நம்பிக்கை வீண் போகல! கைனடிக் லூனா திரும்ப வருது! விலை இவ்ளோதானா! இதுக்காகதான்யா இத்தன வருஷமா காத்து கிடந்தோம்!
இந்திய சாலைகளை ஒரு காலத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த வாகனங்களில் ஒன்று கைனடிக் லூனா (Kinetic Luna). நமது அப்பாக்களும், தாத்தாக்களும் உயிருக்கு உயிராக நேசித்த மொபட் (Moped) இது. ஆனால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே கைனடிக் லூனாவின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.
காலங்கள் மிக வேகமாக உருண்டோடியிருந்தாலும், கைனடிக் லூனா மக்களின் இதயங்களில் இருந்து நீங்கவில்லை. என்றாவது ஒரு நாள் கைனடிக் லூனா திரும்ப வரும் என்ற நம்பிக்கையுடன் பலரும் காத்து கொண்டுள்ளனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. ஆம், கைனடிக் லூனா மீண்டும் விற்பனைக்கு வரப்போகிறது!

பழைய கைனடிக் லூனாவில் 50 சிசி இன்ஜின் வழங்கப்பட்டிருந்தது. இந்த இன்ஜினுடன், கைனடிக் லூனா திரும்ப வரப்போவதில்லை. மாறாக கால மாற்றத்திற்கு ஏற்ப எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) அவதாரத்தில் கைனடிக் லூனா 'கம்பேக்' கொடுக்க போகிறது. இந்த விஷயம் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைனடிக் க்ரீன் (Kinetic Green) நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுலஜா ஃபிரோடியா மோத்வானிதான் இந்த தகவலை தெரிவித்துள்ளார். விரைவில் விற்பனைக்கு வரவுள்ள கைனடிக் லூனா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயரை அவர் தற்போது அறிவித்துள்ளார். இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இ லூனா '(e Luna) என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.

இதில் 'e' என்பது Electric என்பதை குறிக்கிறது. கைனடிக் இ லூனா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஒரு முறை முழுமையாக நிரப்பினால் சுமார் 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய கூடிய வகையிலான பேட்டரி (Battery) வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரேஞ்ச் (Range), தினசரி பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும். அனேகமாக இதன் விலை (Price) 50 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அடுத்த ஆண்டில், கைனடிக் இ லூனா முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இ லூனா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தேவையான பாகங்களை எல்லாம் உற்பத்தி செய்யும் பணிகளை கைனடிக் க்ரீன் நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. எனவே 2024ம் ஆண்டில், கைனடிக் இ லூனா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். 50 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் எதிர்பார்க்கப்படுவதால், கைனடிக் இ லூனா விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அந்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த வாகனங்கள் எல்லாம் தற்போது எலெக்ட்ரிக் அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன. பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) ஸ்கூட்டர் இதற்கு ஒரு உதாரணம். பஜாஜ் நிறுவனம் சேத்தக் ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் வடிவத்திற்கு மாற்றி தற்போது விற்பனை செய்து வருகிறது.
இந்த வரிசையில்தான் கைனடிக் லூனாவும், எலெக்ட்ரிக் அவதாரத்தில் மீண்டும் சந்தைக்கு வரவுள்ளது. ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) கார் கூட, எலெக்ட்ரிக் வடிவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








