ஸ்பிளெண்டர் பைக்கை போல இனி கவாஸாகி பைக்கும் விற்பனையாகும்.. மிக மிக மலிவு விலையில் புதிய பைக் அறிமுகம்!

இரண்டு சக்கர வாகன பிரியர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பான இந்தியா பைக் வீக் 2023 (Bike Week India 2023) கோவாவில் தொடங்கி இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக உலக புகழ் பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி (Kawasaki), அதன் டபிள்யூ 175 ஸ்ட்ரீட் (W 175 Street) பைக்கை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்திருக்கின்றது.

சமூக ஊடகங்கள் வாயிலாக இந்த பைக்கின் மீதான எதிர்பார்ப்பை டீசர் படங்கள் வாயிலாக தூண்டி வந்தநிலையில், தற்போது அப்பைக்கை கவாஸாகி விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. அறிமுகமாக இந்த பைக்கிற்கு 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Kawasaki w175 street

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்திய இருசக்கர வாகன காதலர்களின் மனதைக் கவரும் விதமாக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பைக் மாடலே டபிள்யூ 175 ஸ்ட்ரீட் ஆகும். இந்த பைக்கில் 177 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக், சிங்கில் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் எஸ்ஓஎச்சி, ஃப்யூவல் இன்ஜெக்சன் வசதிக் கொண்ட எஞ்சினும் ஆகும். அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 9.6 கிலோவாட் பவரை இந்த மோட்டார் வெளியேற்றும். இது 13 பிஎஸ் திறனுக்கும் சமம் ஆகும். மேலும், 6,000 ஆர்பிஎம்மில் 13.2 என்எம் டார்க்கை இது வெளியேற்றும்.

இத்துடன், மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக பைக்கின் முன் பக்க வீலில் 110 மிமீ அளவுள்ள சஸ்பென்ஷனும், பின் வீலில் ஸ்விங் ஆர்ம்-ம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டத்திற்காக முன் பக்கத்தில் ஹைட்ராலிக் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் 110 மிமீ அளவுள்ள டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இவற்றுடன், மிக சிறந்த இயக்க அனுபவத்திற்காக முன் வீலில் 80/100-17M/C (46P) ட்யூப் லெஸ் டயரும், பின் வீலில் 100/90-17M/C (55P) ட்யூப் லெஸ் டயரும் வழங்கப்பட்டு இருக்கின்றது. நிற தேர்வைப் பொருத்த வரை இரண்டு ஆப்ஷன்கள் கவாஸாகி டபிள்யூ 175 ஸ்ட்ரீட்-இல் வழங்கப்பட இருக்கின்றன.

கேன்டீ எமரால்டு கிரீன் (Candy Emarald Green) மற்றும் மெட்டாலிக் மூன் டஸ்ட் கிரே (Metalic Moon Dust Grey) ஆகிய வண்ண ஆப்ஷன்களே கவாஸாகி டபிள்யூ 175 ஸ்ட்ரீட்-இல் வழங்கப்பட இருக்கின்றன. இந்தியாவில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு ஓர் கவாஸாகி பைக்காக டபிள்யூ175 இருக்கின்றது.

இதைவிட மலிவு விலை தயாரிப்பாக டபிள்யூ 175 ஸ்ட்ரீட்-இன் வருகை அமைந்திருக்கின்றது. டபிள்யூ 175 மாடலின் ஆரம்ப விலை ரூ. 1.47 லட்சம் ஆகும். மேலும், 1.49 லட்சம் ரூபாய் வரை இந்த பைக் விற்கப்படுகின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

இதைவிட ரூ. 12 ஆயிரம் விலை குறைவாகவே டபிள்யூ 175 ஸ்ட்ரீட் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக கவாஸாகியின் விற்பனை வரும் நாட்களில் லேசாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், ராயல் என்பீல்டுக்கு இதன் வருகை லேசாக தலைவலியை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு கிளாசிக் 350-க்கு போட்டி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக டபிள்யூ 175 ஸ்ட்ரீட் மாடல் பைக்கின் வருகை அமைந்திருக்கின்றது. இதை இந்தியர்களுக்காக கவாஸாகி தயார் செய்திருப்பது, அப்பைக்கிற்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்திருக்கின்றது. ஆகையால், விற்பனையிலும் லேசாக இந்த பைக் ஜொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, December 8, 2023, 16:58 [IST]
English summary
Kawasaki w175 street launched in india via india bike week 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+