2024 ஜனவரி 1ஆம் தேதி அன்னைக்கே நடக்க போகும் தரமான சம்பவம்.. புத்தாண்டோட ஆரம்பமே அமர்க்களமா இருக்க போகுது!
2024 ஆம் ஆண்டு பிறக்கும் முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி அன்று இந்தியாவில் தரமான சம்பவம் ஒன்று அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருசக்கர வாகன பிரியர்களை அதகளப்படுத்தும் விதமாக பிரபல டூ-வீலர் உற்பத்தி நிறுவனமான கவாஸாகி (Kawasaki), ஓர் தரமான பைக் மாடலை நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் கவாஸாகி (Kawasaki)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனம் வரும் புத்தாண்டின் தொடக்க நாளை வரவேற்கும் விதமாகவும், அந்த நாளை சிறப்பிக்கும் விதமாகவும் சூப்பரான பைக் மாடல் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருசக்கர வாகன காதலர்களின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருக்கின்றது நிஞ்சா இசட்எக்ஸ் 6ஆர் (2024 Ninja ZX-6R). இந்த பைக் மாடலையே அது ஜனவரி 1ஆம் தேதி அன்று நாட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பைக்கிற்கு சூப்பர் பைக் பிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது.
இந்தமாதிரியான சூழ்நிலையிலேயே அப்பைக்கை இந்தியாவில் வரும் 1ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக கவாஸாகி அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பைக்கை இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா பைக் வீக் 2023(Bike Week 2023)-லேயே கவாஸாகி வெளியீடு செய்தது. இந்த நிகழ்வு கோவாவிலேயே அரங்கேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் விதமாக வரும் திங்கள் கிழமை அன்று பைக் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. இது ஓர் அப்டேட் செய்யப்பட்ட மாடல் ஆகும். இதன் ஸ்டைல் மற்றும் எஞ்சின் உள்ளிட்டவற்றில் லேசான மாற்றங்கள் அப்டேட்டின்கீழ் செய்யப்பட்டு இருக்கின்றன.
மேலும், 2023 வெர்ஷனைக் காட்டிலும் கணிசமான அளவில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக புதிய நிஞ்சா இசட்எக்ஸ் 6ஆர் பைக்கில் ரைடை கூடுதல் சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக பலதரப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், டிராக்சன் கன்ட்ரோல், பன்முக திறன்கள் கொண்ட ரைடிங் மோட்கள், ஏபிஎஸ் மற்றும் பல பாதகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதுதவிர சிறந்த சஸ்பென்ஷனுக்கா இந்த பைக்கில் ஷோவா செபரேட் ஃபங்க்சன் ஃபோர்க்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இது முன்பக்கத்திலேயே இடம் பெற்றிருக்கும். பின் பக்கத்தில் வாயு நிரப்பப்பட்ட மோனோஷாக் இடம் பெற்றிருக்கும். இவற்றுடன் சேர்த்து சூப்பரான பிரேக்கிங் சிஸ்டத்திற்காக 310 மிமீ அளவுள்ள இரண்டு டிஸ்க் பேட்கள் கொண்ட பிரேக்குகள் முன் பக்க வீலிலும், 220 மிமீ அளவுள்ள ஒற்றை டிஸ்க் பிரேக் பின் வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்று இன்னும் பல பிரீமியம் அம்சங்கள் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. டிஎஃப்டி திரையும் இந்த பைக்கில் இடம் பெற்றுள்ளது. இந்த திரை பன்முக முக்கிய விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். பைக்கின் மைலேஜ் திறன், ஆர்பிஎம் போன்ற தகவல்களை திரை வழங்கும்.
மேலும், இந்த பைக்கின் மாசு உமிழ்வு விஷயத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கில் 636 சிசி திறன் கொண்ட இன்லைன் 4 சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 129 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய சிறப்பான வசதிகளைத் தாங்கிய பைக்கையே வருகின்ற 1ஆம் தேதி இந்தியாவில் கவாஸாகி நிறுவனம் வெளியீடு செய்ய இருக்கின்றது. இதற்கு சூப்பர் பைக் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதற்கு ரூ. 12 லட்சத்திற்கும் அதிகமான விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








