இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு முன்னாடி டாடா டியாகோ இவி ஒரு ஆளே இல்ல.. ரேஞ்ஜ் தரதுல இ-காரையே மென்னு முழுங்கிடும்!

பிரபல சுற்றுலா தளமான கோவாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன (Electric TwoWheeler) உற்பத்தி நிறுவனம் கபிரா மொபலிட்டி (Kabira Mobility). இந்த நிறுவனம் விரைவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

கேஎம்5000 எனும் பெயர் கொண்ட இ-பைக்கையே அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்காகும். இந்த எலெக்ட்ரிக் பைக்கையே கபிரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்திருக்கின்றது. முன்னதாக இதன் டீசர் படங்கள் வெளியிட்ட நிலையில், பைக்கை அது வெளியீடு செய்துள்ளது. விரைவில் இந்த வாகனம் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருப்பதை இந்த வெளியீடு நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது.

Kabira km5000 ebike

இந்த மின்சார பைக்கை தன்னுடைய பிற தயாரிப்புகளைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடியது என கபிரா தெரிவித்து இருக்கின்றது. ஓர் முழு சார்ஜிலேயே 344 கிமீ ரேஞ்ஜை அது தரும். டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரைவிட இது அதிக ரேஞ்ஜ் திறன் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கார் ஓர் முழு சார்ஜில் 250 கிமீ தொடங்கி 315 கிமீ வரை மட்டுமே ரேஞ்ஜ் தரும். இத்தகைய சூப்பரான ரேஞ்ஜை தரும் திறன் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம்கூட இப்போதைய நிலவரப்படி இந்திய சந்தையில் விற்பனையில் இல்லை.

Kabira km5000 ebike side view

ஆகையால், இந்தியாவின் மிக மிக அதிர ரேஞ்ஜை வழங்கக் கூடிய முதல் எலெக்ட்ரிக் பைக்காக கபிரா கேஎம் 5000 எலெக்ட்ரிக் பைக்கின் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது அதிக ரேஞ்ஜை தரக் கூடிய இ-பைக்காக மட்டுமே இருக்காது. அதிக வேகத்தில் செல்லக் கூடியதாகவும் அது இருக்கப்போகின்றது.

நிறுவனம் தற்போது தெரிவித்திருப்பதன்படி, கபிரா கேஎம்5000 இ-பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 188 கிமீ ஆகும். இந்த தகவலே ஒட்டுமொத்த இந்திய மின் வாகன பிரியர்களையும் கூடுதலாக கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், இதன் வருகை 2023 ஆம் ஆண்டிலேயே அரங்கேறும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து 2024இல் எலெக்ட்ரிக் பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி கபிரா நிறுவனம் இந்திய சந்தையில் கேஎம் 3000 மற்றும் கேஎம் 4000 எனும் இரு இ-பைக் மாடல்களை மட்டுமே கபிரா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இத்துடன், ஹெர்மெஸ் 75 எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது டெலிவரி பிரிவிற்கான பிரத்யேக இ-ஸ்கூட்டர் ஆகும். இவற்றைத் தொடர்ந்தே நான்காவது மின்சார இருசக்கர வாகன மாடலாக கேஎம் 5000-ஐ கபிரா இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த புதுமுக இ-பைக்கின் முழு விபரங்களும் வெளியிடப்படவில்லை. இப்போதைய நிலவரப்படி 2023க்குள் இதனை அறிமுகம் செய்துவிடுவதாகவும், 2024க்குள் இதன் டெலிவரி பணிகள் தொடங்கிவிடும் என்கிற தகவல்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. இந்த இ-பைக்கை சிங்கிள் ஸ்விங் ஆர்ம் டிசைனில் கபிரா நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது.

இதுவே இந்தியாவின் முதல் சிங்கிள் ஸ்விங் ஆர்ம் டிசைனில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் பைக்காகும். கபிரா கேஎம் 4000 மாடலைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் டூ-வீலராக இது தயாரிக்கப்பட்டு இருப்பதால் ரூ. 3 லட்சம் என்கிற அதிகபட்ச விலையைக் கொண்டதாக கேஎம்5000 விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹைபிரிட் சேஸிஸ், மோனோ காயில் சஸ்பென்ஷன், பிரீமியம் இன்வெர்டட் ஃபோர்க் உள்ளிட்டவை கேஎம்5000 இ-பைக்கில் வழங்கப்பட இருக்கின்றன. இதுதவிர, கார்களில் வழங்கப்படுவதைப் போல 7 அங்குல தொடுதிரை கன்சோல், 4ஜி இணைப்பு, மியூசிக் கன்ட்ரோல் வசதிகளுடன் வழங்கப்பட இருக்கின்றது. இந்த திரை டர்ன்-பை-டர்ன் வழி தடம் மற்றும் டூ-வீலர் பற்றிய முக்கிய தகவல் உள்ளிட்டவற்றை வழங்கக் கூடியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எலெக்ட்ரிக் பைக் மட்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தால் இந்திய மின்சார இருசக்கர வாகன உலகையே ஒரு கை பார்த்துவிடும். ஆனால், அதன் விலையை பொருத்தே அதற்கு கிடைக்கும் வரவேற்பு அமையும். இப்போதைய நிலவரப்படி இந்திய சந்தையில் இந்த அளவு அதிக ரேஞ்ஜ் தரும் வாகனம் விற்பனையில் இல்லை என்பதால் இதற்கு டிமாண்ட் நல்ல நிலையில் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, May 19, 2023, 20:09 [IST]
English summary
Kabira mobility unveiled km5000 electric bike with 344 km range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+