ஓலா,ஏத்தர் கூட போட்டி போட ஒருத்தன் வந்துட்டான்! 2 பேட்டரி செட்டப்புடன் கோமகி எல்ஒய் ப்ரோ ஸ்கூட்டர் அறிமுகம்
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான கோமகி நிறுவனம் தனது எல் ஓய் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் டூயல் பேட்டரி பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
இந்த எல்ஓய் ப்ரோ ஸ்கூட்டரின் முக்கியமான அம்சம் இதில் 62V32AH டூயல் பேட்டரி செட்டப் இருக்கிறது. இரண்டு பேட்டரியும், ரிமூவபிள் பேட்டரி தான். இதை டூயல் சார்ஜர் கொண்டு தான் சார்ஜ் செய்ய வேண்டும் அதாவது இரண்டு தனித்தனி ஒயர்கள் கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும். இந்த பேட்டரி 4 மணி நேரம் 55 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

இந்த ஸ்கூட்டரின் முன்பக்கம் டிஎஃப்டி டிஸ்பிளே இருக்கிறது. இதில் ஆன் போர்டு நேவிகேஷன், சவுண்ட் சிஸஅடம், ப்ளூடூத் காலிங் ஆப்ஷன், மேலும் சில ரெடி டூ ரைடு ஆப்ஷன்கள் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் ரீ ஜென் சிஸ்டம் இருக்கிறது. மேலும் 3 டிரைவிங் மோட்கள் உள்ள எக்கோ, ஸ்போர்ட்ஸ், டர்போ ஆகிய மோட்கள் உள்ளன.
இந்த கோமகி எல்ஒய் ப்ரோ ஸ்கூட்டரை பொருத்தவரை 58-62 கி.மீ ரேஞ்ச் கொண்டது. இந்த ஸ்கூட்டரில் அட்வான்ஸ்டு அண்டி ஸ்கிட் டெக்னாலஜி இருக்கிறது. இதனால் மலை பகுதிகளில் பயணிக்கும் போது ஏற்ற இறக்கங்களில் ஸ்கிட் ஆகாமல் இருக்கும். இந்த ஸ்கூட்டரில் 12 இன்ச் ட்யூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. இது பைக்கிற்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது.

இந்த கோமகி எல்ஒய் ப்ரோ ஸ்கூட்டரை பொருத்தவரை எல்இடி ஃபிரென்ட் விங்கர்ஸ் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் 3000 வாட் ஹப் மோட்டார்கள் மற்றும் 38அம்ப் கண்ட்ரோலர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பார்க்கிங் அசிஸ்ட்/க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸ் அசிஸ்ட் ஃபங்ஷன்கள் இருக்கின்றன.
இந்த கோமகி எல்ஒய் ஸ்கூட்டரின் அறிமுக விழாவில் பேசிய அந்நிறுவனத்தின் இயக்குநர் குஞ்ஜன் மல்ஹோத்ரா பேசுகையில் : "புதிய தலைமுறை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் குறைந்த செலவில், ஸ்மூத்தான, பிரிமியம் பயணங்களை விரும்புவார்களுக்கு கோமகி சிறந்த தேர்வாக இருக்கிறது. இதில் கோமகி எல்ஒய் ப்ரோ ஸ்கூட்டர் கம்பஷன் இன்ஜின் ஸ்கூட்டர்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கும்" எனக் கூறினார்.
இந்த ஸ்கூட்டரின் விலையைப் பொருத்தவரை ரூ1,37,500 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டூயல் பேட்டரி செட்டப் உடன் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் ஓலா, ஏத்தர் நிறுவனங்களுக்குப் போட்டியாக அந்த ஸ்கூட்டரில் உள்ள அம்சங்களுடன் இந்த ஸ்கூட்டர் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








