ஒரு துளிகூட பெட்ரோல் இல்லாம இந்த பைக் 12 கிமீ பயணிக்கும்.. அதிசய பைக்கின் கூடுதல் சிறப்புகள் என்ன?
இத்தாலி நாட்டின் மிலன்-இல் 2023 இஐசிஎம்ஏ வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எதிர்பார்த்தபடி, இந்த முறையும் பல புதுமையான மோட்டார்சைக்கிள்கள் இங்கு வைத்து காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேவேளையில், நாம் எதிர்பார்த்திராத அதி நவீன மற்றும் மாறுபட்ட தோற்றம் கொண்ட வாகனங்களும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், அதன் 2.5ஆர் எக்ஸ்டண்ட் எனும் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியது. இது ஹீரோவிடும் இருந்து யாருமே எதிர்பார்த்திராத ஓர் வெளியீடு ஆகும். இந்த நிறுவனத்தைப் போலவே உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி யாருமே எதிர்பார்த்திராத மோட்டார்சைக்கிள் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

அதுதான் இசட்7 ஹைபிரிட் ஆகும். இது நிறுவனத்தின் இரண்டாவது ஹைபிரிட் மோட்டார்சைக்கிள் ஆகும். சமீபத்தில்தான் இந்த நிறுவனம் அதன் பிரபல இருசக்கர வாகன மாடலான நிஞ்சாவை தழுவி உருவாக்கிய ஹைபிரிட் வசதிக் கொண்ட மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகப்படுத்தியது. நிஞ்சா 7 ஹைபிரிட் எனும் பெயரில் அது அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையிலேயே தற்போது இசட்7 ஹைபிரிட் எனும் மோட்டார்சைக்கிள் மாடலை அது உலக புகழ்பெற்ற மோட்டார் ஷோவில் வெளியீடு செய்திருக்கின்றது. இசட்7 ஹைபிரிட் என்பது நிஞ்சா 7 ஹைபிரிட்-இன் நேக்கட் வெர்ஷன் ஆகும். ஆகையைல், உருவ தோற்றத்தில் மட்டுமே இந்த இரண்டு மாடல் பைக்குகளுக்கும் இடையே வித்தியாசம் இருக்கும் மற்ற அம்சங்கள் வித்தியாசம் என்பதே இருக்காது என்பதை நாம் இங்கே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு சான்றாக நிஞ்சா 7 ஹைபிரிட் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே எஞ்சின் செட்-அப்பே இசட்7 ஹைபிரிட்டிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஸ்ட்ராங் ஹைபிரிட் திறன் கொண்ட 451 சிசி ட்வின் சிலிண்டர் ஐசிஇ மோட்டாரே இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் 58.3 பிஎச்பி பவரையும், 43.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இத்துடன் ஓர் எலெக்ட்ரிக் மோட்டாரும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 12 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது ஆகும். எனவே, இந்த எலெக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தி இயக்கும்போது பைக்கின் வேகம் சற்று குறைவாகவே இருக்கும் என தெரிகின்றது.

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எலெக்ட்ரிக் மோட், ஈகோ-ஹைபிரிட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில், எலெக்ட்ரிக் மோடை பயன்படுத்தும்போதே வெறும் மின்சாரத்தில் மட்டும் இயங்கும் வாகனமாக இசட்7 மாறும். மிகவும் ஸ்மூத்தான மற்றும் சைலண்டான ரைடை இதில் பெற முடியும்.
இதுதவிர, பெட்ரோலே இல்லாமல் 12 கிமீ வரை பயணித்துக் கொள்ள முடியும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக பைக்கில் தனியாக குட்டி பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஈகோ மற்றும் ஹைபிரிட் மோடை பயன்படுத்தும்போது பெட்ரோல் மற்றும் மின்சார மோட்டார் இரண்டும் இணைந்து வேலை செய்யும்.
இவ்வாறு செயல்படுவதால் பெட்ரோல் சிக்கனம் மற்றும் மைலேஜ் திறன் அதிகரிப்பு ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இந்த பைக்கின் அதி வேக திறனை பெற வேண்டும் என்றால் கடைசியாக வழங்கப்பட்டு இருக்கும் ஸ்போர்ட் மோடையே பயன்படுத்த வேண்டும். இந்த மோடில் ஐசி மோட்டார் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகிய இரண்டும் உச்சபட்ச வேக திறனை வெளிப்படுத்தும்.
இந்த திறனை கூடுதலாக்கும் பொருட்டு இ-பூஸ்ட் வசதியும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், இந்த சிஸ்டம் அதிகபட்சம் 5 செகண்ட் வரை இயங்கும். இந்த சிஸ்டத்தை பேடில் ஷிஃப்ட் வாயிலாக ஆக்டிவேட் செய்துக் கொள்ள முடியும். இது வலது கை பக்கம் இடம் பெற்றிருக்கும்.
ஓருவரை ஓவர்டேக் செய்யும் நேரத்தில் இந்த அம்சம் மிகுந்த உதவியாக இருக்கும். ஆனால், அதீத வேகம் என்பது மிகுந்த ஆபத்தானது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சூப்பரான எஞ்சின் உடன் சேர்த்து 6 ஸ்பீடு ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
மேலும், வாடிக்கையாளர்களால் முழு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை தேர்வுச் செய்துக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. இதற்கான வசதியையும் இந்த பைக்கில் கவாஸாகி அறிமுகம் செய்திருக்கின்றது. இத்துடன், 6 ஸ்பீடு பேடில் ட்ரிக்கர்டு கியர் சிஸ்டமும் கூடுதல் தேர்வாக இந்த பைக்கில் வழங்கப்பட இருக்கின்றது.
இதன் விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்கிற விபரங்களும் வெளியிடப்படவில்லை. இந்த வெளியீட்டு சம்பவத்தை வைத்து பார்க்கையில் வெகு விரைவில் இந்த வாகனம் விற்பனைக்கு வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் உலக சந்தை வெளியீட்டைத் தொடர்ந்தே இந்திய வருகையின் விபரங்கள் வெளியாகும் என நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களில் மட்டுமே ஹைபிரிட் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டநிலையில், தற்போது பைக்குகளிலும் அந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. இது எரிபொருளை சிக்கனம் செய்ய வேண்டும் நினைப்பவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அம்சத்தால் அதிக மைலேஜ் மற்றும் பண சேமிப்பையும் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









