இந்த பைக்க எடுத்துட்டு ரோடுல போனா எல்லாரும் உங்கள வச்ச கண்ணு வாங்காம பாப்பாங்க... இதோட விலை அவ்வளவு அதிகம்!

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் மிகுந்த அட்டகாசமான ஸ்டைல் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அந்த புதுமுக பைக்கின் விலை, சிறப்பம்சம், எஞ்ஜின் திறன் உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களை இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கவாஸாகி நிறுவனம் இந்தியா சந்தையில் புதுமுக மோட்டார்சைக்கிள் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நியோ ரெட்ரோ ஸ்டைலிலான இசட்900 ஆர்எஸ் பைக்கையே நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 16.47 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

கவாஸாகி

இந்த விலையில் ஹூண்டாய் க்ரெட்டாவின் நடுநிலை வேரியண்டையே வாங்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா ரூ. 10.84 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலின் விலையைக் காட்டிலும் அதிக விலையைக் கொண்டதாகவே இந்த கவாஸாகி இசட்900 ஆர்எஸ் (2023 Kawasaki Z900 RS) விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இது பலருக்கு அதிர்ச்சியை வழங்கினாலும், இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஒவ்வொரு அம்சமும் இந்த விலைக்கு உகந்ததாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. கவாஸாகி இசட்650ஆர்எஸ் மாடலை தழுவியதே இந்த இசட்900 ஆர்எஸ் மாடல் ஆகும். எஞ்ஜின் மற்றும் இன்னும் ஒரு சில அம்சங்களில் மட்டுமே இவ்விரு மாடல்களுக்கும் இடையில் மாற்றங்களைக் காண முடியும்.

கவாஸாகி

அதுவும், அந்த மாற்றங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். அதே ஸ்டைல் உள்ளிட்ட பெரும்பாலான விஷயங்களில் இந்த இரு பைக்குகளும் ஒரே மாதிரியானதாகவே உருவாக்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, நிறுவனத்தின் கடந்த கால தயாரிப்புகள் சிலவற்றிற்கு புகழ்சேர்க்கும் விதமாகவும் இந்த பைக்கை நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக வட்ட வடிவ ஹெட்லேம்ப், டியர் டிராப் ரக ஃப்யூவல் டேங்க், மெல்லிய வால் பகுதி, பின்னப்பட்ட தோற்றம் கொண்ட இருக்கை, மல்டி ஸ்போக்குகள் அலாய் வீல்கள், குரோம் ஃபினிஷ் ரிம்கள் மற்றும் எக்சாஸ்ட்டுகள் என எக்கசக்க அம்சங்கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த பைக்கை இரு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க கவாஸாகி திட்டமிட்டு உள்ளது. மெட்டாலிக் டையப்ளோ பிளாக்/ மெட்டாலிக் இம்பீயிரல் ரெட் மற்றும் கேண்டீ டோன் ப்ளூ இவையே அந்த நிற தேர்வுகள் ஆகும். சிறப்பம்சங்களாக இந்த பைக்கில் கவாஸாகி டிராக்சன் கன்ட்ரோல், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் எல்இடி லைட்டுகள் என பல்வேறு அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இரு அனலாக் டயல்கள் (ஸ்பீடு மற்றும் ஆர்பிஎம்மை இது வெளிக்காட்டும்) ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும். எஞ்ஜினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 948 சிசி இன்லைன் 4 சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் 107 பிஎச்பி பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 95 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கில் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக 41 மிமீ இன்வெர்டட் ஃபோர்க் முன் பக்கத்திலும், மேனோஷாக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதேபோல் மிக சிறந்த பிரேக்கிங்கிற்காக 300 மிமி டூயல் டிஸ்க்குகள் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் 250 மிமீ சிங்கிள் ரோட்டார் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கின் வருகை டிரையம்ப் பானேவில்லே டி100 மற்றும் ஸ்பீடு ட்வின், ஹோண்டா சிபி1000ஆர் உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 14, 2023, 8:44 [IST]
English summary
Kawasaki z900 rs neo retro bike launched in india
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+