பெட்ரோலே இல்லை என்றாலும் இந்த பைக் ஓடும்... எப்படி தெரியுமா?
கவாஸாகி நிறுவனம் சமீபத்தில் தனது ஸி 7 என்ற ஹைபிரிட் பைக்கை சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக் ஹைபிரிட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்நிறுவனம் புதிதாக ஒரு ஹைபிரிட் பைக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இது ஸி7 பைக்கில் இருந்து சற்று அதிகமான அம்சங்கள் கொண்ட பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் கவாஸாகி. இந்நிறுவனம் சூப்பர் பைக்குகளை தயாரிப்பதில் மிக முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் மாசு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகமாக பெருகி வருவதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மெல்ல மெல்ல தங்கள் தயாரிப்புகளில் இருந்து வெளியேறும் மாசு அளவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.

இதற்காக சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளாக மாற்றி வருகின்றனர். இந்நிலையில் கவாஸாகிக்கு நிறுவனம் தங்கள் தயாரிப்புகளை ஹைபிரிட் வாகனங்களாக மாற்றி உள்ளன. இப்படியாக கவாஸக நிறுவனம் என்ற ஹைபிரிட் பைக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்தியது. தற்போது அதைத் தொடர்ந்து வெர்சஸ் என்ற ஹைபிரிட் பைக்கை தயாரித்து வருகிறது. இதற்கான காப்புரிமை புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது.
இந்த வெர்சஸ் ஹைபிரிட் பைக் என்பது ஸி7 ஹைபிரிட் பைக்கில் உள்ள அதே இன்ஜினை கொண்ட பைக் ஆக உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி இதில் 451 சிசி பேரலல் டிவின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் ஹைபிரிட் தொழில்நுட்பதற்காக 1.4 கிலோ வாட் ஹவர் பேட்டரியும் 9 கிலோ வாட் ஹவர் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி இந்த பைக் ஹைபிரிட் பைக்காக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெர்சஸ் எலெக்ட்ரிக் மோடில் மட்டுமே இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட வாய்ப்புள்ளது. அதன்படி எலெக்ட்ரிக் மோடில் ஓடும் இந்த பைக் எப்பொழுது தனது சார்ஜை இழக்கிறதோ அதன் பின்பு இதை பெட்ரோல் இன்ஜின் மோடிற்க்கு மாற்றி பயன்படுத்த முடியும். பெட்ரோல் இன்ஜினில் பைக் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பெட்ரோல் தீர்ந்து விட்டாலும் உடனடியாக எலெக்ட்ரிக் மோடிற்கு மாற்றி செல்ல முடியும்.
நாம் முன்னரே சொன்னதுபடி இந்த பைக்கில் 451 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 69 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்படுகிறது. இதுபோக இந்த பைக்கில் முழுமையான எல்இடி லைட் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. ரைடர்களுக்கான பல்வேறு தொழில்நுட்பங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

ஹைபிரிட் தொழில்நுட்பம் என்பது தற்போது கார்களில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டூவீலர்களில் ஹைபிரிட் தொழில்நுட்பம் மிக பெரிய அளவில் பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையை கவாஸாகி போன்ற நிறுவனங்கள் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை கொண்டு வருவது மிக சிறப்பான முன்னுதாரணமாக அமையும் இதை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் தங்கள் சாதாரண பைக்குகளிலும் இந்த ஹைபிரிட் தொழில்நுட்பத்தை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
மற்ற பைக்குகளில் இந்த ஹைபிரிட் நுட்பம் வரும்போது அதன் மைலேஜ் மிக அதிகமாக இருக்கும். இதனால் லிட்டருக்கு 100 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் பைக்குகள் கூட எதிர்காலத்தில் தயாரிக்கப்படலாம். ஆனால் டூவீலர்களில் ஹைபிரிட் பைக்குகளை விட எலெக்ட்ரிக் பைக் மக்கள் மத்தியில் மவுசு அதிகமாகிவிட்டது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மக்கள் தற்போது விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் பைக்குகளிலும் எலக்ட்ரிக் பைக்குகள் விரைவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.
தற்போதைய பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பது தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் தற்போதைய நிலைமைப்படி விலை அதிகமாக இருப்பதால் மக்கள் மத்தியில் அதை வாங்குவதற்கான தயக்கம் இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் ஆகி வாகனங்களின் விலை குறையும் பட்சத்தில் பைக்கிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகி நிறுவனம் சூப்பர் பைக் விலை தயாரிப்பதில் மிக முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் பைக்குகளை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிறுவனம் ஹைப்ரீட் தொழில்நுட்பத்தில் இறங்கி உள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









