என்னங்க பெரிய தலைனு நினைச்சோம்.. இந்த பைக்கே நம்ம கிட்ட இருந்துதான் அமெரிக்காவுக்கு போகபோகுதா!!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது புதிதல்ல. மாருதி சுஸுகி (Maruti Suzuki) தொடங்கி ரெனால்ட் (Renault) வரை என பல்வேறு முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் இங்கிருந்தே தங்களின் பிரபலமான வாகன மாடல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றன.

இதேபோல், இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்களான ராயல் என்பீல்டு (Royal Enfield) மற்றும் டிவிஎஸ் (TVS) முதலிய நிறுவனங்களும் டூ-வீலர்களை உலக நாடுகளுக்கு இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றன. வெளி நாடுகளில் இந்திய தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதன் விளைவாகவே வாகன உற்பத்தியாளர்கள் அதிகளவில் வாகனங்களை வெளிநாடுகளுக்கு நம் நாட்டில் ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றன.

KTM to launch made in india duke bikes in us

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம் (KTM), அதன் இரு புகழ் பெற்ற பைக் மாடல்களை இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 250 ட்யூக் (250 Duke) மற்றும் 390 ட்யூக் (390 Duke) ஆகிய பைக் மாடல்களையே அது அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இரண்டும் நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் மாடல்கள் ஆகும். கேடிஎம் அதன் பைக்குகள் அனைத்தையும் பஜாஜின் சக்கன் உற்பத்தி ஆலையில் வைத்தே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், 250 ட்யூக் மற்றும் 390 ட்யூக் ஆகிய இரண்டு பைக்குகளும்கூட பஜாஜ் ஆலையில் வைத்தே தயாரிக்கப்படுகின்றன.

இவையே விரைவில் மேக்-இன் இந்தியா டூ-வீலர்களாக அமெரிக்கர்களின் பயன்பாட்டிற்காக ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. சமீபத்திலேயே இந்த இரண்டு பைக் மாடல்களையும் கேடிஎம் நிறுவனம் மிகப் பெரிய அப்டேட்டிற்கு உட்படுத்தி விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையிலேயே உலக நாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் முயற்சியில் கேடிஎம் களமிறங்கி இருக்கின்றது.

அப்டேட்டின் அடிப்படையில் புதிய அம்சங்கள் பல சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அதுதவிர, அதன் லுக்கிலும் லேசான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. புதிய 390 ட்யூக் பைக் இந்தியாவில் ரூ. 3.11 லட்சம் விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

புதிய தலைமுறை மாடலாகவே இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கில் அப்கிரேட் செய்யப்பட்ட ஒன்றில் 399 சிசி சிங்கிள் சிலிண்டர், டிஓஎச்சி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. முந்தைய மாடலில் 373 சிசி சிங்கிள் சிலிண்டர், டிஓஎச்சி லிக்யூடு கூல்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய எஞ்சின் அதிகபட்சமாக 45.37 சிசி பிஎச்பி பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 39 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். சஸ்பென்ஷனை பொருத்தவரை புதிய 390 ட்யூக் பைக்கில் ரீ-பவுண்ட் அட்ஜெஸ்ட்மென்ட் செட்-அப் மற்றும் ப்ரீ லோடு ஆகிய வசதிக் கொண்ட சஸ்பென்ஷன்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் முன் பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, ரைடு-பை-ஒயர் த்ரோட்டில், ஸ்லிப்பர் கிளட்ச், டிராக்சன் கன்ட்ரோல், பன்முக ரைடு மோடுகள், கார்னரிங் ஏபிஎஸ், சூப்பர் மோட்டோ ஏபிஎஸ், டிராக் ஸ்கிரீன், லான்ச் கன்ட்ரோல், ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு வசதிக் கொண்ட 5 அங்குல டிஎஃப்டி திரை உள்ளிட்டவை 390 ட்யூக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலே பார்த்த அனைத்தும் கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் சிறப்புகள் ஆகும். இதேபோல், 250 ட்யூக் பைக்கும் அதிக சிறப்புகளைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 31 எச்பி மற்றும் 25 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 250 சிசி சிங்கிள் கூல்டு எஞ்ஜினே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது முந்தைய தலைமுறையைக் காட்டிலும் 1 எச்பி மற்றும் 1 என்எம் டார்க் அதிக திறன் ஆகும். இத்துடன், ரைடு-பை-வயர் த்ரோட்டில், ஸ்லிப்பர் கிளட்ச், ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு வசதிக் கொண்ட 5 அங்குல எல்சிடி திரை உள்ளிட்ட அம்சங்களையும் இந்த பைக்கில் கேடிஎம் வழங்கி இருக்கின்றது. இந்த பைக் இந்தியாவில் ரூ. 2.39 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து விற்பனைக்கு கிடைக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய சிறப்பு வசதிகளுடனேயே 390 ட்யூக் மற்றும் 250 ட்யூக் ஆகியவை அமெரிக்க சந்தையை ஒரு கை பார்க்க பறந்துச் செல்ல இருக்கின்றன. அங்கு என்ன மாதிரியான விலையில் அவை விற்பனைச் செய்யப்படும் என்பது தெரியவில்லை. இருப்பினும், நம் நாட்டைவிட சற்று அதிக விலையிலேயே அங்கு விற்பனைச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 19, 2023, 5:00 [IST]
English summary
Ktm set to launch made in india 250 duke and 390 duke in us soon
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+