மூன்றுமே சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! எதை வாங்குவது என்று குழப்பமா இருக்கா? இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க!

கைனெடிக் க்ரீன் (Kinetic Green) நிறுவனம் அதன் புதிய ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் சில தினங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். இந்தியாவில் மற்றுமொரு விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ஜூலு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

விற்பனையில் இந்த கைனெடிக் க்ரீன் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏத்தர் 450எஸ் மற்றும் ஓலா எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டியாக விளங்குகின்றன. குறிப்பாக, எஸ்1 எக்ஸ் எல்லா விதங்களிலும் கைனெடிக் க்ரீன் ஜூலுவுக்கு போட்டியாக உள்ளது. ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பல்வேறு விதமான ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் எஸ்1 எக்ஸ் ஆகும். இந்த 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகள்...

kinetic green zulu rivals

எலக்ட்ரிக் பவர்டிரெயின்: புதிய கைனெடிக் க்ரீன் ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக 2.1 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை காட்டிலும் டபுள் மடங்காக, ஏத்தர் 450எஸ் மற்றும் ஓலா எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முறையே 5.4 கிலோவாட்ஸ் மற்றும் 4.5 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகின்றன.

புதிய கைனெடிக் ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 0-இல் இருந்து 40kmph வேகத்தை எவ்வளவு விரைவாக எட்டிவிடலாம் என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை. ஏத்தர் 450எஸ் ஸ்கூட்டரில் 3.9 வினாடிகளிலும், ஓலா எஸ்1 எக்ஸ்-இல் இன்னும் விரைவாக 3.3 வினாடிகளிலும் 40kmph வேகத்தை எட்டிவிடலாம். கைனெடிக் ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 60kmph ஆகும். அதுவே, ஏத்தர் மற்றும் ஓலா மாடல்களின் டாப்-ஸ்பீடு 90kmph ஆகும்.

kinetic green zulu rivals

பேட்டரி & ரேஞ்ச்: கைனெடிக் க்ரீன் ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.27kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 104கிமீ தொலைவிற்கு செல்லலாம் என்கிறது கைனெடிக் க்ரீன் நிறுவனம். ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.9kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதனை சார்ஜ் செய்வதன் மூலம், இந்த ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 115கிமீ தொலைவிற்கு அதிகப்பட்சமாக பயணிக்கலாம்.

மறுப்பக்கம், ஓலா எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2kWh மற்றும் 3kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் 2kWh பேட்டரி பேக்கை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 91கிமீ தொலைவிற்கும், 3kWh பேட்டரி பேக்கை சார்ஜ் நிரப்பினால் 151கிமீ தொலைவு வரையிலும் பயணிக்கலாம் என்கிறது ஓலா நிறுவனம்.

kinetic green zulu rivals

விலை: புதிய கைனெடிக் க்ரீன் ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.94,990 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது ஓலா எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இணையானது ஆகும். எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.90,000-இல் இருந்து ரூ.1 இலட்சம் வரையில் உள்ளன.

எஸ்1 எக்ஸ் ஸ்கூட்டரின் விலைகள் இந்த 2023ஆம் ஆண்டு வரையில் மட்டுமே இருக்கும் என்றும், அதன்பின் ரூ.20,000 விலை உயர்த்தப்படும் என்றும் ஓலா ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனை காட்டிலும் விலையுயர்ந்த ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் உள்ளன. ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரையில், இதன் பெங்களூர் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.3 இலட்சமாக உள்ளது.

kinetic green zulu rivals

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மூன்றில் எதை வாங்கலாம் என்பது உங்களது தேவையை பொறுத்தது. அதாவது, ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் செயல்படுதிறன் மிக்கது. சஸ்பென்ஷன், பிரேக் உள்ளிட்டவையும் சிறப்பானதாக இந்த ஏத்தர் ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றன. அதற்கேற்ப ஸ்கூட்டரின் விலை அதிகமாக உள்ளது. ஆனால், மற்றவை இரண்டும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 14, 2023, 8:43 [IST]
English summary
Kinetic green zulu vs ather 450s vs ola s1 x powertrain battery comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X