எப்படியாச்சும் ராயல் என்பீல்டைவிட அதிகமா விற்பனை செஞ்சுடனும்.. மிகப் பெரிய தள்ளுபடியை வழங்கும் கவாஸாகி..

இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக கிளாசிக் ரக இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் கவாஸாகி (Kawasaki)-யும் ஒன்று. இந்த நிறுவனம் தன்னுடைய ஓர் மலிவு விலை பைக் மாடலின் பக்கம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக ஓர் பிரத்யேக சலுகையை அறிவித்து இருக்கின்றது.

நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் ஏற்கனவே மலிவு விலைக் கொண்ட அந்த மோட்டார்சைக்கிளின் விலை இன்னும் பலமடங்குக் குறைவானதாக மாறியிருக்கின்றது. கவாஸாகியின் பிரபலமான மலிவு விலை மோட்டார்சைக்கிள் மாடலாக டபிள்யூ 175 (W175) இருக்கின்றது. இதற்கே சிறப்பு சலுகை விலை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

Kawasaki w175 front beauty

ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடியை வழங்கும் வவுச்சர் திட்டத்தையே நிறுவனம் டபிள்யூ 175 பைக்கின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக அறிவித்து இருக்கின்றது. இந்த சலுகையை போன ஏப்ரல் மாதத்திலேயே கவாஸாகி அறிவித்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், 30 ஏப்ரல் 2023 வரை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என திட்டவட்டமாக கூறி இருந்தது.

சலுகை காரணமாக கவாஸாகி டபிள்யூ 175 பைக்கின் விற்பனை லேசாக அதிகரித்ததாகக் கூறப்படுகின்றது (இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் நிறுவனம் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது). இந்த நிலையிலேயே இன்னும் பலமடங்கு விற்பனையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக கவாஸாகி நிறுவனம் இந்த மே மாதம் வரை சலுகையை நீட்டிப்பு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

Kawasaki w175 side view

ஆகையால், கவாஸாகி டபிள்யூ 175 மோட்டடார்சைக்கிளை 31 மே வரையில் ரூ. 10 ஆயிரம் குறைவான விலையில் வாடிக்கையாளர்களால் வாங்கிக் கொள்ள முடியும். கவாஸாகி டபிள்யூ 175 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் இரு வெவ்வேறு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்பெஷல் ஆகியவையே அவை ஆகும். ஸ்டாண்டர்டு வெர்ஷனுக்கு ரூ. 1.47 லட்சமும், ஸ்பெஷல் வெர்ஷனுக்கு ரூ. 1.49 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த இரு தேர்வுகளும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350க்கு போட்டி அளிக்கும் வகையில் விற்பனையில் உள்ளன.

Kawasaki w175 colour option

இந்த பைக்கிற்கு மட்டுமின்றி டிவிஎஸ் ரோனின் பைக்கிற்கும் டபிள்யூ 175 போட்டியாளனாக இருக்கின்றது. இந்த இரு பைக்குகளுக்கும் டபிள்யூ 175 மிக சிறந்த போட்டியாளனாக இருந்தாலும், அவை இரண்டைக் காட்டிலும் மிகக் குறைவான திறன் வெளிப்பாட்டைக் கொண்டதாகவே டபிள்யூ 175 காட்சியளிக்கின்றது.

ஹண்டர் 350 பைக்கில் 349சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய சிங்கிள் சிலிண்டர், டிஓஎச்சி ஃபூயவல் இன்ஜெக்டட், ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20 எச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

Kawasaki w175 side profile

இதுபோலவே டிவிஎஸ் ரோனினும் அதிக திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரைக் கொண்டிருக்கின்றது. ஆனால், கவாஸாகி டபிள்யூ 175 மாடலில் 177 சிசி திறனை வெளியேற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 7,500 ஆர்பிஎம்மில் 12.8 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 13.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த பைக்கில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த அளவு குறைவான திறனை இந்த மோட்டார்சைக்கிள் வெளியேற்றினாலும் உருவம் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றின் அடிப்படையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனின் மோட்டார்சைக்கிள்களுக்கு டபிள்யூ 175 போட்டியாக இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறப்பு சலுகை வாயிலாகவாச்சும் வாடிக்கையாளர்களை ஈர்த்துவிட வேண்டும் என்கிற முயற்சியில் கவாஸாகி களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மலிவு விலை மோட்டார்சைக்கிளை இன்னும் மலிவு விலைக் கொண்டதாக மாற்றும் சலுகையை நிறுவனம் சென்ற மாதத்தில் இருந்து வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த சலுகையினால் நிறுவனம் பெற்றிருக்கும் பலன் என்ன என்பது பற்றிய விபரம் இந்த மாதத்தின் இறுதியில்தான் தெரியவரும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 6, 2023, 8:49 [IST]
English summary
Kawasaki w175 bike discount price scheme extended until may end
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X