பெட்ரோல் பைக்குகள தலைய சுத்தி தூக்கிபோட தயாரா இருந்துக்கோங்க.. இந்த இ-பைக் ஃபுல் சார்ஜில் 330கிமீ அசராம போகும்

கபிரா மொபிலிட்டி நிறுவனம் அடுத்த மாதம் கபிரா கேஎம் 5000 (Kabira KM5000) எனும் புதுமுக எலெக்ட்ரிக் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மின்சார பைக் டாடா டியாகோ இவி-யை விட அதிக ரேஞ்ஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரேஞ்ஜ் தருவதில் டாடா டியாகோ இவி (Tata Tiago EV)-க்கே டஃப் கொடுக்கக் கூடிய ஓர் பைக்கை கபிரா மொபிலிட்டி (Kabira Mobility) நிறுவனம் உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பைக்கையே அடுத்த மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது அந்நிறுவனம் புதிய தகவல்களை வெளியிட்டு இருக்கின்றது.

கபிரா கேஎம்5000

இந்த தகவல் மின்சார இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கபிரா கேஎம்5000 (Kabira KM5000) எனும் எலெக்ட்ரிக் பைக்கையே அடுத்த மாதம் அந்நிறுவனம் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் ஃபுல் சார்ஜில் 330 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரைவிட இது அதிக ரேஞ்ஜ் திறன் ஆகும். இந்த கார் ஓர் முழு சார்ஜில் 250 கிமீ தொடங்கி 315 கிமீ வரை மட்டுமே ரேஞ்ஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கபிரா மொபிலிட்டி நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்-அப்துல்லா குழுமம் அண்மையில் புதிய 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை அறிவித்தது.

கபிரா கேஎம்5000

இந்த பெரும் முதலீட்டின்கீழ் நிறுவனம் பல்வேறு திட்டங்களை அந்நிறுவனம் வகுத்துள்ளது. புதிய எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்குக் கொண்டு வருவதும் இதில் அடங்கும். இதில் ஒன்றே கபிரா கேஎம் 5000. தற்போது நிறுவனம் மூன்று மின்சார இருசக்கர வாகனங்களை சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

கேஎம் 3000, கேஎம் 4000 மற்றும் ஹெர்மெஸ் 75 ஆகிய மாடல்களையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே நான்காவது புதிய சூப்பர் பைக் ரக மின்சார மோட்டார்சைக்கிளாக கேஎம் 5000 இணைக்கப்பட இருக்கின்றது. இந்த பைக்கில் 8.1 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட இருக்கின்றது.

கபிரா கேஎம்5000

இதை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 2 மணி நேரங்களே போதுமானது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இந்த பைக்கில் கூடுதல் சிறப்பு வசதியாக ரிமூவபிள் இருக்கை வழங்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் பின் பக்கத்தில் இருக்கும் இருக்கையை அகற்றிக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்யும் பட்சத்தில் தனி நபர் பைக்காக கபிரா கேஎம் 5000 பைக்கை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேவேளையில், இருக்கைக்கு பதிலாக அந்த இடத்தை லக்கேஜை ஏற்றிக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். நீண்ட தூர பயணங்களின்போது அதிக லக்கேஜை ஏற்றி செல்ல இது உதவியாக இருக்கும்.

கபிரா கேஎம்5000

இத்துடன், செல்போனை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, செல்போன் இணைப்பு போன்ற எக்கசக்க அம்சங்கள் இந்த மின்சார பைக்கில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைய நிலவரப்படி கபிரா கேஎம் 5000 எலெக்ட்ரிக் பைக் பற்றிய குறைவான தகவல்களே வெளியாகி உள்ளன.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அறிமுக விழாவின்போது பைக் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எப்போது எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வழங்கப்படும் மற்றும் அதன் விலை எவ்வளவு என்கிற முக்கிய தகவல்களை அன்றைய தினத்திலேயே நிறுவனம் வெளியிட இருக்கின்றது.

இந்த பைக்குடன் சேர்த்து கேஎம் 3000 மற்றும் கேஎம் 4000 ஆகிய மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. கூடுதல் திறனை வெளியேற்றும் மின் மோட்டார் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதி என பல்வேறு சிறப்புகளுடன் இந்த அப்டேட் வெர்ஷன்கள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய முதலீட்டின் கீழ் நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு இருக்கின்றது. தற்போது நிறுவனத்தின் உற்பத்தி செயல்பாடுகள் அனைத்தும் தர்வத் பிளானட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நிறுவனம் அதன் உற்பத்தி ஆலையை உபி-யில் அமைக்க திட்டம் தீட்டி வருகின்றது. வட இந்தியாவை மின்சார மயமாக்கும் பொருட்டு இந்த திட்டத்தை கபிரா மொபிலிட்டி வகுத்து இருக்கின்றது.

இதுதவிர, விற்பனையகங்களை விரிவாக்கம் செய்யும் பணியிலும் களமிறங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் 100க்கும் அதிகமான புதிய விற்பனையகங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டிருக்கின்றது, கபிரா மொபிலிட்டி நிறுவனம். இதற்கிடையில் கேஎம் 5000 போன்ற புதிய தயாரிப்புகளையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, March 17, 2023, 20:09 [IST]
English summary
Kabira planning to unveil km500 e bike in coming april
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X