விலையோ பல லட்சம், ஆனா ரோட்டுல ஓட்ட முடியாதாம்!.. இந்தியாவில் விற்பனைக்கு வந்த அசத்தலான கவாஸாகி பைக்குகள்!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி (Kawasaki), இந்திய சந்தையில் இரு புத்தம் புதிய மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. கேஎக்ஸ் 65 (KX65) மற்றும் கேஎக்ஸ் 112 (KX112) ஆகிய இரு பைக் மாடல்களையே நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
இதுதவிர அதிக பவர்ஃபுல் மாடலாக கேஎல்எக்ஸ் 230ஆர் (KLX230R ) மாடலையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. முதல் மாடல் ரூ. 3.12 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், இரண்டாவது ஒன்று 4.87 லட்சம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

கேஎல்எக்ஸ் 230ஆர் மாடலின் விலை ரூ. 5,21,000 ஆகம். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இத்தனை லட்சம் ரூபாய் கொடுத்து இந்த மோட்டார்சைக்கிள்களை நாம் வாங்கினாலும், அவற்றை சாலைகளில் ஓட்டிச் செல்ல முடியாது. மீறி ஓட்டிச் சென்றால் போலீஸ் கேஸில் சிக்க அதிகம் வாய்ப்புகள் இருக்கின்றன.
கவாஸாகி நிறுவனம் இந்த இரு மோட்டார்சைக்கிள்களையும் அட்வென்சர் பயன்பாட்டு வாகனமாக உருவாக்கி இருக்கின்றது. முழுக்க முழுக்க இந்த பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த வாகனங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனவேதான், இவற்றை பொதுச் சாலையில் பயன்படுத்த முடியாது. இந்திய சந்தையில் கவாஸாகி நிறுவனம் இதுபோன்ற மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்குக் கொண்டு வருவது முதல் முறையல்ல என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது.

நிறுவனம் ஏற்கனவே கேஎக்ஸ்100, கேஎக்ஸ்250, கேஎக்ஸ் 450, கேஎல்எக்ஸ் 110, கேஎல்எக்ஸ் 140ஜி மற்றும் கேஎல்எக்ஸ் 450ஆர் உள்ளிட்ட மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே தற்போது புதிய மாடல்களான கேஎக்ஸ் 65, கேஎக்ஸ் 112 மற்றும் கேஎல்எக்ஸ் 230ஆர் ஆகியவற்றை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது, கவாஸாகி.
இந்த மூன்றில் கேஎக்ஸ் 65 மிகவும் சிறிய மற்றும் விலை மலிவான அட்வென்சர் பைக்காகக் காட்சியளிக்கின்றது. சற்று சிறிய வயதினரும் ஓட்டிக் கொள்ளும் வகையில் இந்த பைக்கை கவாஸாகி நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இதன் ஒட்டுமொத்த எடையே 60 கிலோ மட்டும்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், இந்த மோட்டார்சைக்கிளில் 64சிசி எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் லிக்யூடு கூல்டு 2 ஸ்ட்ரோக் கார்புரேட்டட் மோட்டார் ஆகும். இந்த எஞ்ஜின் உடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே பொருத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த பைக்கின் முன் பக்கத்தில் 14 அங்குல வீலும், பின் வீலில் 12 அங்குல வீலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
சிறியவர்கள் இயக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய சிறிய வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன், மிக சிறந்த சஸ்பென்ஷனுக்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல், மிக சிறந்த பிரேக்கிங் அம்சத்திற்காக முன் மற்றும் பின் பக்க வீல்களில் டிஸ்க்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இதேபோல், மிக சிறந்த மற்றும் அதிக வசதிகளைக் கொண்ட டூ-வீலராக கவாஸாகி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் கேஎக்ஸ்112 இருக்கின்றது. அதேவேளையில் அதிக பவர்ஃபுல்லான பைக்கும் ஆகும். இதில் 112 சிசி 2 ஸ்ட்ரோக் லிக்யூடு கூல்டு எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் பவர்ஃபுல் எக்சாஸ்ட் வால்வுகள் உடன் வருவது குறிப்பிடத்தகுந்தது.
இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸிலேயே இயங்குகின்றது. கேஎக்ஸ் 112 மோட்டார்சைக்கிளில் 19 அங்குல வீல் முன் பக்கத்திலும் பின் பக்கத்தில் 16 அங்குல வீலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, சூப்பரான சஸ்பென்ஷனுக்காக அட்ஜஸ்டபிள் 36 மிமீ யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்தில் கவாஸாகி வழங்கி இருக்கின்றது.
இதுமாதிரியான மிக தரமான அம்சங்களை இந்த இரு டூ-வீலர்கள் பெற்றிருந்தாலும் அவற்றை சாலையில் வைத்து இயக்க முடியாது. இத்தகைய மோட்டார்சைக்கிள்களையே கவாஸாகி இந்திய சந்தையில் தற்போது மிக மிக அதிக விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றிற்கு இந்தியாவின் அட்வென்சர் பயண பிரியர்கள் மத்தியில் நல்ல வரேவற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு விலை கொடுத்து வாங்கி ரோட்டுல ஓட்ட முடியாதுனா எதுக்கு இந்த பைக்?, இந்த பைக் அட்வென்சர் ரைடை விரும்புவோர்களுக்காகவே கவாஸாகி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த ரைடை அனுபவிக்கும் இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தனியார் டிராக்குகள் உள்ளன. அங்கு வைத்து இந்த பைக்குகளை இயக்கிக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









