சூப்பர் பைக் யூஸர்களையே பொறாமைப்பட வைக்கும் கரிஷ்மா எக்ஸ்எம்ஆர்.. இப்படி ஒரு அம்சம் இருப்பதையே மறச்சுட்டாங்க!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), அதன் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் (Karizma XMR) பைக்கை இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கில் ஏகப்பட்ட புதிய அம்சங்களை அந்நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

இதில் சேர்க்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் பல சூப்பர் பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கின்றன. அப்படி என்ன மாதிரியான சூப்பரான அம்சங்களை எல்லாம் இந்த பைக்கில் ஹீரோ நிறுவனம் வழங்கி இருக்கின்றது?, இந்த புதிய பைக்கின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Hero karizma xmr hidden feature

இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனையில் மிக சிறப்பான மோட்டார்சைக்கிள் என கரிஷ்மாவை கூறலாம். இத்தகைய பைக்கின் விற்பனையையே கடந்த காலத்தில் கடுமையான போட்டியின் காரணத்தினால் இந்திய சந்தையில் ஹீரோ வெளியேற்றியது. தற்போது அதையே புதிய அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

கூடுதல் கவர்ச்சியான தோற்றம் மற்றும் அம்சங்களுடன் அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. சொல்லப்போனால் இந்த பைக்கை தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சூப்பர் பைக்குகள் சிலவற்றிற்கே டஃப் கொடுக்கும் வகையில் ஹீரோ நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. ஆகையால், பல பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்கள் இந்த லெஜண்டிற்கு முன்னால் மண்டியிடும் நிலை உருவாகி இருக்கின்றது.

Xmr hidden feature

அட்ஜஸ்டபிள் விண்ட்ஸ்கிரீன்கூட இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சம் மிகவும் சாதாரணமானதாக தெரியலாம். ஆனால், மிகவும் பயனுள்ளது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நீண்ட தூர மற்றும் அதிக நேரம் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு இந்த அம்சம் பெரும் உதவியாக இருக்கும்.

மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதியே விண்ட்ஸ்கிரீனில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கான தனி பட்டன் வலது கை பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடனேயே புரஜெக்டர் ரக எல்இடி ஹெட்லேம்ப், தானாகவே ஆன்-ஆஃப் வசதி உடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஹசார்டு ஸ்விட்ச், பேக்லைட் சுவிட்ச் கியர், எல்இடி டெயில்லைட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் புதிய எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

Hero karizma xmr feature

இந்த வசதியைக் கொண்டு செல்போனை அந்த திரையுடன் இணைத்துக் கொள்ள முடியும். செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளைக்கூட இதன் வாயிலாக அந்த திரையிலேயே பார்த்துக் கொள்ள முடியும். இதுதவிர, நேவிகேஷன், கியர் பொசிஷன், ட்ரிப் மீட்டர் மற்றும் எரிபொருள் அளவு பற்றிய தகவலையும் இந்த திரை நமக்கு வழங்கும்.

இதுதவிர, இன்னும் சில முக்கிய தகவல்களையும் இந்த திரை வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த திரையில் உள்ள தகவல்களை மிகுந்த சூரிய வெளிச்சத்தில் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹீரோ நிறுவனம் இந்த பைக்கில் 210 சிசி எஞ்ஜினையே பயன்படுத்தி இருக்கின்றது.

இது ஓர் சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு, 4 வால்வுகள் கொண்ட டிஓஎச்சி எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜினால் அதிகபட்சமாக 25.15 பிஎச்பி பவரையும், 20.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் முடியும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த எஞ்ஜினில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த கியர்பாக்ஸில் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றுடன் சேர்த்து மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கின் முன் பக்கத்தில் 300 மிமீ டிஸ்க்கும், பின் பக்கத்தில் 230 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுபோதாதென்று, கூடுதல் பாதுகாப்பான பிரேக்கிங் வசதியை வழங்குவதற்காக டூயல் சேனல் ஏபிஎஸ்-ம் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், சஸ்பென்ஷன் செட்-அப்பிலும் இந்த பைக் மிக சிறந்ததாக இருக்கின்றது. முன் பக்க வீலில் 37 மிமீ கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக்கும், பின் பக்கத்தில், 6 ஸ்டெப் ப்ரீ-லோட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக்கும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த பைக்கின் உருவாக்கத்தில் புத்தம் புதிய ஸ்டீல் டிரெல்லிஸ் ஃப்ரேமே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் விற்பனைக்கு வந்திருப்பது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பிரீமியம் மோட்டார்சைக்கிள்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. கரிஷ்மாவின் முந்தைய வெர்ஷனைப் போலவே இதற்கும் இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 1, 2023, 13:00 [IST]
English summary
Karizma xmr mind blowing feature
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X