குஜராத் நிறுவனத்தின் தயாரிப்பிற்கு இப்படி ஒரு வரவேற்பா? சீக்கிரமே ஹீரோ எலெக்ட்ரிக்க ஓரங்கட்டிரும் போலிருக்கே!

ஜாய் இ-பைக் (Joy e-Bike) எனும் பிராண்டின்கீழ் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வார்ட்விசார்டு விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் வார்ட்விசார்ட் இன்னோவேஷன்ஸ் மற்றும் மொபிலிட்டி (WardWizard Innovations and Mobility Ltd)-ம் ஒன்று. குஜராஜ் மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியை மட்டுமே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இயங்கி வருகின்றது. குறிப்பாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை மட்டுமே இது தயாரித்து வருகின்றது. ஜாய் இ-பைக் (Joy e-Bike) எனும் பிராண்டின்கீழ் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வார்ட்விசார்டு விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஜாய் இ ஸ்கூட்டர்

விற்பனை அதிகரிப்பு

இந்த எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 2022 ஆம் ஆண்டில் நிறுவனம் மாபெரும் விற்பனை வளர்ச்சியைப் பெறும் அளவிற்கு வரவேற்புக் கிடைத்திருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் வரையில் நிறுவனத்தின் எலெகட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஒட்டுமொத்தமாக 43,914 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.

இத்தனை சதவீதம் வளர்ச்சியா!..

இது 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் 131.6 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும். 2021 ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 963 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை வைத்து பார்க்கையில் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சென்ற 2022 ஆம் ஆண்டில் வார்ட்விசார்டு நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் செல்வாக்கு அதிகரித்திருப்பதை நம்மால் தெளிவாக உணர முடிகின்றது.

ஜாய் இ ஸ்கூட்டர்

இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்ற ஆண்டு டிசம்பரில் மட்டும் நிறுவனம் டபுள் டிஜிட் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்திருக்கின்றது. 2021 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 39.89 சதவீதம் விற்பனை வளர்ச்சியை அது சந்தித்திருக்கின்றது. 5,400 யூனிட்டுகள் வார்விசார்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களே 2022 டிசம்பரில் விற்பனையாகி இருக்கின்றன. 2021 ஆம் ஆண்டின் டிசம்பரில் இது வெறும் 3,860 யூனிட்டுகளாக மட்டுமே இருந்தன. இத்தகைய விற்பனை வளர்ச்சியை வார்விசார்டு பெற்றிருப்பதால் அது தற்போது மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருக்கின்றது.

இந்தியால இத்தனை வாகனங்களை விற்பனை செஞ்சிட்டிருக்கா?

வார்டுவிசார்டு நிறுவனம் இந்திய மின்வாகன சந்தையில் ஒல்ஃப் பிளஸ், ஜென் நெக்ஸ்ட் நனு பிளஸ், ஹரிகேன், தண்டர்போல்ட், பீஸ்ட், இ-மான்ஸ்டர், மான்ஸ்டர், குளோப் மற்றும் உல்ஃப் ஆகிய எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றில் பெரும்பாலான இருசக்கர வாகன மாடல்களுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாகவே சென்ற ஆண்டில் அதனால் 130 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனை வளர்ச்சியை பெற முடிந்திருக்கின்றது.

ஜாய் இ ஸ்கூட்டர்

வாகன பதிவு செய்ய தேவையில்லை

இதில் சிலவற்றை இயக்க லைசென்ஸ் மற்றும் பதிவு சான்று தேவையில்லை. ஆமாங்க, ஜாய் இ-பைக் நிறுவனம் குறைந்த வேகத்தில் பயணிக்கும் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மணிக்கு 25 கிமீட்டருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்கக் கூடிய இருசக்கர வாகனங்களை இயக்க இந்தியாவில் லைசென்ஸ், பதிவு சான்று தேவைப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய வாகனங்களையும் ஜாய் இ-பைக் இந்தியாவில் அதிக எண்ணிக்கை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

மூன்று பிரிவுகள்

ஒட்டுமொத்தமாக மூன்று பிரிவுகளின் கீழ் நிறுவனம் தனது மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. லோ ஸ்பீடு, ஹை ஸ்பீடு மற்றும் ஹை பெர்ஃபார்மன்ஸ் ஆகிய பிரிவுகளின் கீழே வார்டுவிசார்டு ஜாய் இ-பை எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. லோ ஸ்பீடு பிரிவில் ஒட்டுமொத்தமாக நான்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கும். ஒல்ஃப், குளோப், ஜென் நெக்ஸ்ட் நனு மற்றும் மான்ஸ்டர் ஆகிய மாடல்களே லோ-ஸ்பீடு இ-டூவீலர்களாக உள்ளன.

மான்ஸ்டரை தவிர மற்ற அனைத்தும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். ஹை ஸ்பீடு பிரிவின் இரு எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடல்கள் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. இரண்டும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். உல்ஃப் பிளஸ், ஜென்-நெக்ஸ் பிளஸ் ஆகியவையே அவை ஆகும். ஹை பெர்ஃபான்மன்ஸ் இருசக்கர பிரிவின்கீழ் நான்கு இ-பைக்குள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. இ மான்ஸ்டர், தண்டர்போல்டு, ஹரிகேன் மற்றும் பீஸ்ட் ஆகியவையே இந்த பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, January 5, 2023, 6:30 [IST]
English summary
Joy e bike registered 131 percent growth in cy 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+