ஹோண்டா ஆக்டிவாவை ஓட்டி போரடிச்சு போச்சா! கீவேவின் 278சிசி ஸ்கூட்டர் வெளியீடாகிருச்சு.. அட்வென்சர் ஸ்கூட்டர்!

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான க்யூஜே மோட்டார் (QJ Motor), புதுமுக ஸ்கூட்டர் மாடல் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. வீஸ்டே 300 எக்ஸ்டிவி (Vieste 300 XDV) எனும் ஸ்கூட்டரையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் அட்வென்சர் ரக ஸ்கூட்டர் ஆகும்.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான இது சீனாவுக்கு சொந்தமாகி பல காலம் ஆகின்றன. இருப்பினும், ஹங்கேரியை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகவே உலக நாடுகளில் க்யூஜே தனது வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், இந்தியாவிலும் அதன் வர்த்தக பணிகளை க்யூஜே மோட்டார் மேற்கொண்டு வருகின்றது.

Keeway vieste 300 xdv unveiled

இந்த நிலையிலேயே தன்னுடைய ஸ்கூட்டர் மாடலான வீஸ்டே 300 எக்ஸ்டிவி-யை க்யூஜே மோட்டார்ஸ் உலக அளவில் வெளியீடு செய்திருக்கின்றது. இதனை பிரத்யேகமாக ஐரோப்பிய சந்தைக்காக அந்நிறுவனம் உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், முதலில் ஐரோப்பிய நாடுகளிலேயே அது விற்பனைக்கு வர இருக்கின்றது.

அதேவேளையில், இதன் வருகை இந்தியாவிலும் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இந்த நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் வீஸ்டே 300 ஸ்கூட்டரை நம் நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மட்டுமல்ல உலக சந்தைகள் சிலவற்றிலும் இந்த இருசக்கர வாகன மாடல் விற்பனையில் இருக்கின்றது.

Keeway vieste 300 xdv side view

இந்த நிலையிலேயே அதன் அட்வென்சர் பதிப்பான வீஸ்டே 300 எக்ஸ்டிவி-யை க்யூஜே மோட்டார் உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. வீஸ்டே 300 ஓர் பிரீமியம் தர ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதனைவிட அதிக பிரீமியம் மற்றும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட வாகனமாகவே புதிய வீஸ்டே 300 எக்ஸ்டிவி-யை க்யூஜே மோட்டார் உருவாக்கி இருக்கின்றது.

இதுவே நிறுவனத்தின் முதல் அட்வென்சர் ரக ஸ்கூட்டர் மாடல் ஆகும். மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உதவக் கூடிய அம்சம் என பலதரப்பட்டவை இந்த இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒரு சில அம்சங்கள் வீஸ்டே 300 இடம் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Keeway vieste 300 xdv another color

அதேவேளையில், பல மாறுபட்ட அம்சங்கள் இதில் இடம் பெற்றிருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. முன் பக்க ஏப்ரானில் ட்வின் எல்இடி ஹெட்லேம்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஃபூட்ரெஸ்டில் ஆன்டி ஸ்கிட் பிளேட்டுகள், மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்பட்டிருப்பதைப் போல அகலமான ஹேண்டில்பார், பெரிய எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகிய அம்சங்கள் வீஸ்டே 300 எக்ஸ்டிவி-யில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், ஒற்றை துண்டு உயரமான சேடில், கிராப் ரெயில், லக்கேஜ்களுக்கான மவுண்ட் ஆகிய அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இதன் முரட்டுத் தனமான தோற்றத்திற்காக இரு விதமான நிறம் மற்றும் பிரத்யேக கிராஃபிக்குகள் உள்ளிட்டவை வீஸ்டே 300 எக்ஸ்டிவி-யை அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

எஞ்ஜினை பொருத்த வரை 278 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரால் 18.4 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், சிவிடி கியர்பாக்ஸ் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கின்றது.

சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்கா வீஸ்டே 300 எக்ஸ்டிவி-யில் கேஒய்பி யுஎஸ்டி ஃபோர்க், டூயல் ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இவை மிகவும் கரடு-முரடான சாலைகளைகூடஅசால்ட் செய்துவிடும் திறன் கொண்டவை ஆகும். பிரேக்கிங்கைப் பொருத்த வரை 240 மிமீ பெடல் டிஸ்க் முன் பக்கத்திலும், ஜே.ஜுவன் காலிபர்கள் கொண்ட 220 மிமீ பெடல் டிஸ்க் பின் வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதன் இருக்கை உயரம் 800 மிமீட்டராக இருக்கின்றது. மேலும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மிமீட்டர் ஆகும். இரு விதமான நிற தேர்வுகளில் புதிய வீஸ்டே 300 எக்ஸ்டிவி உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. வெள்ளை மற்றும் நீலம் ஆகியவை அவை ஆகும்.

உலக அளவில் அட்வென்சர் ரக இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஸ்கூட்டரில் அட்வென்சர் வெர்ஷனை க்யூஜே மோட்டார் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் எஸ்ஆர் 250, எஸ்ஆர் 125, கே300 என், கே300ஆர், வி302சி, சிக்ஸ்டீஸ் 300ஐ, வீஸ்டே 300 மற்றும் கே-லைட் 250வி ஆகிய இருசக்கர வாகன மாடல்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த மாடல்களுடன் விரைவில் வீஸ்டே 300 எக்ஸ்டிவி அட்வென்சர் பதிப்பும் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் போட்டியே இல்லாத ஓர் மாடலாக இருக்கும். ஆகையால், விற்பனையில் தனி ஆளாக அது கெத்துக் காட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. ரொம்ப நாட்களாக ஆக்டிவா போன்ற வழக்கமான ஸ்கூட்டர்களை ஓட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இது சூப்பரான ரைடிங் அனுபவத்தை வழங்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 5, 2023, 17:42 [IST]
English summary
Keeway vieste 300 xdv adventure scooter unveiled globally there is any chance to india launch
மேலும்... #கீவே #keeway
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X