ராயல் என்பீல்டு கூட மோத முடியுமா? மோதினா இப்படிதான் நடக்கும்.. வந்த வேகத்துல இந்தியாவுக்கு டாடா காட்டிய பைக்!

உலக புகழ்பெற்ற கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வந்த இருசக்கர வாகன மாடல்களில் டபிள்யூ800 (W800)-ம் ஒன்று. இந்த பைக்கையே இந்தியாவில் இருந்து அகற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, டபிள்யூ800 பைக் விற்பனையில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து பைக் பற்றிய அனைத்து விபரங்களும் நீக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரெட்ரோ கிளாசிக் ரக மோட்டார்சைக்கிளுக்கு போட்டி அளிக்கும் விதமாக கவாஸாகி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது.

டபிள்யூ800

கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே இந்த பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையிலேயே முழுமையாக இரண்டு ஆண்டுகள்கூட நிறைவுறாத நிலையில் டபிள்யூ 800 பைக்கை விற்பனையில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது கவாஸாகி நிறுவனம். இந்த வெளியேற்றம் தற்காலிகமானதுதான் என கூறப்படுகின்றது.

ஆகையால், வெகு விரைவில் இந்த பைக் மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் பிஎஸ் 6 கட்டம் இரண்டு மற்றும் ஓபிடி 2 விதிகள் நடைமுறைக்கு வர இருக்கின்றது. இந்த புதிய மாசு உமிழ்வு காரணமாகவே இந்த பைக்கின் வெளியேற்றம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

டபிள்யூ800

புதிய மாசு உமிழ்வு விதி காரணமாக வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகனங்களை அப்கிரேட் செய்த வண்ணம் இருக்கின்றனர். இத்தகைய அப்கிரேடிற்கே டபிள்யூ 800 தயாராகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், விரைவில் அப்கிரேடுடன் அது (டபிள்யூ 800) விற்பனைக்கும் வரலாம் எனஎதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு அது மீண்டும் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கடும் போட்டியாளனாக அது மாறிவிடும். அதேவேளையில், இப்போதைய நிலவரப்படி டபிள்யூ 800 பைக்கிற்கு போதிய அளவு வரவேற்புக் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், இது நிரந்தர வெளியேற்றமாககூட இருக்க வாய்ப்புகள் இருப்பதாக மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

டபிள்யூ800

ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. கவாஸாகி இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிய மிக சூப்பரான பைக் மாடல்களில் டபிள்யூ 800-ம் ஒன்று. இந்த பைக்கின் பாரம்பரிய தோற்றத்திற்காக வட்ட வடிவிலான ஹெட்லைட் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் அதன் பாரம்பரிய தோற்றத்தை கூட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், பெட்ரோல் டேங்க் அமைப்பு, இருக்கை, டுயல் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன், மட்குவார்ட், சைலென்சர், ஸ்போக்ஸ் வீல் ஆகியவையும் பாரம்பரிய ரெட்ரோ லுக்கை வெளிக்காட்டும் வகையிலேயே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கில் நவீன தொழில்நுட்ப அம்சங்களும் பல வழங்கப்பட்டு உள்ளன. தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ப டிஸ்க் பிரேக் மற்றும் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் ஆகியவைப் பொருத்தப்பட்டுள்ளன.

டபிள்யூ800

இந்த பைக்கின் விலையானது 7 லட்ச ரூபாய்க்கும் அதிகம். இதுவும் இந்த பைக்கின் பக்கம் அதிகளவில் இந்தியர்கள் சாயாமல் போனதற்கு ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கக் கூடியதாக இந்த பைக்கை அது உருவாக்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, February 27, 2023, 20:12 [IST]
English summary
Kawasaki removed w800
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X