100கிமீ-க்கு மேல அசால்ட்டா போகும்!! இப்படியொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தோம்!

கைனெடிக் க்ரீன் (Kinetic Green) நிறுவனம் அதன் புத்தம் புதிய ஜூலு (ZULU) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் "நமது இதயத்தில் உள்ள சிகரம்" என்ற கைனெடிக் நிறுவனத்தின் கோட்பாடின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

கைனெடிக் க்ரீன் நிறுவனத்தின் புதிய ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு புதிய தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன், புதிய ஜூலு இ-ஸ்கூட்டரில் அதிவேகமாக பயணிக்க முடியும் என்பது மட்டுமின்றி, குறைந்த சார்ஜில் நீண்ட தொலைவிற்கு செல்லலாம் என்கிறது கைனெடிக் க்ரீன் நிறுவனம்.

kinetic zulu electric scooter launched

பிக்ஸல் வெள்ளை, இன்ஸ்டா ஆரஞ்ச், யுடியுப் சிவப்பு, பிளாக் எக்ஸ், எஃப்.பி ப்ளூ மற்றும் க்ளவுட் க்ரே என மொத்தம் 6 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். மேட்-இன்-இந்தியா தயாரிப்பாக, மத்திய அரசின் ஃபேம்-2 மானியத்திற்கு உட்படும் இந்த அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.94,990 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

புதிய ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியா முழுவதும் உள்ள கைனெடிக் க்ரீன் டீலர்ஷிப் ஷோரூம்களில் வாங்கலாம். அத்துடன், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் என இணையம் வழியாகவும் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும். ஜூலு ஸ்கூட்டரை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு மரக்கன்றை வழங்க கைனெடிக் க்ரீன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

kinetic zulu electric scooter launched

ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக "கே.ஜி எனெர்-ஜி" என்ற கட்டிங்-எட்ஜ் பேட்டரி பிளாட்ஃபாரத்தை கைனெடிக் க்ரீன் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டதன் மூலம், ஆயில்-கூல்டு ஆக்டிவ் இம்மெர்சன் கூலிங் டெக்னாலஜியை ஜூலு ஸ்கூட்டர் பெற்றுள்ளது. இதன் மூலமாக, பேட்டரியின் வெப்பநிலை எப்போதும் கண்காணிக்கப்படும் என்கிறது கைனெடிக் க்ரீன்.

அத்துடன், 15 ஆம்பியர் மின்சாரம் மூலமாகவும் புதிய ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் 0-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிட முடியுமாம். கைனெடிக் க்ரீன் கூறுவதுபடி, இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆயுட்காலம் 1.20 இலட்ச கிமீ-க்கும் அதிகம் ஆகும். புதிய ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்மார்ட் பி.எம்.எஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

kinetic zulu electric scooter launched

இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் 2.27kWh லித்த்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளது. பேட்டரியின் ஹெல்த்தை முன்கூட்டியே கணிக்கக்கூடிய AI-சார்ந்த சிஸ்டத்துடன் வழங்கப்படும் இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 104கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். முதல்முறையாக ஜூலு ஸ்கூட்டரின் மூலம் பேட்டரியை மாத சந்தா திட்டத்தின் வாயிலாக வழங்கவும் கைனெடிக் க்ரீன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

நகர்புற சாலைகளில் மணிக்கு 60கிமீ வேகத்திலும், நெடுஞ்சாலைகளில் 80இல் இருந்து 90கிமீ வேகத்திலும் இயங்கக்கூடிய புதிய கைனெடிக் ஜூலு இ-ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக்குகள், இருக்கைக்கு அடியில் இடவசதி, எல்இடி டிஆர்எல்-கள், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், பைகளை மாட்டிக் கொள்ள முன்பக்கத்தில் கொக்கி, ஆட்டோ பவர்-கட் சார்ஜர், மொபைல் போனை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கைனெடிக் க்ரீன் நிறுவனத்தின் புதிய ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நகரத்திற்குள் அருகில் உள்ள இடங்களுக்கு செல்வதற்கு ஏற்ற வாகனமாகும். ஸ்கூட்டரின் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் 80% சார்ஜ் நிரப்பிவிடலாம் என்பது உண்மையில் அசத்தலான விஷயமாகும். இளம் தலைமுறையினரை கவரும் வகையில், இன்ஸ்டா, யுடியூப், எஃப்.பி போன்ற சமூக வலைத்தள பக்கங்களின் லோகோக்களின் நிறத்தில் பெயிண்ட் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, December 11, 2023, 14:34 [IST]
English summary
Kinetic zulu electric scooter launched price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X