பஜாஜ் எடுத்துள்ள சரியான முடிவு... மீண்டும் வருகிறது பல்சர் பைக்குகளின் அரசன் - பல்சர் 220எஃப்!! விலை அறிவிப்பு

பஜாஜ் நிறுவனத்தின் அடையாளம் என்றால் அது பல்சர் பைக்குகள் தான். முதன்முதலாக பல்சர் பைக்கை அறிமுகம் செய்ததில் இருந்து பல்வேறு பைக்குகளை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்தாலும் பல்சர் பைக்குகளே நாடு முழுவதும் பரவி காணப்படுகின்றன. எந்த அளவிற்கு என்றால், பஜாஜ் பிராண்டின் பெயர் தெரியாதவர்கள் கூட இருப்பர், ஆனால் பல்சர் பெயரை கேள்விப்படாதவர்களே இல்லை.

அதேநேரம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல்சர் பைக்குகளின் சிசி-கள் வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து மாறிவருகின்றன. அதாவது, பல்சர் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலக்கட்டத்தில் 125சிசி மற்றும் 150சிசி பல்சர் பைக்குகளையே பலர் தேர்வு செய்தனர். ஏனெனில் அந்த சமயத்தில் இவற்றை விட அதிகமான சிசி கொண்ட பல்சர் பைக்குகள் விற்பனையில் இல்லை.

மீண்டும் விற்பனையில் பல்சர் 220எஃப் - விலை எவ்வளவு தெரியுமா?

அதன்பின் 160சிசி, 180சிசி, 200சிசி என 150சிசி-க்கு மேல் சில பல பல்சர் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால் அவற்றின் விற்பனை பெரியதாக சொல்லி கொள்ளும்படியாக இல்லை. இருப்பினும் மனம் தளராத பஜாஜ் நிறுவனம் 220சிசி-இல் புதிய தோற்றத்தில் பல்சர் 220எஃப் என்ற பைக்கை அறிமுகப்படுத்தியது. பல்சர் 220எஃப் சந்தையில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக, டயர்-2 மற்றும் டயர்-3 பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களை இந்த பைக் வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக 220சிசி-ஐ காட்டிலும் அதிக சிசி கொண்ட பல்சர் பைக்குகளுக்கு வாடிக்கையாளர்களை கொண்டு செல்லும் முயற்சியாக என்250 மற்றும் எஃப்250 பைக்குகளை அறிமுகப்படுத்தியது. அதேநேரம் பல்சர் 220எஃப் பைக்கின் விற்பனையையும் பஜாஜ் நிறுவனம் நிறுத்தியது. பல்சர் 220எஃப் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களின் கவனம் என்250 மற்றும் எஃப்250 பைக்குகளின் பக்கம் செல்லும் என்பது பஜாஜின் திட்டமாக இருந்தது.

மீண்டும் விற்பனையில் பல்சர் 220எஃப் - விலை எவ்வளவு தெரியுமா?

ஆனால், விலை ஏற்கக்கூடிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அந்த 250சிசி பல்சர் பைக்குகளை இளைஞர்கள் பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை. இதனால் மீண்டும் தனது பிரபலமான பல்சர் 220எஃப் பைக்கை பஜாஜ் நிறுவனம் கொண்டு வரவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்த பல்சர் பைக்கிற்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பஜாஜ் ஷோரூமில் இருந்து இந்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது. பல்சர் 220எஃப் பைக்குகளை உற்பத்தி செய்யும் பணிகள் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் சாகான் தொழிற்சாலையில் துவங்கப்பட்டுள்ளதால் இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் படிப்படியாக நாடு முழுவதும் உள்ள ஷோரூம்களில் துவங்கப்படும். ஆகையால் கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள பஜாஜ் ஆட்டோ டீலர்ஷிப் ஷோரூமை தொடர்பு கொள்ளவும்.

மீண்டும் விற்பனையில் பல்சர் 220எஃப் - விலை எவ்வளவு தெரியுமா?

இந்த முறை பல்சர் 220எஃப் பைக்கிற்கான ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1,39,686 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தையில் பல்சர் 220எஃப் பைக்கின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் குறைவான விலை ஆகும். தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலை கூட இந்தியாவின் மலிவான 200சிசி+ பைக்காக பல்சர் 220எஃப் -ஐ முன்நிறுத்துகிறது. இந்த பல்சர் பைக்கிற்கு தற்போதுவரையில் சந்தையில் நேரடி போட்டி மாடல் எதுவும் இல்லை.

விலையை வைத்து பார்த்தோமேயானால், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மற்றும் ஹோண்டா ஹார்னெட் 2.0 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள பல்சர் 220எஃப் பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் பற்றிய விபரங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், ட்யூவல்-சேனல் ஏபிஎஸ், ப்ளூடூத் இணைப்பு வசதி உள்பட சில மாடர்ன் வசதிகளை பஜாஜ் வழங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 20, 2023, 14:11 [IST]
English summary
Legend is back bookings starts again for bajaj pulsar 220f
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X