ராயல் என்ஃபீல்டை காலி செய்யக் காத்திருக்கும் கவாஸாகி... இப்படி ஒரு பைக்கை லாஞ்ச் பண்ணிட்டாங்களே!
கவாஸாகி நிறுவனம் புதிதாக எலிமினேட்டர் 400 என்ற புதிய க்ரூஸர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் முதன் முறையாக எலிமினேட்டர் மோனிக்கர் ரக பைக்க கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை கவாஸாகி நிறுவனம் இதை எலிமினேட்டர் 400 என்ற பெயரில் 2 வேரியன்ட்களில் இந்த பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம்.
கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக்கை பொருத்தவரை ஸ்டாண்டர்டு மற்றும் எஸ்இ ஆகிய 2 வேரியன்ட் பைக்குகள் இருக்கின்றன. முதலில் அதன் இன்ஜினை பற்றித் தெரிந்து கொள்ளுவோம். புதிய கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக்கில் 399 சிசி லிக்யூட் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் கவாஸாகி நின்ஜா 400 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பைக்கில் இந்த இன்ஜின் வேறு விதமாக ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 48 பிஎச்பி பவரையும் 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக் கவாஸாகி நின்ஜா 400 பைக்கை விடச் சற்று பவர்ஃபுல்லானது. மேலும் இது க்ரூஸர் ஸ்டைல் பைக்கிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் லோ எண்ட் டார்க்கிலும் அதிக பவரை வெளிப்படுத்தும்.
இந்த புதிய கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக்கில் 12 லிட்டர் ஃப்யூயல் டேங்க் வசதி இருக்கிறது. இது கவாஸாகி நின்ஜா 400 எம் பைக்கை விட 5 லிட்டர் குறைவானதாகும். மேலும் இந்த எலிமினேட்டர் 400 பைக் நின்ஜா 400 பைக்கை விட 8 கிலோ அதிகமானதாக இருக்கிறது. நின்ஜா 400 பைக்கில் 176 கிலோ ஸ்போர்ட்டிங் ஃபிரேம் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக்கை பொருத்தவரை முன்பக்கம் 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேக் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் அம்சங்களைப் பொருத்தவரை இதில் முழு எல்இடி லைட்டிங் பொருத்தப்பட்டுள்ளது.
இது போக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டெலஸ்கோபிக் ஃபிரண்ட் சஸ்பென்சன், ட்வின் ரியர் ஷாக் அப்சர்பர்கள், முக்கியமாக டாப் வேரியன்டான எஸ்இ வேரியன்ட்டில் முன்பக்கம், பின்பக்கத்தில் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா டேஷ் கேமரா போல வேலை செய்யும்.

தற்போது கவாஸாகி நிறுவனம் தனது எலிமினேட்டர் 400 பைக்கை தற்போது ஜப்பான் மார்கெட்டில் மட்டும் விற்பனை செய்து வருகிறது. அதில் ஸ்டாண்டார்டு வேரியன்ட் பைக்கின் விலை ¥ 7,59,௦௦௦ அதாவது இந்திய மதிப்பில் ரூ4.71 லட்சம் டாப் வேரியன்டான எஸ் இ வேரியன்ட் ¥ 8,58,000 இந்திய மதிப்பில் ரூ5.33 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச மார்கெட்டில் இந்த கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக் ஹோண்டா ரிப்பெல் 500 பைக்கிற்கு போட்டியாகக் களம் இறங்கியுள்ளது. இந்த பைக் ஓரளவிற்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் இந்தியாவிற்கு வந்தால் ராயல் என்ஃபீல்டிற்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








