ஒரு முறை டேங்கை ஃபுல் பண்ணா 700 கிமீ போகும் பைக்குகளின் லிஸ்ட்.. மொத்தமா 6 பைக்குகள் விற்பனைக்கு கிடைக்குது!
அதிகம் மைலேஜை தரும் வாகனத்தை யாருதான் விரும்ப மாட்டார்கள். முக்கியமாக மைலேஜை விரும்பாதவர்களைப் பார்ப்பதுதான் மிகவும் அரிதானது. குறிப்பாக, நம்ம ஆட்கள் (இந்தியர்கள்) பெரும்பாலானோர் மைலேஜிற்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இத்தகைய மனநிலையைக் கொண்டவர்கள் இந்தியர்கள் என்கிற காரணத்தினாலேயே வாகன உற்பத்தியாளர்கள் அதிகம் மைலேஜை தரும் வாகனங்களைக் களமிறக்குவதில் கூடுதல் முக்கியத்துவம் செலுத்துகின்றனர்.
ஆகையால், இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் வாகனங்கள் மிக தாராளமாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களின் லிஸ்ட்டில் இருந்து குறிப்பிட்ட சில இருசக்கர வாகனங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இந்த பைக்குகளில் ஒரு முறை முழுமையாக பெட்ரோலை நிரப்பினால் முழுமையாக 700 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. வாருங்கள் இந்த அதிகம் மைலேஜ் தரும் பைக்குகளின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

பஜாஜ் சிடி100 (Bajaj CT100): இந்த பைக் இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் பைக் மட்டமில்லைங்க, மிக மிக விலைக் குறைவான பைக்கும் ஆகும். பஜாஜ் சிடி 100 இந்தியாவில் ரூ. 55,366 க்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 70 கிமீ முதல் 90 கிமீ வரையில் மைலேஜ் தரும் திறன் கொண்டது.
மிக சிறந்த பராமரிப்பிலேயே இதன் உச்சபட்ச மைலேஜ் திறனான 90 கிமீட்டரை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இந்த மைலேஜ் திறனை வைத்து பார்த்தால், இந்த பைக்கின் ஃப்யூவல் டேங்க் கெபாசிட்டி 10.5 லிட்டர் ஆகும். இதை முழுமையாக நிரப்பினால் 900 கிமீ வரை ரேஞ்ஜை தாராளமாகப் பெற்றுக் கொள்ள முடியும். குறைந்தபட்சம் 700 கிமீ வரையிலான மைலேஜையாவது நம்மால் பெற்றுக் கொள்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் (Hero Splender Plus): இந்தியர்களின் ஃபேவரிட் பைக் மாடலாக ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் இருக்கின்றது. இதன் விலை ரூ. 79,405 ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 83.2 கிமீ வரையில் தரும். இந்த பைக்கின் டேங்க் கெபாசிட்டி 9.8 லிட்டர் ஆகும்.
இதன்படி பார்த்தால் ஃபுல் டேங்க் பெட்ரோலில் இந்த பைக் 815 கிமீ வரை மைலேஜ் தரும். அந்த அதீத மைலேஜ் திறனை பெற்றுக் கொள்ள வேண்டும் எனில் சில தியாகங்களை நாம் செய்ய வேண்டும். குறிப்பாக, குறைவான வேகத்தில் இயக்குதல், டிராஃபிக் சிக்னலின்போது தேவையில்லாமல் பெட்ரோலை விரையமாக்காமல் இருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதனால் ஸ்பிளெண்டர் பிளஸ்ஸின் உச்சபட்ச மைலேஜ் திறனை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
ஹோண்டா எஸ்பி125 (Honda SP125): ஹோண்டா நிறுவனத்தின் மிக சிறந்த பைக் மாடலாக ஹோண்டா எஸ்பி125 இருக்கின்றது. இந்த பைக் ஒரு லிட்டருக்கு 60 கிமீ முதல் 65 கிமீ வரையில் மைலேஜ் தரும். இந்த பைக்கின் ஃப்யூவல் டேங்க் கெபாசிட்டி 11.2 லிட்டர் ஆகும்.
இதன்படி பார்த்தால் ஓர் ஃபுல் டேங்க்கில் 800 கிலோ மீட்டர் தூரம் வரை நம்மால் இந்த பைக்கில் மைலேஜை பெற்றுக் கொள்ள முடியும். ஹோண்டாவின் இந்த அதிகம் மைலேஜ் தரும் பைக்கின் விலை ரூ. 86,012 ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport): டிவிஎஸ் நிறுவனத்தின் மிக மிக அதிக மைலேஜ் தரும் பைக் மாடலாகவும், இந்திய பட்ஜெட் இருசக்கர வாகன பிரியர்களின் ஃபேவரிட் பைக்காகவும் ஸ்போர்ட் காட்சியளிக்கின்றது. இந்த பைக்கின் விலை ரூ. 59,431 ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த பைக் ஒரு லிட்டருக்கு 75 கிமீ வரையில் மைலேஜ் தரும். இந்த பைக்கின் ஃப்யூவல் டேங்க்கின் கொள்ளவு 10 லிட்டர் ஆகும். ஆகையால், டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 750 கிமீ தூரம் வரை நம்மால் டிராவல் செய்ய முடியும்.
ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் (Hero Super Splendor XTEC): ஸ்பிளெண்டரிலேயே அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கிய ஸ்பிளெண்டராக இது காட்சியளிக்கின்றது. இந்த பைக்கின் விலை ரூ. 85,082 ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 1 லட்சத்தை நெருங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த பைக்கில் ஒரு லிட்டருக்கு 68 கிமீ வரை மைலேஜைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இந்த பைக்கின் ஃப்யூவல் டேங்க் கெபாசிட்டி 12 லிட்டர் ஆகும். இதன்படி பார்த்தால் முழு டேங்க் பெட்ரோலில் 816 கிமீ வரை நம்மால் டிராவல் செய்துக் கொள்ள முடியும்.
பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina): மைலேஜுக்கு பெயர்போன பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா இருக்கின்றது. இதனால்தான், டெலிவரி சேவையில் அதிகம் இந்த பைக் மாடல் பயன்படுத்தப்படுகின்றது. இந்த பைக்கின் மைலேஜ் திறன் 73 கிமீ ஆகும். மேலும், இந்த பைக்கின் ஃப்யூவல் டேங்க் கெபாசிட்டி 11 லிட்டர் ஆகும். இந்த பைக்கின் விலையும் சற்று குறைவே ஆகும். ரூ. 67,808 எனும் எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகம் மைலேஜை எதிர்பார்க்கும் நபராக நீங்கள் இருந்தால் மேலே உள்ள பைக்குகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அனைத்தும் பெஸ்ட்டான மைலேஜை வழங்கக் கூடியவை. அதேவேளையில், இவற்றை பட்ஜெட் விலையில் நம் வசமாக்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








