1 ரூபா, 2 ரூபாய் இல்ல... ரூ.21,000 விலை குறைஞ்சிடுச்சு!! இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க செம்ம சான்ஸ் இதுதான்!

கோமகி எல்.ஒய் (Komaki LY) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் எவ்வளவு குறைவான விலையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கலாம் என்பதையும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.

வருட இறுதி பண்டிகை நாட்களில் வழக்கத்தை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகுவது வழக்கம். இதனை மனதில் வைத்து, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புது புது வாகனங்களை இந்த நேரத்தில் அறிமுகப்படுவதை ஆண்டுத்தோறும் பார்த்து வருகிறோம். முற்றிலும் புதிய வாகனத்தை அறிமுகப்படுத்த முடியாவிட்டாலும், குறைந்தது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வாகனத்தின் சிறப்பு பதிப்புகளை ஆவது அறிமுகம் செய்ய முயற்சிக்கின்றனர்.

komaki ly scooter price reduced

அதேநேரம், சில நிறுவனங்கள் பணம் தள்ளுபடி போன்ற சலுகைகள் மூலமாக வாகனங்களின் விலைகளை குறைவாக காட்ட முயல்கின்றனர். அவ்வாறே, கோமகி நிறுவனம் அதன் எல்.ஒய் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு, கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளது. விலை குறைக்கப்படுவதற்கு முன்பு வரையில், கோமகி எல்.ஒய் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,34,999 ஆகும்.

தற்போது, அதிரடியாக சுமார் ரூ.21,000 குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் கோமகி எல்.ஒய் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1,13,999 ஆக குறைந்துள்ளது. இந்த தள்ளுபடி ஆனது இந்தியா முழுவதும் கிடைக்கும். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கோமகியின் இந்த சலுகை தீபாவளி வரையில் மட்டுமே அமலில் இருக்கும்.

komaki ly scooter price reduced

கோமகி எல்.ஒய் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 62 வோல்ட் 32 ஆம்பியரில் இரு பேட்டரிகள் பொருத்தப்படுகின்றன. இந்த பேட்டரிகளை ஸ்கூட்டரில் இருந்து கழற்றி, எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று, சார்ஜ் செய்துக் கொள்ளலாம். இந்த பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் செய்ய கிட்டத்தட்ட 5 மணிநேரங்கள் தேவைப்படும் என கோமகி நிறுவனம் கூறுகிறது.

இந்த பேட்டரிகள் 3000-வாட் ஹப் மோட்டார்களில் பொருத்தப்படுகின்றன. இந்த எலக்ட்ரிக் மோட்டார்கள் 38 AMP கண்ட்ரோலர்களை கொண்டுள்ளது. பேட்டரிகள் இரண்டும் ஒன்றாக சேர்ந்து சுமார் 200கிமீ தொலைவிற்கு சிங்கிள்-சார்ஜில் ஸ்கூட்டரை இயக்கிச் செல்லக்கூடியவைகளாக உள்ளன. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 55- 60kmph ஆகும்.

komaki ly scooter price reduced

தொழிற்நுட்ப அம்சங்களாக, ஆன்போர்டு நாவிகேஷன், சவுண்ட் சிஸ்டம், ப்ளூடூத் இணைப்பு, காலிங் ஆப்ஷன்ஸ் மற்றும் மற்ற ரெடி-டூ-ரைட் வசதிகள் கோமகி எல்.ஒய் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றன. ஈக்கோ, ஸ்போர்ட்ஸ் மற்றும் டர்போ என்கிற 3 விதமான ரைட் மோட்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கிடைக்கின்றன.

அத்துடன், முன்பக்கத்தில் எல்இடி விங்கர்ஸ், பார்கிங் அசிஸ்ட்/ க்ரூஸ் கண்ட்ரோலையும் ஸ்கூட்டர் கொண்டுள்ளது. அத்துடன், இந்த ஸ்கூட்டரில் ரிவர்ஸிலும் செல்ல முடியும். இந்த நிலையில், கோமகி நிறுவனத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வெனீஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதியதாக சில பாதுகாப்பு வசதிகளும், ஸ்கூட்டரில் இருந்து நீக்கக்கூடிய லைஃப் பிஒ4 செயலி-சார்ந்த ஸ்மார்ட் பேட்டரிகளும் வழங்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய வாகனங்களை அறிமுகம் செய்வதை காட்டிலும், இவ்வாறு வாகனங்களின் விலைகளை குறைப்பது அவற்றின் விற்பனையை அதிகரிக்கும். ஏனெனில் நம் நாட்டில் வாகனங்களின் விலைகளை உன்னிப்பாக பார்த்து வாங்குவோரே அதிகமாக உள்ளனர். புதியதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டு வருபவர்கள், கோமகி எல்.ஒய் ஸ்கூட்டரை ஓர் கண்ணோட்டம் பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 25, 2023, 15:11 [IST]
English summary
Komaki ly electric scooter price reduced for diwali
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X