இந்த பைக் ராயல் என்பீல்டு இருக்குற தடத்தையே அழிக்கப்போகுது விலையை கேட்டா உடனே புக் பண்ண ரெடியாகிடுவீங்க!

நீண்ட நாட்களாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு போட்டியாக கீவே நிறுவனம் எஸ்ஆர்125 என்ற பைக்கை இன்று ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த டூவீலர் பிராண்ட் நிறுவனம் கீவே. இந்நிறுவனம் இந்தியாவில் களம் இறங்கி தனது தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வரத் துவங்கிவிட்டது. மக்கள் மத்தியில் இந்த பிராண்ட் மெல்ல மெல்லப் பிரபலமாகி வருகிறது. இதனால் படிப்படியாக இந்த பிராண்டில் உள்ள வாகனங்களின் விற்பனை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கீவே நிறுவனம் இன்று ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் தனது புதிய பைக் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த பைக் ராயல் என்பீல்டு இருக்குற தடத்தையே அழிக்கப்போகுது விலையை கேட்டா உடனே புக் பண்ண ரெடியாகிடுவீங்க!

கீவே நிறுவனம் தனது எஸ்ஆர்250 என்ற பைக்கை தான் இன்று ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டுள்ளது. இது ஒரு நியோ கிளாசிக் ரக பைக்காகும். இந்தியாவில் இந்த ரக பைக்குகளுக்கு செம டிமாண்ட் இருப்பதால் இந்த ரகத்தில் ஒரு பைக்கை இந்தியா களம் இறக்கியுள்ளது. இதே ரகத்தில் இந்நிறுவனம் எஸ்ஆர்125 என்ற 125 சிசி பைக்கை வெளியிட்டிருந்தது. அதே போல தற்பேஆது எஸ்ஆர்250 பைக்கை வெளியிட்டுள்ளது. இந்த பைக் ஓல்டு ஸ்கூல் ஸ்கிரம்ப்ளர் டைப் டிசைனை கொண்டுள்ளது. முக்கியமாக இது ஒரு மல்டி ஸ்போர்க் வீல் பைக்காவும், இதன் டயர்களும் பிளாக் பேட்டனில் வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல இந்த பைக்கின் ஃபென்டர் சிறியதாக கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் ஃபோர்க் கைட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வட்ட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. சீட்கள் ரிப்டு பேட்டனில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, எல்இடி லைட்டிங் பேக்கேஜ் உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் இருக்கிறது.

இந்த கீவே எஸ்ஆர்250 பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 250 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகமான டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. குறைவான மற்றும் மிட் ரேஞ்சிலும் அதிகமாக டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின் 16.08 எச்பி பவரை 7500 ஆர்பிஎம்மிலும், 16 என்எம் டார்க் திறனை 6500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 14.2 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு இருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்தவரை 160 மிமீ இருக்கிறது.

இந்த பைக் ராயல் என்பீல்டு இருக்குற தடத்தையே அழிக்கப்போகுது விலையை கேட்டா உடனே புக் பண்ண ரெடியாகிடுவீங்க!

இந்த பைக்கின் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பிரேக்கிங்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை ரூ.1.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த கீவே எஸ்ஆர்250 பைக்கை பொருத்தவரை மொத்தம் 3 நிறங்களில் வெளியாகிறது. கிளாஸி ஒயிட், கிளாஸி ரெட் மற்றும் கிளாஸி பிளாக் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. பெனெல்லியின் அதிகாரப்பூர்வ டீலர்களிடம் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த பைக் ராயல் என்பீல்டு இருக்குற தடத்தையே அழிக்கப்போகுது விலையை கேட்டா உடனே புக் பண்ண ரெடியாகிடுவீங்க!

இந்த பைக் மார்கெட்டிற்கு வரும் போது இதற்குப் போட்டியாக ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350, டிவிஎஸ் ரோனின் மற்றும் கவாஸகி டபிள்யூ175 ஆகிய பைக்குகள் மார்கெட்டில் இருக்கிறது. இந்த பைக் தற்போது கீவேவின் லைன் அப்களில் இணைந்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் 7 தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 11, 2023, 19:52 [IST]
English summary
Keeway launches sr250 bike in auto expo 2023 know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+