வெறும் 4 மணிநேரத்தில் சார்ஜ் ஏறிடும்... குஜராத் நிறுவனத்தின் ஹை-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமான வார்ட் விசார்ட் இன்னோவேஷன்ஸ் & மொபைலிட்டி 2023 ஆட்டோ எக்ஸ்போவில் மிஹோஸ் (Mihos) என்ற பெயரில் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்சமயம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பஞ்சமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நம் நாட்டு சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக புதியதாக விற்பனைக்கு வந்திருப்பதுதான் மிஹோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த இ-ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.49 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குஜராத் நிறுவனத்தின் ஹை-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

ஜாய் இ-பைக் என்ற பிராண்டில் இருந்து களமிறக்கப்பட்டுள்ள இந்த அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 74 வோல்ட் 40 ஆம்பியர் திறன் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி உடன் பாலி டைசைக்லோபெண்டாடைன் (PDCPD) மெட்டீரியல்கள் வழங்கப்பட்டுள்ளதால், மிஹோஸ் ஸ்கூட்டரின் ஆயுட்காலத்தை பற்றி உரிமையாளர் கவலைப்பட தேவை இருக்காது என கூறும் வார்ட்விசார்ட் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 100கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது.

மிஹோஸின் லித்தியம்-இரும்பு பேட்டரியை வீட்டு உபயோக மின்சாரத்தின் வாயிலாக ஸ்கூட்டருடன் வழங்கப்படும் சார்ஜர் மூலம் முழுவதுமாக சார்ஜ் நிரப்ப ஏறக்குறைய 4 மணிநேரங்கள் தேவைப்படும். அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில், இந்த சார்ஜிங் நேரம் குறைவே ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 0-இல் இருந்து 40kmph வேகத்தை வெறும் 7 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

குஜராத் நிறுவனத்தின் ஹை-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

ஏனெனில் மிஹோஸ் ஸ்கூட்டரில் உடனடியாகவே சுமார் 95 என்எம் டார்க் திறன் வரையில் கிடைக்கும் என தயாரித்த நிறுவனம் கூறுகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் கடந்த ஜனவரி 12ஆம் தேதி முதல் துவங்கப்பட்டுவிட்டன. மிஹோஸ் ஸ்கூட்டர்களை வார்ட்விசார்ட் நிறுவனம் குஜராத் மாநிலம் வதோதாரா நகரத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கிறது. இங்கிருந்துதான் நாடு முழுவதும் உள்ள தனது டீலர்ஷிப் மையங்களுக்கு ஸ்கூட்டர்களை வார்ட் விசார்ட் நிறுவனம் அனுப்பி வைக்க உள்ளது.

இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் 600க்கும் அதிகமான டீலர்ஷிப் மையங்கள் உள்ளன. மிஹோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன. மெட்டாலிக் நீலம், பளபளப்பான சாலிட் ப்ளாக், பளபளப்பான சாலிட் மஞ்சள் அல்லது பேர்ல் வெள்ளை என்ற 4 விதமான நிறங்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

குஜராத் நிறுவனத்தின் ஹை-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

மிஹோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ராக்கிஃபெல்லர் என்ற பெயரில் கான்செப்ட் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒன்றையும் வார்ட்விசார்ட் நிறுவனம் தனது ஜாய்-இ பிராண்டில் வெளியீடு செய்துள்ளது. இது தினசரி நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற ரோட்ஸ்டர் ரக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை உருவாக்க பயன்படுத்தப்பட உள்ள கான்செப்ட் மாதிரி ஆகும்.

மற்றப்படி ராக்கிஃபெல்லர் கான்செப்ட்டின் மூலம் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த விபரங்கள் தற்போதைக்கு இல்லை. இந்த கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஜாய்-இ எலக்ட்ரிக் பைக்கின் அறிமுகத்தை 2024ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாக எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, January 13, 2023, 12:24 [IST]
English summary
Joy e high speed electric scooter mihos launched at 2023 auto expo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X