சிறுவனை வண்டி ஓட்டவிட்ட அண்ணனுக்கு நேர்ந்த கதியை பாருங்க.. அந்த நபருக்கு சம்பளம்கூட இவ்ளோ இருக்குமா தெரியல!

18 வயது பூர்த்தி அடையாத சிறுவனை வண்டி ஓட்ட அனுமதித்தற்காக அவரின் அண்ணனுக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது?, என்ன மாதிரியான நடவடிக்கை அந்த நபர் மீது எடுக்கப்பட்டு இருக்கின்றது? என்பது பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும்தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்கு போகலாம்.

இந்தியாவில் வாக்களிக்க மட்டுமல்ல வாகனங்களை இயக்கவும் வயது முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. 18 வயதுக் கொண்டவர்களால் மட்டுமே வாக்களிக்கவும் முடியும், வாகனத்தை ஓட்டுவதற்கான அனுமதியையும் பெற முடியும். இந்த மாதிரியான சூழலிலேயே சிறுவனை வாகனம் ஓட்ட அனுமதித்ததாகக் கூறி, அந்த சிறுவனின் அண்ணனுக்கு காவல்துறையினர் மிக மிகக் கடுமையான தண்டனையை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Minor rides two wheeler

பொதுவாக, இந்தியாவில் போக்குவரத்து விதிமீறிலில் ஈடுபடும் குறிப்பிட்ட வாகன ஓட்டி மீது காவல் துறையினரின் நடவடிக்கைகள் பாயும். ஆனால், இந்த விஷயத்தில், சிறாரை (18 வயதுக்கும் குறைவானவர்கள்) வாகனத்தை ஓட்ட அனுமதித்த வாகனத்தின் உரிமையாளரின்மீதே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விதிகள் கூறுகின்றன.

அந்தவகையிலேயே, சிறுவனை தற்போது இருசக்கர வாகனத்தை இயக்க அனுமதித்ததற்கு சிறுவனின் அண்ணனுக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச அபராதம், அத்துடன், சிறைத் தண்டனை மற்றும் லைசன்ஸ் ரத்து என பலதரப்பட்ட நடவடிக்கைகள் அந்த நபர்மீது பாய்ந்திருக்கின்றது. கேரளா மாநிலத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

Kerala high court

ரூ. 34 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது. ரோஷன் ஷிஜு என்பவரே சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்தவர் ஆவார். இவருக்கே அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 12 மாதங்களுக்கு குறிப்பிட்ட அந்த வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, மூன்று மாதங்களுக்கு இருசக்கர வாகன உரிமையாளரின் லைசென்ஸும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. சிறுவன் இயக்கிய இருசக்கர வாகனத்தில் பதிவெண்கூட இல்லை என கூறப்படுகின்றது. இதுபோன்ற பன்முக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதன் காரணத்தினாலேயே மிக மிகக் கடுமையான நடவடிக்கை ஷிஜூ மீது எடுக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், புடவை குவார்டு, டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் ரியர் வியூ மிர்ரர் ஆகியவையும் அந்த குறிப்பிட்ட வாகனத்தில் இல்லை என கூறப்படுகின்றது. இந்த குற்றம் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே ஷிஜூ மீது பிரிவு 199ஏ, பிரிவு 119 (4) மற்றும் பிரிவு 180 ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர இன்னும் பல பிரிவுகளின்கீழ் அந்நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே போக்குவரத்து விதிகளை கட்டாயம் மதிக்க வேண்டும் என கூறப்படுகின்றது. ஒரு சில வாகனங்களில் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்போம். உயிர்களை பாதுகாப்போம் என்கிற வாசகம் இடம் பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்போம், உச்சபட்ச அபராதம் மற்றும் தண்டையில் இருந்து தப்பிப்போம் என்பதற்காகவே கூறப்படுகின்றது. அந்த அளவிற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகள் போக்குவரத்து விதிமீறல்கள் விஷயத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு சான்றாகவே கேரளா அபராத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்கள், சக வாகன ஓட்டிகளின் புகார்களின் அடிப்படையில் எல்லாம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இனியாவது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவதை தவிர்த்துவிடுங்கள் என்பதே எங்களின் அறிவுரையாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, July 24, 2023, 16:47 [IST]
English summary
Kerala court sentences a man who allows minor to drive two wheeler
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+