இந்தியா பைக் வீக் 2023: தரமான பைக்கை காட்சிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கவாஸாகி! விலையை சொல்லவே இல்ல!
கோவாவில் இந்தியா பைக் வீக் 2023 (India Bike Week 2023) நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இது ஓர் பைக்குகளுக்கான திருவிழா ஆகும். மேலும், இது ஓர் உலக புகழ்பெற்ற நிகழ்ச்சியும் ஆகும். இதன் வாயிலாக இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் சிலர் தங்களின் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் கொண்டும் இருக்கின்றனர்.
அந்தவகையில், கவாஸாகி நிறுவனம், இந்த தளத்தைப் பயன்படுத்தி அதன் 2024 நிஞ்சா இசட்எக்ஸ் 6 ஆர் (2024 Ninja ZX-6R) மோட்டார்சைக்கிளை வெளியீடு செய்து இருக்கின்றது. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த பைக்கை தற்போது வெறும் காட்சி மட்டுமே படுத்திருக்கின்றது, கவாஸாகி.

அதாவது, இன்னும் விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை. இது ஓர் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். ஆகையால், 2023 வெர்ஷனைக் காட்டிலும் இதில் கணிசமான கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், என்ன மாதிரியான புதிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய தகவலை கவாஸாகி நிறுவனம் வெளியிடவில்லை.
மேலும், விலைகள் பற்றிய விபரத்தையும் கவாஸாகி அறிவிக்கவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, இந்த பைக் ரூ. 12 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இந்த பைக்கை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையைவிட அதிகமான மதிப்பில் இந்த பைக் விற்பனைக்கு வந்தாலும் சந்தேகம் பட ஒன்றுமில்லை.

மேலும், இதன் அறிமுகம் இன்னும் ஒரு சில மாதங்களில் அரங்கேற இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 ஜனவரிக்குள் இதன் வருகையை எதிர்பார்க்கலாம். டிசைன் மற்றும் எஞ்சின் ஆகியவற்றில் லேசான மாற்றங்களை கவாஸாகி இந்த நிஞ்சா இசட்எக்ஸ் 6 ஆர் பைக்கில் செய்து இருக்கின்றது.
மிக முக்கியமாக மாசு உமிழ்வு விஷயத்தில் மிகப் பெரிய மாற்றத்தை அது செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 636 சிசி திறன் கொண்ட இன்லைன் 4 சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 129 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
இத்துடன், ரைடை கூடுதல் சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக இந்த பைக்கில் டிராக்சன் கன்ட்ரோல், பன்முக திறன்கள் கொண்ட ரைடிங் மோட்கள், ஏபிஎஸ் மற்றும் பல பாதகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. மிக முக்கியமாக சிறந்த சஸ்பென்ஷனுக்காக இந்த பைக்கில் ஷோவா செபரேட் ஃபங்க்சன் ஃபோர்க்குகள் எதிர்பார்க்கப்படுகின்றது.
பின் பக்கத்தில் வாயு நிரப்பப்பட்ட மோனோஷாக் எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றுடன், சூப்பரான பிரேக்கிங் சிஸ்டத்திற்காக 310 மிமீ அளவுள்ள இரண்டு டிஸ்க் பேட்கள் கொண்ட பிரேக்குகள் முன் பக்க வீலிலும், பின் பக்கத்தில் 220 மிமீ அளவுள்ள டிஸ்க் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுபோன்று இன்னும் பல பிரீமியம் அம்சங்கள் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன. சிறப்பம்சங்களைப் பொருத்த வரை இந்த பைக்கில் புதிய டிஎஃப்டி திரை எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரை பன்முக வசதிகளைத் தாங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. பைக்கின் மைலேஜ் திறன், ஆர்பிஎம் என பல முக்கிய தகவல்களை வழங்கும் திறன் கொண்டதே அது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கவாஸாகி நிறுவனம் அதன் டபிள்யூ175 ஸ்ட்ரீட் (W175 Street) பைக் மாடலை இதே இந்தியா பைக் வீக் வாயிலாக நேற்றைய தினம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுவே நிறுவனத்தின் மலிவு விலை பைக் மாடல் ஆகும். இதற்கு ரூ. 1.35 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையிலேயே தற்போது மற்றுமொரு பிரீமியம் பைக்கை கவாஸாகி வெளியீடு செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









