டொயோட்டா லேண்ட் க்ரூஸருக்கு சீக்கு வந்தது போல இருக்கு! இந்த காரையும் விட்டு வைக்காம காப்பி அடித்த சீன நிறுவனம்

எந்தவொரு பொருளையும் அசால்டாக டூப்ளிகேட் செய்யும் திறன் கொண்டவர்களாக சீனர்கள் இருக்கின்றனர். இவர்களின் இந்த தனி திறனுக்கு எல்லையே இல்லை என கூறும் அளவிற்கு ஓர் சம்பவத்தை சீன நிறுவனம் ஒன்று தற்போது செய்திருக்கின்றது. டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் மாடலாக லேண்ட் க்ரூஸர் (Land Cruiser) இருக்கின்றது.

இதன் எல்சி 300 வெர்சனையே (Land Cruiser LC300) சீனாவைச் சேர்ந்த ஓர் நிறுவனம் டூப்ளிகேட் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காப்பி செய்யப்பட்ட வெர்சனுக்கு குலுசு (KULUZE) எனும் பெயரையே சீன நிறுவனம் வைத்திருக்கின்றது. காரின் பெரும்பாலான வெளிப்புற தோற்றம் லேண்ட் க்ரூஸரை வெளிக்காட்டும் வகையிலேயே உள்ளது.

குலுசு

குறிப்பாக முகப்பு பகுதி லேண்ட் க்ரூஸரை அப்படியே தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றது. பட்டையான குரோம் கிரில் லேண்ட் க்ரூஸரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதே க்ரில்லே குலுசுவிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. நான்கு பட்டைகளில், இரண்டாவது பட்டையில் டொயோட்டாவின் பேட்ஜ் இடம் பெற்றிருக்கும். இதே யுக்தியே இந்த க்ரில்லிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

அதேவேளையில், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மிகவும் பிரமாண்ட உருவம் கொண்டதாக இருக்கும். ஆனால், இந்த காப்பி வெர்சன் காம்பேக்ட் எஸ்யூவி ஆக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. லேண்ட் க்ரூஸருக்கு சீக்கு வந்து தேகம் வற்றி போனால் எப்படி இருக்கும் அதுபோன்ற ஒன்றாக குலுசு உள்ளது.

குலுசு

இந்த சிறிய தோற்றத்திற்கு ஏற்பவே பாகங்கள் அனைத்தும் சற்று சிறியதாக மாற்றி பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக இதன் பின் பகுதி பாதியாக வெட்டப்பட்டதைப் போல் காட்சியளிக்கின்றது. ஆமாங்க, லேண்ட் க்ரூஸர் பல மடங்கு நீளமானதாக இருக்கும். ஆனால், குலுசுவோ, வேகன்ஆர் சற்று பெரிய உருவத்தில் உருவாக்கப்பட்டு இருந்தால் எப்படி இருக்குமோ, அதைப்போல் இருக்கின்றது.

அதேவேளையில், இதன் உயரம் லேண்ட் க்ரூஸருக்கு இணையானதாக இருக்கின்றது. இதுபோன்று சீன வாகன உற்பத்தி நிறுவனம் லேண்ட் க்ரூஸரை காப்பி அடுத்து வாகனங்கள உருவாக்குவது முதல் முறை அல்ல. ஜிபிடி எனும் நிறுவனம் எல்சி 200 மற்றும் எல்சி 300 ஆகிய கார் மாடல்களைக் காப்பி அடித்து உருவாக்கி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

குலுசு

Image Coutesy: Weibo

இந்த நிலையிலேயே எல்சி 300 குட்டி போட்டதைப் போல் ஓர் கார் மாடலை சீன நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இந்த வாகனத்தை விற்பனைக்கு வருமா என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை இது விற்பனைக்கு வரும் எனில் சீனர்களின் கவனத்தை பெரியளவில் அது ஈர்க்கும்.

லேண்ட் க்ரூஸர் எல்சி300 மிக மிக அதிக விலைக் கொண்டதாக இருக்கின்றது. ஆனால், இந்த குலுசு விற்பனைக்கு வந்தால் அது மலிவு விலையிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீன நிறுவனம் இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் மற்றும் எஞ்ஜினை பயன்படுத்தி இருக்கின்றது என்கிற விபரமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

டொயோட்டா நிறுவனம் மிக சமீபத்திலேயே லேண்ட் க்ரூஸர் எல்சி300 காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அறிமுக விலையாக 2.17 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். டீசல் மோட்டார் தேர்வில் மட்டுமே இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

3.3 லிட்டர் ட்வின் டர்போ வி6 டீசல் மோட்டார் தேர்வில் மட்டுமே எல்சி300 விற்பனைக்குக் கிடைக்கும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 309 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் சர்வதேச சந்தையில் இந்த மோட்டாருடன் சேர்த்து 3.5 லிட்டர் ட்வின் டர்போ வி6 பெட்ரோல் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 415 பிஎஸ் பவரையும், 650 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 7, 2023, 14:19 [IST]
English summary
Kuluze copy of land cruiser copy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+