கவாஸாகி நிஞ்ஜாவில் ஹைபிரிட் வசதி கொண்ட பைக் அறிமுகம்! பெட்ரோல்-மின்சாரம் எது கிடைக்குதோ அத வச்சு ஓட்டிக்கலாம்!
கவாஸாகி நிறுவனம் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட நிஞ்ஜா பைக் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த பைக்கால் மின்சாரம் மற்றும் பெட்ரோல் என ரெண்டிலும் ஓட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அறிமுகம் எங்கு முதலில் அரங்கேற இருக்கின்றது? இதில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக கவாஸாகி (Kawasaki) இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் முன்னணி பைக் மாடலாக நிஞ்ஜா (Ninja) இருக்கின்றது. இதையே கவாஸாகி நிறுவனம் தற்போது மின்சாரம் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டிலும் இயங்கும் வாகனமாக தயார் செய்திருக்கின்றது.

ஆமாங்க, நீங்க கேட்பது சரிதான் இந்த பைக் ரெண்டிலுமே இயங்கும். இதனையே வாகன உலகம் ஹைபிரிட் (Hybrid) என குறிப்பிடுகின்றது. இந்த ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கவாஸாகி நிஞ்ஜா, நிஞ்ஜா 7 (Kawasaki Ninja 7) என அழைக்கப்படுகின்றது. இந்த பைக்கையே கவாஸாகி தற்போது வெளியீடும் செய்திருக்கின்றது.
இந்த பைக் முதன் முதலில் ஐரோப்பிய சந்தையிலேயே விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னரே உலக சந்தையில் கவாஸாகி நிஞ்ஜா 7 விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. நிஞ்ஜா 7 ஹைபிரிட் பைக்கில் ஓர் 451 சிசி பாரல்லல் ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்ஜின் உடன் சேர்த்தே 9 kW எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றையும் அந்த பைக்கில் சேர்த்திருக்கின்றது. இதற்கு தேவையான மின்சார சக்தியை வழங்குவதற்காக 48 வோல்ட் பேட்டரி பேக் ஒன்று வழங்கப்பட இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் தனித்துவமாக 58 பிஎச்பி பவரை வழங்கும்.
இந்த திறனை 69 பிஎச்பி-ஆக உயர்த்திக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதனை இ-பூஸ்ட் மோட் (e-Boost mode) வாயிலாக உயர்த்திக் கொள்ள முடியும். இந்த பைக்கின் திறன் வெளிப்பாடானது 650 சிசி மற்றும் 700 சிசி இருசக்கர வாகனங்களுக்கு இணையானதாக இருக்கும்.
அதேவேளையில், இதன் எரிபொருள் சிக்கனம் என்பது 250 சிசி திறனுக்கு இணையானதாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அளவிற்கு அது எரிபொருள் சிக்கனத்தை வழங்க புதிய ஹைபிரிட் அம்சமே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இத்தகைய சூப்பரான பைக்கையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.
இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது துள்ளியமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதன் அறிமுகம் கட்டாயம் அரங்கேறும் என்று மட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த பைக்கிற்கான ப்ரீ புக்கிங் பணிகள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த பைக்கில் இன்னும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கவாஸாகி வாரி வழங்கி இருக்கின்றது. ஆனால், என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய தகவலை அது அறிவிக்கவில்லை. இதுகுறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ விற்பனை வருகையின்போது அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில் டிஎஃப்டி திரை, இவி, ஈகோ, ஹைபிரிட் மற்றும் ஸ்போர்ட் ஹைபிரிட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், பெட்ரோல் டூ-வீலர்களுக்கும் இப்போதும் டிமாண்ட் மிக மிக அமோகமாகவே இருக்கின்றது. இந்த மாதிரியான சூழல் இந்தியாவில் நிலவுவதானல் நிஞ்ஜா 7 போன்ற ஹைபிரிட் (பெட்ரோல் - மின்சாரம்) அம்சம் கொண்ட வாகனம் விற்பனைக்கு வரும்பட்சத்தில், இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








