புதிய தலைமுறை 390ட்யூக், 250 ட்யூக் பைக்குகள் அறிமுகம்! விலை இவ்ளோதானா?..

கேடிஎம் (KTM) நிறுவனம் அதன் 250 ட்யூக் (250 Duke) மற்றும் 390 ட்யூக் (390 Duke) ஆகியவற்றின் புதிய தலைமுறை மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்த பைக்குகள் பற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் புதிய 390 ட்யூக் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த பைக்கிற்கு எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த பைக்கை கேடிஎம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 3.11 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Ktm launched new gen 250 duke & 390 duke

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது ஓர் புதிய தலைமுறை மாடல் ஆகும். ஆகையால், 2023 கேடிஎம் 390 ட்யூக்கைக் காட்டிலும் கணிசமான புதிய அம்சங்கள் மற்றும் வசதிகளை 2024 390 ட்யூக் பைக்கில் நம்மால் காண முடிகின்றது.

தோற்றத்தில் மட்டுமில்லைங்க எஞ்ஜின் விஷயத்திலும் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. முந்தைய மாடலில் 373 சிசி சிங்கிள் சிலிண்டர், டிஓஎச்சி லிக்யூடு கூல்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டது. ஆனால், பதிய ஒன்றில் 399 சிசி சிங்கிள் சிலிண்டர், டிஓஎச்சி லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 45.37 சிசி பிஎச்பி பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 39 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். முந்தைய வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டு வந்த 373 சிசி எஞ்ஜின் வெறும் 42.9 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க்கை மட்டுமே வெளியேற்றியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோல், சஸ்பென்ஷன் விஷயத்திலும் மிக சிறப்பான பைக்காக இந்த 390 ட்யூக் காட்சியளிக்கின்றது. இந்த பைக்கில் ரீ-பவுண்ட் அட்ஜெஸ்ட்மென்ட் செட்-அப் வசதி மற்றும் ப்ரீ லோடு வசதிக் கொண்ட சஸ்பென்ஷன்களே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் முன் பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, ரைடு-பை-ஒயர் த்ரோட்டில், ஸ்லிப்பர் கிளட்ச், டிராக்சன் கன்ட்ரோல், பன்முக ரைடு மோடுகள், கார்னரிங் ஏபிஎஸ், சூப்பர் மோட்டோ ஏபிஎஸ், டிராக் ஸ்கிரீன், லான்ச் கன்ட்ரோல், ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு வசதிக் கொண்ட 5 அங்குல டிஎஃப்டி திரை உள்ளிட்ட அம்சங்களும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த பைக்குடன் சேர்த்தே கேடிஎம் நிறுவனம் 250 ட்யூக் பைக்கையும் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதுவும் புதிய தலைமுறை 250 ட்யூக் ஆகும். 250 சிசி சிங்கிள் கூல்டு எஞ்ஜினே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 31 எச்பி மற்றும் 25 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இது முந்தைய தலைமுறையைக் காட்டிலும் 1 எச்பி மற்றும் 1 என்எம் டார்க் அதிகம் ஆகும். இத்துடன், மேலே 390 ட்யூக் பைக்கில் கொடுக்கப்பட்டதைப் போலவே ரைடு-பை-வயர் த்ரோட்டில், ஸ்லிப்பர் கிளட்ச், ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு வசதிக் கொண்ட 5 அங்குல எல்சிடி திரை உள்ளிட்டவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

புதிய 250 ட்யூக் பைக்கின் விலை ரூ. 2.39 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பழைய வெர்ஷனைக் காட்டிலும் வெறும் ரூ. 779 அதிக விலையில் மட்டுமே அது விற்பனைக்க வந்திருக்கின்றது. அதேவேளையில், 390 ட்யூக் பைக்கோ ரூ. 13 ஆயிரம் அதிக விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதற்கு எஞ்ஜின் அப்கிரேஷன், ஸ்டைல் அப்கிரேட் ஆகியவையே காரணமாக இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக ஸ்போர்ட்ஸ் வகை பைக்கை விரும்புவோர் மத்தியில் கேடிஎம் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே கேடிஎம் தன்னுடைய புதுப்பிக்கப்பட்ட மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கும் வரும் நாட்களில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, September 11, 2023, 11:50 [IST]
English summary
Ktm launched new gen 250 duke and 390 duke here is more details
மேலும்... #கேடிஎம் #ktm #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+