பைக் என்ஜினையே மாத்தி கொடுப்பாங்க!! அனைத்து பைக் உதிரி பாகங்களுக்கும் ஒரே கடை - என்.எம்.டபிள்யூ!!
என்.எம்.டபிள்யூ ரேசிங் (NMW Racing), மோட்டார்சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் மார்க்கெட்டில் பிரபலமாக விளங்கும் நிறுவனம். பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்தில் இருந்து ரேஸ் பைக்குகளுக்கு கூட பல்வேறு ஆக்ஸஸரீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கின்றன. இவற்றின் மூலம், சாதாரண பைக்குகளை கூட ரேஸ் பைக்குகளாக மாற்ற முடியும்.
இன்னும் சொல்லப்போனால், இவ்வாறு பைக்குகளை செயல்திறன்மிக்கவைகளாக மாற்றிக் கொடுக்கும் வேலையை கூட என்.எம்டபிள்யூ ரேசிங் குழு செய்துக் கொடுக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில், பெங்களூரில் உள்ள என்.எம்.டபிள்யூ கடைக்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு நடந்தவற்றை வீடியோவாக காட்சிப்படுத்தி உள்ளோம். அதனை கீழே காணலாம்.
இந்த வீடியோவில், என்.எம்.டபிள்யூ ரேசிங் குழுவின் மெக்கானிக் & உதிரி பாகங்கள் கடை எவ்வாறு உள்ளது என்பதை காணலாம். இங்கு, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான பைக்குகளுக்கும் உதிரி பாகங்கள் கிடைக்கின்றன. இந்த வீடியோவை நாங்கள் காட்சிப்படுத்திய சமயத்தில், பழைய கேடிஎம் ட்யூக் 390 பைக் ஒன்று என்ஜின் பிரச்சனையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த கேடிஎம் பைக்கின் என்ஜினில் உள்ள பிரச்சனையை மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். பின்னர், இந்த பைக்கின் என்ஜின் தனியாக வெளியே கழற்றப்பட்டு, சோதனைகள் செய்யப்பட்டு, பழுதுப் பார்க்கப்பட்டது. அவற்றை கீழே பதிவிடப்பட்டுள்ள 2ஆம் பாக வீடியோவில் காணலாம். மேலும், இவர்கள் பழுதுப்பார்க்கப்பட்ட பைக்கை எவ்வாறு, எவ்வளவு விரைவாக டெலிவிரி செய்கிறார்கள் என்பதையும் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளோம்.
குறிப்பாக, கேடிஎம் பைக்குகளுக்கு என்.எம்.டபிள்யூ ரேசிங் நிறுவனம் பிரத்யேகமான உதிரி பாகங்களை கொண்டுள்ளது. மேலும், ஏற்கனவே கூறியதுபோல், இந்த நிறுவனத்திடம் அனைத்து விதமான பைக்குகளுக்கும் உதிரி பாகங்கள் கிடைக்கின்றன. சில பாகங்களை இவர்கள் பைக்கிற்கு ஏற்ப மாடிஃபை செய்தும் வழங்குகின்றனர். அவற்றை நீங்கள், என்.எம்.டபிள்யூ ரேசிங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும் காணலாம்.


Click it and Unblock the Notifications








