KTM 390 Adventure X அறிமுகம்.. ரூ.1 லட்சம் வரை குறைவான விலையில் வந்திருக்கு.. ஆக்டிவாபோல சேல்ஸ் பிச்சுக்கபோது!

அட்வென்சர் ரைடை அதிகம் விரும்புபவர்களை கவரும் விதமாக கேடிஎம் (KTM) நிறுவனம் அதன் 390 அட்வென்சர் எக்ஸ் (390 Adventure X) எனும் புதிய பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இது 390 அட்வென்சர் மோட்டார்சைக்கிளின் மலிவு விலை தேர்வாகும்.

இதற்கு அறிமுகமாக ரூ. 2.8 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஏற்கனவே கேடிஎம் நிறுவனம், 390 அட்வென்சர் மோட்டார்சைக்கிளை இந்திய அட்வென்சர் ரைடு பிரியர்களைக் கவரும் விதமாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Ktm 390 adventure x front profile

இதன் விலை ரூ. 3.38 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் மட்டுமே ஆகும். ஆன்ரோடில் இதன் விலை ரூ. 4 லட்சத்திற்கு நெருக்கமாக இருக்கும். இத்தகைய அதிகபட்ச விலையைக் காரணம் காட்டியே, நிறுவனம் இதன் மலிவு விலை தேர்வாக 390 அட்வென்சர் எக்ஸ் ஆப்ஷனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

அதிகம் பிரீமியம் வசதியை விரும்புபவர்கள் 390 அட்வென்சரையும், பட்ஜெட் விலையில் லாங் டிரைவ் செல்ல விரும்புபவர்கள் 390 அட்வென்சர் எக்ஸ் தேர்வையும் வாங்கிக் கொள்ளலாம். இத்தகைய ஆப்ஷனை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே புதிய ஆப்ஷனை கேடிஎம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Ktm 390 adventure x side profile

இதன் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு வசதிகளை 390 அட்வென்சர் எக்ஸ்-இல் இருந்து தூக்கி இருக்கின்றது. ஆகையால், 390 அட்வென்சரில் காட்சியளிக்கும் பல்வேறு அம்சங்களை 390 அட்வென்சர் எக்ஸ்-இல் நம்மால் காண முடியாது. அந்தவகையில், மிக முக்கியமான அம்சங்களான டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் உள்ளிட்டவை அட்வென்சர் எக்ஸ் தேர்வில் வழங்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

அதேவேளையில், டூயல் சேனல் ஏபிஎஸ்-ஐ பாதுகாப்பு தரத்திற்காக இந்த மலிவு விலை தேர்வில் கேடிஎம் தக்க வைத்திருக்கின்றது. இதேபோல் இன்னும் பல அம்சங்கள் இந்த பைக்கில் 390 அட்வென்சரிடம் இருந்து தக்க வைக்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், எல்இடி லைட்டுகள், சஸ்பென்ஷன் செட்-அப் என பல அம்சங்கள் 390 அட்வென்சருடன் ஒத்துப்போகும் வகையில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Ktm 390 adventure x ride

அதேநேரத்தில், இதன் மலிவு விலைக்காக ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஎஃப்டி திரைக்கு பதிலாக எல்சிடி திரை 390 அட்வென்சர் எக்ஸ் தேர்வில் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், தனித்துவமான ஆஃப்-ரைடு மோடும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஆஃப்-ரோடு பயணங்களை அலாதியானதாக மாற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

373.27சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு, 4 வால்வு எஞ்ஜினே இந்த மோட்டார்சைக்கிளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் டூயல் ஓவர் ஹெட் கிராஃப்ட் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இம்மோட்டாரால் 42.9பிஎச்பி மற்றும் 37என்எம் டார்க் வரையில் வெளியேற்ற முடியும். புதிய 390 அட்வென்சர் எக்ஸ் பைக்கை இரு விதமான வண்ண தேர்வுகளில் நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். ஆரஞ்சு மற்றும் டார்க் கல்வனோ நிற தேர்வுகளே அது ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கேடிஎம் 390 அட்வென்சர் எக்ஸ் தேர்விற்கு ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலை 390 அட்வென்சர் தேர்வைக் காட்டிலும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆகையால், இந்த தேர்விற்கு இந்திய அட்வென்சர் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியர்கள் மத்தியில் அண்மைக் காலமாக அட்வென்சர் மோட்டார்சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 15, 2023, 11:39 [IST]
English summary
Ktm 390 adventure x low cost variant launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X