கேடிஎம் பைக்குகளை வாங்க எங்கிருந்துங்க இவ்ளோ கூட்டம் வருது... ஒவ்வொரு மாதத்திலும் இத்தனை பைக்குகள் விற்பனையா!!

பிரீமியம் தரத்திலான மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதில் பிரபலமானதாக விளங்கும் கேடிஎம் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்த பைக்குகள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. சரி வாங்க, இந்தியாவில் கேடிஎம் பைக்குகளின் விற்பனை எந்த அளவிற்கு உள்ளது என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் வெற்றி பெற்ற, வாடிக்கையாளர்களை அதிக எண்ணிக்கையில் பெற்ற வெளிநாட்டு பைக் நிறுவனம் என்று பார்த்தால், அதில் கேடிஎம் ஒன்றாக இருக்கும். அந்த அளவிற்கு கேடிஎம் பைக்குகளுக்கு நம் நாட்டில் இளைஞர்கள் மத்தியில் ஓர் கிரேஸ் உள்ளது. இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கீழ் ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் செயல்படுகிறது. புனேவில் உள்ள பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் தான் கேடிஎம் பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ktm bikes sales 2023 march

இங்கு தயாரிக்கப்படும் கேடிஎம் பைக்குகள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் சேர்த்து மொத்தம் 11,952 பைக்குகளை கேடிஎம் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த மொத்த எண்ணிக்கை ஆனது 2022 மார்ச் மாதத்தில் 7,289 ஆக மட்டுமே பதிவானது.

இந்த வகையில் பார்த்தோமேயானால், கேடிஎம் இந்தியா நிறுவனத்தின் ஒட்டு மொத்த பைக்குகள் விற்பனை 63.97% அதிகரித்துள்ளது. மொத்த 11,952 பைக்குகள் விற்பனையில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை என்று பார்த்தால், 6,284 யூனிட்கள் ஆகும். மீதி 5,668 கேடிஎம் பைக்குகள் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டும் 2022 மார்ச் உடன் ஒப்பிடுகையில், கடந்த 2023 மார்ச்சில் அதிகரித்துள்ளன.

ktm bikes sales 2023 march

குறிப்பாக, உள்நாட்டு விற்பனை சுமார் 71.27% அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வெறும் 3,669 கேடிஎம் பைக்குகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. கடந்த மார்ச் மாத விற்பனையில் கேடிஎம் நிறுவனத்திற்கு பெரிதும் கை கொடுத்துள்ள மாடல் என்று பார்த்தால், 390சிசி பைக்குகள் ஆகும். கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 1,208 கேடிஎம் 390சிசி பைக்குகள் உள்நாட்டில் விற்பனையாகி உள்ளன. ஆனால் 2022 மார்ச்சில் ஒரேயொரு கேடிஎம் 390சிசி பைக் மட்டுமே விற்பனையாகி இருந்தது.

ஆர்சி390 பைக்கை கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் அப்டேட் செய்து இருந்தது. ஆர்சி390 மட்டுமின்றி, மற்ற கேடிஎம் ஆர்சி பைக்குகளும் அந்த சமயத்தில் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. கேடிஎம் 390சிசி பைக்குகளை பொறுத்தவரையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய 390 அட்வென்ச்சர் எக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, அப்டேட் செய்யப்பட்ட 390 அட்வென்ச்சர் பைக் ஸ்போக்டு சக்கரங்களுடன் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இதனால் வரும் மாதங்களில் கேடிஎம் 390சிசி பைக்குகளின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

ktm bikes sales 2023 march

என்ன தான் 390சிசி பைக்குகளின் விற்பனை இவ்வாறு அதிகரித்த போதிலும், இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தின் பிரதான நம்பிக்கைக்குரிய தயாரிப்புகள் 200சிசி பைக்குகளே ஆகும். கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 2,915 கேடிஎம் 200சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 250சிசி பைக்குகள் கேடிஎம் பிராண்டில் இருந்து அதிகம் விற்பனையாகக் கூடியவைகளாக உள்ளன. கேடிஎம் 125சிசி பைக்குகளை இந்தியர்கள் பெரியதாக கண்டுக்கொள்வதில்லை.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கேடிஎம் பைக்குகளின் விற்பனை இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் மெல்ல மெல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. அதிலிலும் குறிப்பாக, கடந்த ஆண்டில் வெறும் ஒரேயொரு யூனிட் மட்டுமே விற்பனையாகி இருந்த கேடிஎம் 390சிசி பைக்குகள் கடந்த மார்ச் மாதத்தில் 1,208 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது உண்மையில் ஆச்சிரியமளிக்கக்கூடிய விஷயமாகும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 1, 2023, 14:59 [IST]
English summary
Ktm bikes sales report 2023 march
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X