அதிக டார்க்கை வெளியேற்றும் சூப்பர் நேக்கட் ரக பைக்.. புள்ளிங்கோ பசங்க கண்ணுல இந்த பைக்க படாம பாத்துக்கோங்க!

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம் (KTM), அதன் 1390 சூப்பர் ட்யூக் ஆர் (1390 Super Duke R) பைக்கை வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் ஸ்டாண்டர்டு வெர்ஷன் ஆகும். இத்துடன், சேர்த்து கேடிஎம் நிறுவனம் 1390 சூப்பர் ட்யூக் ஆர் ஈவோ (1390 Super Duke R EVO) எனும் வெர்ஷனையும் வெளியீடு செய்திருக்கின்றது.

கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் (1290 Super Duke R) மாடலுக்கு மாற்றாகவே தயார் செய்யப்பட்டதே புதிய 1390 சூப்பர் ட்யூக் ஆர் மற்றும் 1390 சூப்பர் ட்யூக் ஆர் ஈவோ ஆகியவை என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

KTM 1390 super duke r revealed

மேலும், இதைக் காட்டிலும் அதிக திறனை வெளியேற்றும் மற்றும் அதிக கவர்ச்சியான வாகனமாகவும் கேடிஎம் அவற்றை தயார் செய்திருக்கின்றது. புதிய 1390 சூப்பர் ட்யூக் ஆர் பைக்கில் அதிக திறனுக்காக எல்சி8 வி-ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் 1,350 சிசி மோட்டார் ஆகும்.

இந்த எஞ்சினில் 110 மிமீ அளவிலான போரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 1290 சூப்பர் ட்யூக் ஆர் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் காட்டிலும் 2 மிமீ கூடுதலானது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்மில் 190 பிஎச்பி பவரையும், 8 ஆயிரம் ஆர்பிஎம்மில் 145 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

KTM 1390 super duke r engine

இந்த திறனை வேறு எந்த நேக்கட் ரக பைக்கிலும் எதிர்பார்க்க முடியாது என கேடிஎம் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், அதிக பவர்ஃபுல் நேக்கட் ரக பைக்காக 1390 சூப்பர் ட்யூக் ஆர் அமைந்துள்ளது. இந்த பைக்கிற்கு அதிக பவரை எதிர்பார்க்கும் நேக்கட் பைக் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பைக்கின் ஏர் பாக்ஸ் மற்றும் ஏர் இன்டேக் ஆகியவையும் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கின்றன. அதாவது, லேசாக இதன் அளவுகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. இதன் அளவு குறைக்கப்பட்ட அதேநேரத்தில், ஃப்யூவல் டேங்கின் அளவு லேசாக அதிகரிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. இதனால், எரிபொருளை நிரப்பும் கொள்ளளவும் உயர்ந்துள்ளது.

KTM 1390 super duke r fuel tank

ஃப்யூவல் டேங்கில் 17.5 லிட்டர் வரை எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும். இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிரேக்கிங் சிஸ்டம், சஸ்பென்ஷன் ஆகியவை 1290 சூப்பர் ட்யூக் ஆர் மாடலிடம் இருந்து அப்படியே பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதேவேளையில், இந்த பைக்கின் எடையைக் குறைப்பதற்காக பல வழிகளில் கேடிஎம் வேலை பார்த்திருக்கின்றது.

பேனல்களின் அடர்த்தியை குறைத்தல் போன்ற நடவடிக்கையையே அது மேற்கொண்டிருக்கின்றது. இதனால், எடைக் குறைந்தது மட்டுமல்ல எஞ்சின் திறன் வெளிப்பாடும் லேசாக உயர்ந்திருக்கின்றது. ஆனால், இதன் உச்சப்பட்ச வேக திறன் எவ்வளவு என்பது பற்றிய விபரத்தை கேடிஎம் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், எரிபொருள் நிரப்பப்படாத நிலையில் அதன் எடை 200 கிலோவாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

KTM 1390 super duke r side view

இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அம்சங்கள் பல 1290 சூப்பர் ட்யூக் ஆர்-உடையதாக இருந்தாலும், இதன் ஹெட்லைட் போன்ற ஒரு சில அம்சங்கள் மட்டும் 990 ட்யூக் (990 Duke)இல் பெறப்பட்டதாக உள்ளது. இந்த அம்சங்களுடன் சேர்த்து டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், ஐந்து விதமான ரைடிங் மோட்கள் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கேடிஎம் கன்னெக்ட் ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், 5 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் வீலி கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற பன்முக அம்சங்களையே 1390 சூப்பர் ட்யூக் ஆர் ஈவோவும் தாங்கி இருக்கின்றது. இதில் முக்கிய மாற்றமாக செமி ஆக்டீவ் டபிள்யூபி சஸ்பென்ஷன் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதனை மேனுவலாக அட்ஜஸ்ட் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தடன், தாழ்வான ஷாக் பைக்கின் பின் பக்கத்தில் ஜிபி வகை பைக்கை போல வழங்கப்பட்டு இருக்கும். இத்துடன், மிக முக்கியமான அம்சமாக ஃபேக்டரி லான்ச் வசதியும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இவற்றுடன், உருவத்தில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக 1390 சூப்பர் ட்யூக் ஆர் ஈவோ-வில் ப்ளூ லைன்கள் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் திறனை வெளியேற்றும் பைக்குகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இதே நிலையே அதிக திறனை வெளியேற்றும் பைக்குகளுக்கு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கேடிஎம் அதன் திறனை வெளியேற்றும் ட்யூக் பைக்கை வெளியீடு செய்திருக்கின்றது. இது விற்பனைக்கு வர இன்னும் மாதங்கள் ஆகலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 29, 2023, 22:35 [IST]
English summary
Ktm revealed 1390 super duke r supernaked bike
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X