்ட் நனு இ-ஸ்கூட்டர், ஜென் நெக்ஸ்ட் நனு பிளஸ், குளோப் மற்றும் மான்ஸ்டர் இ-பைக் ஆகிய மாடல்களையே நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு இப்போது நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழலை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ள மின்சார வாகன உற்பத்தியாளர்கள் புதிய தயாரிப்புகளைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே வாடிக்கையாளர்களைக் ஜாய் இ-பைக் புதிய ஷோரூம்களைத் திறக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

Article Published On: Friday, November 3, 2023, 22:14 [IST]
English summary
Joy e bike opens 100 showrooms with in 6 months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+