இந்த டூ-வீலர்களை ஓட்ட ஹெல்மெட் மட்டுமல்ல லைசென்ஸ்கூட வேண்டாம்... போலீஸ் புடிச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது!

இந்தியாவில் எந்தவொரு மோட்டார் வாகனமாக இருந்தாலும் அதை பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், அதை பயன்படுத்தும்போது அரசு வழிக்காட்டி இருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் இதை செய்யவில்லை. உதாரணமாக கார்களில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிந்தும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது தலைக் கவசம் அணிந்தும் பயணிக்க வேண்டும்.

இதை மீறும் பட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, கடுமையான அபராதம் விதிக்கப்படும். ஆனால், இந்த விதிகள் குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு பொருந்தாது என்பதை நாம் கவனிக்க வேண்டும். எந்தவொரு வாகனமும் மணிக்கு 25 கி.மீட்டருக்கும்., குறைவான வேகத்தில் பயணிக்கும் எனில் அந்த வாகனத்திற்கு அரசு விதித்திருக்கும் மோட்டார் வாகன சட்டம் பொருந்தாது.

Low speed e-scooters

ஆகையால், அந்த வாகனங்களை பதிவு செய்யத் தேவையில்லை, அதேவேளையில், அதை பயன்படுத்தும்போது தலைக்கவசமும் அணிய தேவையில்லை. ஏதோ ஒரு மாநிலத்தில் மட்டுமே இந்த கடைப்பிடிக்கப்படுவதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இந்த விதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய விதிக்கு பொருந்தக் கூடிய வாகனங்கள் இந்திய சந்தையில் மிக தாராளமாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதாவது அதிக எண்ணிக்கையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றில் டாப் 10 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.

Hop leo

ஹாப் லியோ (Hop Leo): இந்தியாவில் இயக்குவதற்கு லைசென்ஸ், பதிவு சான்று தேவைப்படாத வாகனங்களில் இதுவும் ஒன்று ஆகும். இந்த வாகனத்தின் அதிகபட்ச வேகமே மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். இந்த வாகனத்தில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும்.

இதன் ஆரம்ப விலை ரூ. 81,999 ஆகும். வேகமும் குறைவு, ரேஞ்ஜூம் குறைவு எதுக்கு இவ்ளோ அதிக விலைனு கேக்குறீங்களா... பிரீமியம் தர அம்சங்கள் நிறைந்த வாகனம் இது என்பதால் விலை சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. பார்க்கிங் சென்சார், திருட்டை தவிர்க்கும் அலாரம் மற்றும் டிராக்கிங் உள்ளிட்ட அம்சங்களை ஹாப் லியோ கொண்டிருக்கின்றது.

Hero electric optima e2

ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா இ2 (Hero Electric Optima e2): ஹீரோ நிறுவனத்தின் சூப்பரான மற்றும் குறைவான வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இது இருக்கின்றது. இதில் குறைவான வேகத்தில் பயணிப்பதற்காக 250வாட் மோட்டார் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் அதிகபட்ச வேகமே மணிக்கு 25கிமீ ஆகும். இதன் விலை ரூ. 61 ஆயிரம் ஆகும். ஓர் முழு சார்ஜில் 65 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

Lohia oma star li

லோஹியா ஓமா ஸ்டார் எல்ஐ (Lohia Oma Star Li): இந்தியாவில் விற்பனைக்குக் குறைவான வேகத்தில் செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்றாகும். இதன் விலை ரூ. 51 ஆயிரம் ஆகும். இதையும் பதிவு செய்ய தேவையில்லை, மேலும், இதை ஓட்ட டிரைவிங் லெசன்ஸும் தேவையில்லை. ஓர் முழு சார்ஜில் 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

Hero electric flash lx

ஹீரோ எலெக்ட்ரிக் ஃப்ளாஷ் எல்எக்ஸ் (Hero Electric Flash LX): ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மற்றுமொரு குறைந்த வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட இ-ஸ்கூட்டராக இது இருக்கின்றது. இதன் விலை ரூ. 59 ஆயிரம் ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 85 கிமீ ரேஞ்ஜை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும்.

Okinawa r30

ஒகினவா ஆர்30 (Okinawa R30): இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஒகினவா இருக்கின்றது. இதன் குறைவான வேகத்தில் இயங்கக் கூடிய ஓர் தயாரிப்பாக ஆர்30 இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடே மணிக்கு 25 கிமீ ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த வாகனத்தின் விலை ரூ. 61,998 ஆகும்.

Gemopai miso

ஜெமோபாய் மிஸோ (GemoPai Miso): ஜெமோ பாய் மிஸோ இந்தியாவின் வித்தியாசமான தோற்றம் கொண்ட குறைந்த வேக இ-வாகனம் ஆகும். இந்த வாகனத்தில் ஓர் முழு சார்ஜில் 75 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் அதிகபட்ச விலையே ரூ. 44 ஆயிரம் மட்டுமே ஆகும். நகர்புற பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக இது காட்சியளிக்கின்றது.

ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா எல்எக்ஸ் (Hero Electric Optima LX): குறைவான வேகத்தில் செல்லும் அழகிய எலெக்ட்ரிக் டூ-வீலராக இது இருக்கின்றது. இதன் விலை ரூ. 51,440 ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 85 கிமீ வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும்.

Ampere reo elite electric scooter

ஆம்பியர் ரியோ லைட் (Ampere Reo Lite): ஆம்பியர் நிறுவனத்தின் மிக சூப்பரான தயாரிப்பாக இது இருக்கின்றது. இந்த வாகனத்தை தினசரி அலுவலகம் சென்று வரும் நகரவாசிகளுக்கு ஏற்றதாக ஆம்பியர் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இதன் விலை ரூ. 60,490 ஆகும். இரு விதமான வேரியண்டுகள் மற்றும் நான்கு விதமான நிற தேர்வுகளில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Okinawa lite

கோமகி எக்ஸ்ஜிடி கேஎம் (Komaki XGT KM) மற்றும் ஒகினவா லைட் (Okinawa Lite): இவையிரண்டும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த வேகத்தில் பயணிக்கும் மின்சார இருசக்கர வாகனங்களாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றின் அதிகபட்ச வேகமே மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். கோமகி ரூ. 56 ஆயிரத்திற்கும், ஒகினவா ரூ. 66 ஆயிரத்திற்கும் விற்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்தும் குறைவான வேகத்தில் மட்டுமே இயங்கக் கூடிய இ-வாகனங்கள் ஆகும். இதில் அதிக வேகத்தில் பயணிக்க முடியாது. மேலும், விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். வரிகள் சேர்க்கப்பட்ட பின்னர் இதன் விலை இன்னும் கூடுதலாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 30, 2023, 17:48 [IST]
English summary
License and vehicle registration no need for these electric two wheelers
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X